நடிகை மிருணாளினி ரவி தமிழில் சமூக வலைதளங்களில் தன்னுடைய நடிப்பு மற்றும் நடன திறமையை வெளிப்படுத்தி இணையவாசிகள் மத்தியில் பிரபலமானார்.
யாருப்பா இந்த பொண்ணு தமிழ் சினிமாவில் ஹீரோயினாக நடிக்கலாம் போல இருக்கே என்று பலரும் கருத்துக்களை தெரிவித்தனர்.
அதுபோல திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. தொடர்ந்து தமிழ் தெலுங்கு என திரைப்படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார் நடிகை மிருணாளினி ரவி.
பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்க தயாராக இருக்கும் இவர் அவ்வப்போது இணைய பக்கங்களில் கிளாமரான புகைப்படங்களை வெளியிடுவது வாடிக்கை.
இடையில் நடிகர் விஷால் நடிப்பில் வெளியான எனிமி திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். இந்த படத்தில் இடம்பெற்ற டம் டம் என்ற பாடல் பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்தது.
இதற்கு முக்கிய காரணம் பாடல் உடைய Vibe என்றாலும் கூட இந்த பாடல் வீடியோ காட்சிகளும் இணையத்தில் வைரலாகின.
நடிகை மிருணாளினி ரவியின் நடனம் ரசிகர்களால் கவரப்பட்டது. அளவான கவர்ச்சி தரிக்கும் உடை அணிந்து கொண்டு தன்னுடைய உடலை அசைத்து ஆட்டம் போட்ட மிருணாளினி ரவியை பார்த்து ரசிகர்கள் கிறங்கித்தான் போனார்கள்.
இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட மிருணாளினி ரவி டம் டம் பாடல் வைரலாகும் அளவுக்கு நான் என்ன செய்து விட்டேன் என்று எனக்கு தெரியவில்லை.
ஒரு வேலை பாடலுடைய வைப் அந்த மாதிரி இருக்கலாம். ஆனால், படப்பிடிப்பு தளத்தில் நடன இயக்குனர் பிருந்தா மாஸ்டர் அவர்கள் என்னுடைய நடனத்தை பார்த்து நல்லா ஆடுறமா என்று கூறினார்.
நான் அவர்கள் கூறியதை அப்படியே ஆடினேன். நான் என்ன நன்றாக ஆகிவிட்டேன் என்று எனக்கு புரியவில்லை. ஆனால், ஒரு முன்னணி நடன இயக்குனர் அவர் வாயால் நான் நன்றாக ஆடுகிறேன் என்று கூறியது மகிழ்ச்சியாக இருந்தது என பதிவு செய்திருக்கிறார் நடிகை மிருணாளினி ரவி.