“குழந்தை வளர்ப்பு.. தவிர்க்க வேண்டிய விஷயங்கள்..!” – இவ்வளவு இருக்கா..!

குழந்தை வளர்ப்பு என்பது ஒரு அற்புதமான கலை இதில் அந்த குழந்தைகளின் மன நிலையில் அறிந்து அதற்குத் தக்கவாறு நாம் அவர்களோடு இணைந்து கொண்டு நடத்துவது என்பது இன்றியமையாத ஒன்றாகும். இதன் மூலம் குழந்தைகளின் மன வளர்ச்சியை மட்டுமல்லாமல் மனம் மகிழ்ச்சியும் அதிகரிக்கும்.

நீங்கள் குழந்தை வளர்ப்பில் ஈடுபடும் போது பெற்றோர்களாகிய நீங்கள் சில விஷயங்களை கட்டாயம் தவிர்க்க வேண்டும். அதன் மூலம் குழந்தைகளின் மனநிலை மேம்படும் என்பது முக்கிய நிபுணர்களின் கருத்தாக உள்ளது. அந்த வகையில் நீங்கள் உங்கள் பிள்ளைகளிடம் தவிர்க்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்பது பற்றி பார்க்கலாமா.

குழந்தை வளர்ப்பில் தவிர்க்க வேண்டிய விஷயங்கள்

👌உங்கள் குழந்தைகளை நீங்களே பட்டப்பெயர் வைத்து அழைப்பது மிகவும் தவறானது. இது உங்களுக்கு வேடிக்கையாக இருக்கலாம். இதனால் அந்த குழந்தைகளின் உண்மையான பெயர் மறந்து நாளடைவில் அந்த பட்டப் பெயரை நிலைத்து விடும்.

👌எப்போதும் குழந்தைகளை அதிகளவு கட்டுப்படுத்தி வைக்க கூடாது. அந்த குழந்தைகளோடு நட்பு முறையில் நீங்கள் பழகுவது மிகவும் அவசியம் என்பதை புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் அதிக அளவு கட்டுப்படுத்தும் போது அந்த பிள்ளைகளுக்கு மன அழுத்தம் அதிகரிக்கும்.

👌குழந்தைகளிடம் அதிக அக்கறை காட்டுவது மிகவும் தவறானது. அவர்கள் சுதந்திரமாக உலா வருவதற்கு இடம் கொடுக்க வேண்டும். இல்லை என்றால் அந்தப் பிள்ளையின் எதிர்காலம் வீணாகுவது உறுதி என்பதை உணர்ந்து அதிக அக்கறை எடுக்காதீர்கள்.

👌குழந்தைகளிடம் உள்ள தவறான பழக்கங்களை சுட்டிக்காட்டி அதை சரி செய்ய என்ன செய்யணுமோ இதை செய்ய வேண்டுமோ அதை செய்ய வேண்டும். அதை விடுத்து விட்டு அந்தப் பிள்ளைகளை தண்டிப்பது மிகவும் தவறானது.

👌குழந்தைகளிடம் எரிந்து விழுவது தொடர்ந்து பேசாதே என்று கட்டளையிடுவது போன்றவற்றை நாம் செய்யக்கூடாது. இதன் மூலம் அவர்களின் ஆர்வத்தை நாம் அடக்கி விடுவது போல அது ஆகிவிடும். எனவே அன்பாகவும் அக்கறையாகவும் எதையும் சொல்லிக் கொடுக்க வேண்டும்.

👌 குழந்தைகளை அவ்வப்போது பாராட்டுவதை தவறாக தவறாமல் செய்ய வேண்டும். இது அவர்களின் தனித்திறமையை ஊக்குவிக்கும் விதத்தில் அமையும்.

👌குழந்தைகள் முன் அடுத்தவர்களைப் பற்றி புறம் பேசுவதை தவிர்த்து விடுங்கள். இதன் மூலம் அவர்களும் மற்றவர்களை மற்றவர்களை உங்கள் முன் புறம் பேச ஆரம்பிப்பார்கள். அதற்கு நீங்கள் துணையாக இருந்தது போல இருந்து விடும்.

👌குழந்தைகளின் முன் தீய வார்த்தைகளையோ தடித்த வார்த்தைகளையோ பேசுவதை தவிர்த்து விடுங்கள். அவ்வாறு பேசும்போது தொடர்ந்து குழந்தைகளும் அந்த வார்த்தையை பேச துவங்குவார்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …