மீன் பிரியரா நீங்கள்..? அப்போ இந்த மீன்களை இனிமேல் சும்மா குடுத்தா கூட வாங்காதிங்க..!

பொதுவாகவே அசைவ பிரியர்கள் அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய மீன் உணவு பற்றிய ஒரு முக்கிய தகவல்களைத்  நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் மீன்னினை உணவில் சேர்ப்பதால் உங்களுக்கு ஒமேகா-3 வைட்டமின் டி மற்றும் பி12 போன்ற ஏராளமான சத்துக்கள் உங்கள் உடலுக்கு கிடைக்கிறது.

 இது உண்மைதான் ஆனால் இன்று நாம் வாங்கி வரும் மீன்களில் அதிக அளவு பாதரசம் என்ற நச்சு கலந்து இருப்பதால் இந்த மீன்களை நீங்கள் தொடர்ந்து சாப்பிடும் போது உங்கள் உடலில் நச்சு கழிவு அதிகமாகி அடிக்கடி நோய்வாய் படக்கூடிய சூழ்நிலை உள்ளது.

 அது மட்டுமல்ல இந்த நச்சுப்பொருள் உங்கள் ரத்தத்தில் பி சி பி என்ற விஷப்பொருளை அதிகரிப்பதால் ஞாபக மறதி ஏற்படக்கூடிய சூழ்நிலை உருவாகும்.

 தற்போதைய ஆய்வின்படி சுறாக்களில் பொதுவாக 0.979 பி பி எம் அளவு சராசரி பாதரச அளவைக் கொண்டுள்ளன இது தற்போது 4.54 பி பி எம் அளவை எட்டி உள்ளதால் சுறா மீன்களை உண்பதை தவிர்த்து விடுங்கள்.

 அதுபோலவே சூரை மீனிலும் அதிகளவு பாதரசம் இருப்பதால் அந்த மீனை நீங்கள் சமைத்து உண்பது உங்களுக்கு அதிக அளவு பாதிப்பை ஏற்படுத்தும்.

 மேலும் வால் மீன்களில் பாதரசத்தின் அளவு அதிகரித்து உள்ளதற்கான ஆதாரம் தற்போது கிடைத்துள்ளது. இதில் சராசரியாக 0.95 பிபிஎம் முதல் 3.22 ppm வரை அதிகளவு பாதரசத்தைக் கொண்டிருப்பதால் இந்த மீன்களை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உண்ண கூடாது.

என்னது சத்துக்கள் நிறைந்த சுறா, சூரை மீனை  இனி உண்ண முடியாதா என்று நீங்கள் உங்கள் கண்களை அகல விரிக்க வேண்டாம். ஏனெனில் இதில் பாதரச அளவு அதிகரித்து உள்ளதால் அடிக்கடி உண்ண வேண்டாம். மாதம் ஒரு முறை உண்டால் போதும்.

 குறிப்பாக கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகள் எடுத்துக் கொள்வதை தவிர்த்து விடுதல் நல்லது அது சரி தினமும் சாப்பிட வேண்டும்.

 சரி அப்ப எந்த மீனை சாப்பிட என நீங்கள் யோசிப்பது புரிகிறது. எனவே பாதரசம் குறைந்த அளவு இருக்கக்கூடிய மீன்களான மத்தி மீன்,  சங்கரா, நெத்திலி, காலா ஊசி கனவா, கிழங்கா, இறால், ஆற்றுநண்டு, அயிரை மீன், ஆற்று மீன், ஜிலேபி போன்ற மீன்களை நீங்கள் எடுத்துக் கொள்வதின் மூலம் இந்த பாதரச பாதிப்பிலிருந்து உங்களை பாதுகாத்துக் கொள்வதோடு உங்கள் வாய்க்கு ருசியான உணவையும் சாப்பிட முடியும்.

எனவே மேற்கூறிய விஷயத்தை உங்கள் மனதில் நன்கு உள்வாங்கிக் கொண்டு அதற்கு ஏற்ப அந்த மீன்களை மட்டுமே சமைத்து சாப்பிட்டால் உங்கள் ஆரோக்கியம்  பாதுகாக்கப்படும் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam