மைக்ரோ நுனியில் தற்கொலை.

20-ம் நூற்றாண்டின் மத்தியில் உலகையே நடுங்க வைத்த ஹிட்லரின் ரத்த சரித்திரம், 1946 ஏப்ரல் 30 அன்று முடிவுக்கு வந்தது. மாபெரும் சர்வாதிகாரி ஹிட்லர் நேச நாட்டுப் படைகளிடம் ஜெர்மனி தோல்வியடைந்த போது மனைவி இவா பிரானுடன் தற்கொலை செய்து கொண்டார் என்கிறது சரித்திரம்.

இதனை இங்கிலாந்தைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் ஜெர்ராட் வில்லியம்ஸ் மறுத்ததுடன் ஓரு பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.

 ஹிட்லரின் பதுங்கு குழியை சுற்றி வளைத்த ரஷ்யப் படை யினர் அவர் இறந்ததாக அதே ஆண்டு 1945 அன்று இறந்ததாக அறிவிக்க வில்லை. மாறாக ஆயிரத்து 1968 ல் தான் அவர் அதிகாரப்பூர்வமாக தற்கொலை செய்துகொண்டார் என்ற அறிவிப்பு  வெளியிட்டது.

அதிகாரப்பூர்வமான தகவல் வந்த பின்னும் அமெரிக்க அரசு அவர்களின் உளவாளிகளை கொண்டு ஹிட்லரை உலகம் முழுவதும் வலை வீசி தேடி வந்தார்கள். எதற்காக? என்ற கேள்வி எழுப்பியதோடு  பதுங்கு குழியில் எரிக்கப்பட்ட உடல்கள் ஹிட்லர் மற்றும் அவருடைய மனைவி இவா பிரானுடையது இல்லையாம்.

இவர்களைப் போல் உருவம் கொண்ட ஒருவரை கொன்று ஹிட்லரின் சகாக்கள் அதனை எரித்து உலகை நம்ப வைத்துள்ளார்கள். இதற்கு மூளையாக இருந்தவர் ஹிட்லரின் உதவியாளர் மார்டின் பார்மனின்.

தனது கனவில் கூட நினைத்துப் பார்க்கவில்லை. தனது 56 வது பிறந்த நாளை பதுங்கு குழியில் கொண்டாடுவார்கள் என்று.பெர்லினுக்கு மிக அருகில் ரஷ்யப்படைகள். அதிபர் மாளிகை மூடப்பட்டு பதுங்கு அறைக்குள் வந்தாயிற்று.பெர்லினை விட்டு வெளியேறும் படி ராணுவ அதிகாரிகள் கேட்டுக் கொண்டதை ஹிட்லர் நிராகரித்து விட்டார்.

கடைசி நேரத்தில் அவரது மனைவியான நீண்ட நாள் தோழி ஈவா ப்ரானுடன் தேநீர் அருந்தினார்.மிகவும் அமைதியாக இருந்தார்.

அந்த சமயத்தில் ராணுவ ஜெனரல் ‘ பக்டாஃப் ‘ வந்து ஜெர்மனியின் அனைத்து வாயில்கள் வழியாகவும் எதிரி படைகள் பெர்லின் உள்ளே நுழைந்து விட்ட கடைசி தகவலைக் கவலையுடன் தெரிவித்தார்.

உடனடியாக அரசாங்க ரகசியங்கள் அடங்கிய அனைத்தையும் அழிக்க உத்தரவிட்டார். தனது நண்பரான ஜோசப் கெப்பல்ஸிடம் , தன்னையே நம்பி இருக்கும் தனது காதலி ஈவாவை திருணம் செய்ய உதவும்படி கேட்டக்கொண்டார்.ஏப்ரல் 29 தனது பதுங்கு குழியிலேயே எளிய முறையில் திருமணம் அவரின் அந்தரங்க செயலாளர் முன்னிலையில் நடந்தது. 

நிலைமை மோசமாவதை உணர்ந்து அவர் தனது உடல் கூட எதிரியின் கையில் சிக்க கூடாது என்பதில் உறுதியாக இருந்தார்.இதன்பின் வெளியே வந்தவர் தனக்காக காத்திருந்த அவர்களிடம் கைகுலுக்கி விட்டு இத்தனை காலமும் தனக்கு விசுவாசமாக பணியாற்றி யவர்களுக்கு  நன்றி கூறினார். 

பின் தனது மருத்துவரை அழைத்து தன்னுடைய விசுவாசமான செல்லப்பிராணி நாய்க்கு விஷமருந்து அளிக்கும்படி கேட்டுக் கொண்டார். அதன் பின் சிறிது நேரம் தன் மனைவியின் மார்பில் முகம்புதைத்து அழுதார். பின் ஆசை மனைவி வலியில்லாமல் இறப்பதற்காக சயனைடு விஷத்தை அவள் வாயில் வைத்தார்.

பின்  உலகத்தையை மிரட்டிய சர்வாதிகார சக்கரவர்த்தி தனது நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்து மைக்ரோ நிமிடத்தில் அழுத்தி …. உலகமே பார்த்து பயந்த ஒரு மாவீரர் ஆம் ஏப்ரல் 30 1945 ல் தற்கொலை செய்து கொண்டார்.

  

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …