ரஜினி படத்தில் நடிக்க வேண்டும், கமல் படத்தில் நடிக்க வேண்டும், இயக்குநர் பாரதி ராஜா படத்தில் நடிக்க வேண்டும், இயக்குநர் மணிரத்னம் படத்தில் நடிக்க வேண்டும் என்று பல நடிகர், நடிகையர் நேர்காணலின் போது சொல்லக் கேட்டிருப்போம்.
இப்போது அந்த வரிசையில் நடிகர் விஜய், நடிகர் அஜீத், இயக்குநர் வெற்றிமாறன், இயக்குநர் பாலா போன்றவர்களும் சேர்ந்து விட்டனர்.
பலரது கனவாக…
ஏனென்றால் திரை இயக்குநர்களாக சாதித்த இயக்குநர்கள், சினிமா நடிகர்களாக சாதித்தவர்களுடன் நடிப்பது என்பது பலரது கனவாக, ஆசையாக இருக்கிறது.
அதனால் இதுபோன்ற பெரிய நடிகர்களின், பெரிய இயக்குநர்களின் படங்களில் நடித்தால் பெயரும், புகழும் கிடைக்கும்.
ஆனால் அந்த படங்களில் நடிப்பவர்களுக்கு சம்பளம் பெரியதாக இருக்காது.ஏன் சில படங்களில் நடித்தால் சம்பளமே இருக்காது.
அந்த நடிகருடன் நடித்தேன், அந்த இயக்குநர் படத்தில் நடித்தேன் என பெருமையாகவும் சொல்லிக்கொள்ளலாம்.
ஆனால் அதே வேளையில், அந்த படங்களில் நடித்ததன் வாயிலாக அடுத்தடுத்த முக்கிய படங்களில் நடிக்க வாய்ப்பு கிட்டும். பெயரும் செல்வாக்கும் தமிழ் சினிமாவில் அதிகரிக்கும்.
அதனால்தான் பிற மொழி படங்களில் பிரபலமாக இருக்கும் நடிகர், நடிகையர் கூட தமிழ் சினிமாவில் நடிக்க அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
ஏனெனில் தமிழ் சினிமாவில் ஒரு அடையாளம் கிடைத்து விட்டால், அடுத்து தங்களது எதிர்காலம் சிறப்பாக மாறிவிடும் என்ற எண்ணம்தான் அதற்கு காரணம்.
ஜெயிலர் படத்தில்…
அப்படித்தான் நெல்சன் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படத்தில், ரஜினியின் மருமகளாக நடித்திருந்தார் மிர்னா மேனன்.
தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் மிர்னா மேனன்.
மிர்ணா மேனன்
கடந்த 2016ம் ஆண்டில் பட்டதாரி என்ற படத்தில் நடித்து மிர்னா மேனன் தமிழ் படத்தில் அறிமுகமானார். தொடர்ந்து 2020ம் ஆண்டில் சித்தி இயக்கிய பிக்பிரதர் என்ற மலையாள படத்தில் அறிமுகமானார்.
பிக் பிரதர் படத்தில், நடிகர் மோகன்லாலுடன் நடிக்கும் வாய்ப்பை மிர்னா மேனன் பெற்றார். கலையரசனுடன் புர்கா என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தார்.
தொடர்ந்து சில தெலுங்கு, மலையாளம் படங்களில் நடித்து வருகிறார். இவர் ஜி5 ஓடிடி தளம் ஒன்றில் அனந்தம் என்ற வெப் சீரிஸ் நடித்திருக்கிறார்.
நயன்தாரான்னு நினைச்சிட்டோம்..
ஜெயிலர் படத்தின் நடிகர் ரஜினிகாந்தின் மருமகள் கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகை மிர்னா மேனன், சமீபத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ஒரு நிமிடம் இது நயன்தாரான்னு நினைச்சிட்டோம் என்று கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.