புரட்சித்தலைவர் என்று மக்களால் அன்போடு அழைக்கப்படும் நடிகர் எம் ஜி ஆர் என்றாலே மக்கள் அனைவரும் கட்டுண்டு இருப்பார்கள். அந்த அளவு அந்த மூன்று எழுத்து மந்திரம் மக்கள் மத்தியில் இன்று வரை ஒரு தாரக மந்திரமாகவே உள்ளது.
மேலும் எம்ஜிஆர் என்றாலே ஒரு மரியாதை கலந்த பயம் இருக்கும். இது அரசியல் என்றாலும் சரி, சினிமாத்துறை என்றாலும் சரி. எம்ஜிஆர் என்றால் அனைவரும் பயம் கலந்த மரியாதையை கொடுக்க யாரும் தயங்க மாட்டார்கள். அது போல் நடிகர் எம்.ஜி.ஆரும் அனைவரிடமும் மரியாதையாக நடந்து கொள்கின்ற அற்புதமான குணம் படைத்த நபர்.
கால் மேல கால் போட்டு அமர்ந்த நடிகை..
எம்ஜிஆரை பொருத்த வரை கிவ் ரெஸ்பெக்ட் டேக் ரெஸ்பெக்ட் என்ற ரீதியில் மரியாதை தனக்கும் ஒவ்வொரு இடத்திலும் கிடைக்க வேண்டும் என்பதில் தீர்க்கமாக இருந்த நபராக திகழ்கிறார். அந்த வகையில் திரைத் துறையில் இவர் நடித்துக் கொண்டிருக்கும் போது ஸ்டூடியோவில் அவர் கார் வந்துவிட்டாலே அனைவரும் எழுந்து நின்று அவருக்கு மரியாதை செலுத்துவார்கள்.
அது போல தான் அரசியலில் களம் இறங்கி மாபெரும் வெற்றியை பிடித்து தமிழகத்தை ஆண்ட சமயத்திலும் அவர் மீது தனி மரியாதை ஒவ்வொரு அரசியல்வாதிக்கும் மட்டுமல்லாமல் வெகுஜன மத்தியிலும் இருந்தது.
எம்ஜிஆரை யார் பார்த்தாலும் வணக்கம் சொல்லிவிட்டு பிறகு அமரக்கூடிய தன்மை உண்டு. அந்த வகையில் இதை மிகப் பிரபலமான பலரும் ஃபாலோ செய்ததோடு அவர் இருக்கும் வரை தொடர்ந்து வந்தது.
இந்நிலையில் 1962 ஆம் ஆண்டு மாடப்புறா என்கின்ற படத்திற்காக சௌகார் ஜானகி தேர்வு செய்யப்பட்டு இருந்தார். அந்த சூட்டிங் ஸ்பாட்டில் எம்ஜிஆர் வந்தபோது சௌகார் ஜானகி எழுந்து வணக்கம் சொல்லிவிட்டு எம்ஜிஆர் முன்னாள் கால் மேல் கால் போட்டு அமர்ந்து இருக்கிறார்.
எம்ஜிஆர் என்ன செய்தார் தெரியுமா?
இதை சற்றும் எதிர்பாராமல் பார்த்த எம்.ஜி.ஆர் என்ன நினைத்தார்? என்ன செய்தார்? என்று தெரிந்து கொள்ள வேண்டாமா? இவர் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்திருந்த சவுகாரை பார்த்து ஒரு நிமிடம் அதிர்ந்து விட்டார்.
இதனை அடுத்து எம்ஜிஆர் தன் பக்கத்தில் நின்று கொண்டிருந்த எம்ஆர் ராதாவை அழைத்து இந்த பெண் செய்வது எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை என்று கூறி இருக்கிறார். அத்தோடு மரியாதை கொஞ்சம் கூட இல்லாமல் நான் இருக்கும் போதே கால் மேல் கால் போட்டு உட்கார்ந்திருக்காங்க என்று எம் ஜி ஆர் சொல்லி இருக்கிறார்.
எம் ஆர் ராதா என்ன சொன்னார் தெரியுமா?
இதைக் கேட்டுக் கொண்டிருந்த எம்ஆர் ராதா அவர் வாயில் அந்த அம்மா இங்கிலாந்துல பிறக்க வேண்டியவங்க என்று நகைச்சுவை தழும்பக் கூடிய வகையில் பேசினார். அதுமட்டுமல்லாமல் அவர் உண்மையிலேயே மிகச்சிறந்த பெண் என்று எம்ஜிஆரிடம் பேசி இருக்கிறார்.
இவர் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் எம்ஜிஆருக்கு சமாதானம் ஆகாததால் சௌகார் ஜானகியை அந்த படத்தில் இருந்து தூக்கி விட்டார். இந்த விஷயத்தை அதுவும் தன்னை அந்த திரைப்படத்தில் நடிக்க விடாமல் நீக்கிய விஷயத்தை எந்த ஒரு ஈகோ இல்லாமல் சவுகார் ஜானகி கூறியிருக்கிறார்.
ஆனால் இன்று இருக்கும் நடிகைகளை நினைத்துப் பாருங்கள். இப்படி ஓப்பனாக இது போன்ற விஷயங்களை ஈகோ பார்க்காமல் பகிர்வார்களா? என்பது சந்தேகம்தான். எனவே ஓல்ட் இஸ் கோல்ட் என்பது என்றுமே சொல்லக்கூடிய நிரந்தர பழமொழி என்பதை ஒப்புக்கொண்டாக வேண்டும்.
இதை அடுத்து இந்த விஷயத்தை கேள்விப்பட்டு எம்ஜிஆர் கூட இப்படி எல்லாம் நடந்து கொள்வாரா? என்று வியப்பின் உச்சிக்கு சென்றிருக்கும் ரசிகர்கள் இந்த விஷயத்தை அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து இணையத்தில் அதிக அளவு பார்க்கப்படும் விஷயமாக மாற்றி விட்டார்கள்.