“வீடு மணக்கும் புதினா சாதம்..!” – இப்படி செய்தா பருக்கை சாதமும் மிஞ்சாது..!!

தினமும் சாம்பார், குழம்பு, ரசம் என்று வகை வகையாக வைத்து சாப்பிட்டு போர் அடித்தவர்கள் கட்டாயம் இந்த சாதத்தை செய்து சாப்பிட்டால் உங்களுக்கு விருப்பமான சாதமாக மாறிவிடும்.

 மேலும் கலவை சாதத்தில் தக்காளி சாதம், வெஜிடபிள் பிரியாணி போன்றவற்றை சாப்பிட்டு போர் அடித்தவர்களுக்கு இந்த புதினா சாதம் புத்துணர்வை அள்ளிக் கொடுக்கும் சாதமாக இருக்கும்.

புதினா சாதம் செய்ய தேவையான பொருட்கள்

1.இஞ்சி ஒரு துண்டு

2.15 பல் பூண்டு

3.பச்சை மிளகாய் 4

4.பட்டை ஒரு துண்டு

5.பிறிஞ்சி இலை ஒன்று

6.கிராம்பு இரண்டு

7.ஏலக்காய் 2

8.மல்லி மொட்டு இரண்டு

9.தயிர் 50 மில்லி

10.புதினா இலை ஒரு கட்டு

11.முந்திரி 10

12.அரிசி 200 கிராம்

13.எண்ணெய் இரண்டு டேபிள் ஸ்பூன்

14.நெய் ஒரு டேபிள் ஸ்பூன்

செய்முறை

 முதலில் இஞ்சி பூண்டு இவற்றை மிக்ஸி ஜாரில் போட்டுக் கொள்ளவும். இதனோடு கழுவி வைத்திருக்கக் கூடிய புதினா இலை மற்றும் 50 மில்லி தயிரை சேர்த்து நன்கு மைய அரைத்துக் கொள்ளவும்.

 இந்த கலவையை ஒரு பவுலில் மாற்றி வைத்துக் கொள்ளுங்கள். இனி அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு பிரஷர் குக்கரையோ அல்லது பிரஷர் பேனையோ வைத்து எண்ணெய் மற்றும் நெய்யை விட்டு லேசாக சூடேற்றவும் சூடான பின் எண்ணெயில் பிரிஞ்சி இலை, ஏலக்காய், பட்டை, மல்லி மொட்டு போன்றவற்றை போட்டு லேசாக வறுத்து விடவும்.

 இதனை அடுத்து முந்திரிப் பருப்பு பத்தினை அதில் போட்டு விடவும் இனி நீங்கள் அரைத்து வைத்திருக்கும் மசாலா கலவையை இதில் கொட்டி விடுங்கள். இந்தக் கலவை நன்கு கலந்து எண்ணெய் பிரிந்து வரும் சமயத்தில் நீங்கள் எடுத்து வைத்திருக்கும் அரிசிக்கு தேவையான அளவு தண்ணீரை கலந்து விடுங்கள்.

 இப்போது அதற்கு தேவையான அளவு உப்பையும் போட்டு விடுங்கள். சுவைக்காக வேண்டுமென்றால் கரம் மசாலாவை நீங்கள் சேர்த்துக் கொள்ளலாம். இதனை அடுத்து இது ஒரு கொதி வந்தவுடன் எடுத்து வைத்திருக்கும் அரிசியை களிந்து இதில் போட்டுவிட்டு குக்கரை மூடி விடுங்கள்.

 இரண்டு விசில் வந்த பிறகு எடுத்துப் பாருங்கள் உதிரி உதிராக வீடு மணக்கும் புதினா சாதம் ரெடி.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …