தமிழ் சீரியல்களில் மறக்க முடியாத ஒரு சீரியல், இப்போதும் மக்கள் மனதில் முதலிடத்தில் நிற்கும் சீரியல் என்றால் அது மெட்டி ஒலிதான்.
மெட்டி ஒலி
திருமுருகன் இயக்கத்தில், மெட்டி ஒலி சீரியல் மிக பிரமாதமான, மக்கள் மனங்களில் அதிக வரவேற்பை பெற்ற ஒரு சீரியலாக இருந்தது. குறிப்பாக பெண்கள் மத்தியில் மிகப்பெரிய அபரிமிதமான ஒரு பாராட்டை, விமர்சனத்தை பெற்ற சீரியல் மெட்டி ஒலிதான். அதற்கு பிறகுதான் மற்ற சீரியல்கள் எல்லாம்.
இன்று வரை மெட்டி ஒலி சீரியலை விட சிறப்பான ஒரு சீரியல் என்று எதையுமே சொல்லி விட முடியாது என்கிற அளவுக்கு அந்த சீரியல் மிகப்பெரிய அளவில் மக்கள் மத்தியில் புகழ் அடைந்தது.
5 மகள்கள்
ஒரு பெரியவர், அவரது 5 மகள்கள், அந்த மகள்களுக்கு அவர் செய்து வைக்கும் திருமணங்கள், பெண்கள் வாழப்போகும் இடத்தில் உள்ள மனிதர்கள், அவர்களின் குணநலன்கள் ஆகியவற்றை மையப்படுத்தி எடுத்த இந்த சீரியல், பலவிதங்களில் மக்களின் மனங்களை கவர்ந்தது.
5 பெண்களின் தந்தையாக டெல்லிகுமார் நடித்திருந்தார். சஞ்சீவ், திருச்செல்வம், போஸ் வெங்கட், சேத்தன், காவேரி, வனஜா, விஜி என ஒவ்வொரு கேரக்டரும், சீரியலில் அவர்களுக்கான நடிப்பை தனித்துவமாக வழங்கியிருப்பர்.
விஜி
மெட்டி ஒலி சீரியல் நடிகை வனஜா, சக நடிகையாக மெட்டி ஒலி சீரியலில் நடித்த விஜி குறித்து கூறியதாவது,
அவள் ஆரம்பத்தில் இருந்தே, அவளது உடல் நலம் குறித்து அதிகமாக கவனம் காட்டால் இருந்து விட்டாள். அதனால் அவளை காப்பாற்ற முடியாமல் போய்விட்டது என்ற வருத்தம் எப்போது எங்களுக்கு உண்டு.
இதையும் படியுங்கள்: என்னோட Boy Friend ஐ பாத்தா இப்படி மாறிடுவேன்.. ஓப்பனாக கூறிய சங்கீதா..
மருத்துவமனை என்றால் பயம், ஊசி போடுவது என்றால் பயம், மருத்துவமனைக்கு போலாம் என்றால், கோவித் டைம் என்று பயப்படுவாள்.
காப்பாத்தி இருக்கலாம்
ஒவ்வொரு முறையும் அவளே அவாய்டு பண்ணி அவாய்டு பண்ணி, அந்த நேரத்துல சொல்றதை கொஞ்சம் கேட்டு நடந்திருந்தால், அவளை காப்பாத்தி இருக்கலாம் என்று ஒவ்வொரு நேரமும் நெனைச்சுக்கிட்டே இருப்போம்.
இதையும் படியுங்கள்: பிட்டு சீனில் நடிக்கும் முன்பு இதை பண்ணேன்.. கூச்சமின்றி கூறிய லவ் டுடே இவானா..
அந்த இரண்டு ஆண்டுகள் இந்த விஷயத்தோட நாங்கள் வாழ்க்கையில் பயணிச்சோம். மத்தவங்களுக்கு எல்லாம் இது திடீரென ஆனதாக நினைத்தாலும், எங்களுக்கு முதலில் இருந்தே இது தெரியும். அதனால் தினம் தினமும் அந்த பயம் இருக்கும்.
போன் வந்தால்…
அதனால் காலை 6 மணிக்கு அவள் போனில் இருந்தோ, அவர்கள் வீட்டில் இருந்தோ போன் வந்தால் படபட என்று இருக்கும். இரவு நேரங்களில் போன் வந்தாலும் படபட என்று பயமாக இருக்கும்.
ஏனென்றால் அவளுடைய சிச்சுவேசன் என்ன என்று எங்களுக்கு ஏற்கனவே தெரிந்துவிட்டது. ஆனால் எப்படியும் காப்பாத்திடலாம் என்ற எண்ணத்தில் நாங்கள் இருந்தோம். அது முடியவில்லை என்று கூறியிருக்கிறார் நடிகை வனஜா.
மெட்டி ஒலி விஜி இறப்புக்கு காரணம் அவர் தன் உடல் நலம் மீது அக்கறை காட்டாமல், மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொள்ள பயந்தது தான் என்று கூறியிருக்கிறார் சக நடிகை வனஜா.