ரஜினியை பார்த்து மெய்யாலுமே பயந்த எம்.ஜி.ஆர்? – முக்தா ரவி கூறிய விவகாரமான விஷயம்..

தமிழ் திரை உலகில் என்றுமே நிலைத்த சூப்பர் ஸ்டாராக விளங்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பற்றி சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. சூப்பர் ஸ்டார் யார் என்று கேட்டால் சின்ன குழந்தையும் சொல்லக்கூடிய அளவு இவர் பல படங்களில் நடித்து தனது அபார திறமையை வெளிப்படுத்தியவர்.

70 வயதை கடந்துவிட்ட நிலையிலும் சினிமா உலகில் சிறப்பான சம்பவங்களை செய்து வரும் சூப்பர் ஸ்டார் அண்மையில் ஜெயிலர் படத்தில் சிறப்பாக நடித்து தற்போது வேட்டையன் அதைத் தொடர்ந்து கூலி என பல்வேறு படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டு இருக்கிறார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்..

இதுவரை தமிழ் திரை இல் பல்வேறு படங்களில் நடித்திருக்கும் ரஜினிகாந்த் பற்றி உங்களுக்கு அதிகமாக சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இவர் நடித்த நடிப்பை பார்த்து மக்கள் மக்கள் திலகம் எம்ஜிஆர் பயந்து போன ஒரு சம்பவத்தை பற்றி பிரபலம் ஒருவர் கூறியிருக்கிறார்.

தமிழில் சுமார் 50 படங்களுக்கு மேல் இயக்கி 20 படங்களை தயாரித்து இருக்கும் முத்தா ஸ்ரீனிவாசனுடைய மூத்த மகன் சில கருத்துக்களை சொல்லி இருக்கிறார்.

அந்த வகையில் அண்மை பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட முத்தா ரவி அவர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பட வசூலை பார்த்து எம்ஜிஆரே மிரண்டு பயந்து விட்டதாக சொல்லி இருக்கிறார்.

அவர் எந்த படத்தின் வசூலை பார்த்து பயந்து போனார் என்பது பற்றி விரிவாக இந்த பதிவில் நீங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்.

ரஜினியின் பட வசூலை பார்த்து பயந்த எம்ஜிஆர்..

1957-ஆம் ஆண்டு வெளி வந்த அலாவுதீனும் அற்புத விளக்கும் படத்தின் மூலம் டைரக்டராக திரையுலகில் தனது கேரியரை துவங்கிய முக்தா ஸ்ரீனிவாசன் ஏவிஎம் தயாரிப்பில் வெளி வந்த முதலாளி திரைப்படத்தில் இயக்குனராக களம் இறங்கினார்.

இதனை அடுத்து தாமரைக் குளம், நாலு வேலி நிலம், ஓடி விளையாடு பாப்பா போன்ற படங்களை இயக்கியதை அடுத்து இவர் ஜெமினி கணேசன் மற்றும் சிவாஜி கணேசனை நடிக்க வைத்து பல வெற்றி படங்களை தந்திருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் இடைப்பட்ட காலத்தில் இதயத்தில் தீ நிறைகுடம் அருணோதயம் தவப்புதல்வன் அன்பை தேடி அந்தமான் காதலி பொல்லாதவன் போன்ற படங்களை தயாரித்த இவர் முன்னாள் முதல்வர் மக்கள் திலகம் நடிகர் எம்ஜிஆர்-க்கு மிகவும் நெருக்கமானவர்.

அதிரடியில் கலக்கிய ரஜினிகாந்த்..

இந்நிலையில் அந்த சமயத்தில் அதிரடி படங்களிலும் ஆக்சன் படங்களிலும் ரஜினிகாந்த் நடித்து ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடிக்க ஆரம்பித்து இருந்தார்.

அப்போதுதான் ஏவிஎம் தயாரிப்பில் 1980 ஆம் ஆண்டு ரஜினி நடித்த முரட்டுக்காளை படம் வெளிவந்தது இந்த படத்தை காண ரசிகர்கள் கூட்டம் அலைமோதியதாக சொல்லப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல் அப்போதே ரசிகர்கள் 200 ரூபாய் 300 ரூபாய் அளவு செலவு செய்து டிக்கெட் வாங்கி இந்த படத்தை பார்த்ததை அடுத்து எம்ஜிஆருக்கு எந்த படத்தின் வசூல் குறித்து விவரம் தெரியவர முட்டாள் சீனிவாசனை அழைத்து முரட்டுக்காளை படம் என்ன எப்படி கலெக்சன் ஆகுது நம்ம படங்கள் கூடி இப்படி ஆகலையே என்று கேட்டிருக்கிறார்.

அது மட்டுமல்லாமல் என்ன பின்னுக்கு தள்ளுகின்ற அந்த ஆளு யாரு என ஒரு வித பயத்துடன் பேசியதாக முக்தார் ரவி கூறி இருக்கிறார் இந்த விஷயமானது தற்போது இணையத்தில் படு வேகமாக பரவி ரஜினிகாந்தின் முரட்டுக்காளை பார்த்து எம்.ஜி.ஆரின் மிரண்டு விட்டாரா என்று ரசிகர்கள் ஆச்சரியத்தில் அப்படியே உறைந்து போய் இருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version