“நீங்க காதலிக்கும் பெண் கிட்ட இத செய்யாதீங்க..!” – செஞ்சா கிளீன் போல்ட்..!

இந்த உலகில் காதலிக்காதவர்களே இல்லை என்று கூறும் அளவுக்கு எங்கேயும் காதல், எப்போதும் காதல் என்பது உண்மையாக உள்ளது. அப்படி ஒரு பெண்ணை காதலிக்க கூடிய ஆண் அந்த காதலியிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், எதையெதை கூற வேண்டும், எதை எதை கூறக்கூடாது என்பதில் சில வழிமுறைகள் உள்ளது.

அந்த வரிசையில் இந்த கட்டுரையில் உங்கள் காதலியிடம் நீங்கள் பேசும்போது எந்த விஷயங்களை நீங்கள் செய்யக்கூடாது என்பதை பற்றி விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

நீங்கள் நேசிக்கும் உங்கள் காதலியிடம் செய்யக்கூடாத விஷயங்கள்

நீங்கள் நேசிக்கும் காதலியை உங்கள் வாழ்க்கை துணையாக மாற்றிவிட நீங்கள் நினைக்கும் போது உங்கள் காதலியின் தோழிகளுடன் நீங்கள் வெளியே செல்லக்கூடாது. அது மட்டுமல்லாமல் அவர்களுடன் நீங்கள் தனியே ஊர் சுற்றுவது போன்ற விஷயங்களில் ஈடுபடுவது உங்களுக்கு உங்கள் காதலிக்கும் இடையே இருக்கும் உறவை முறிக்கக் கூடிய நிலைக்கு கொண்டு வந்து சேர்க்கும்.

நீங்கள் நேசிக்கும் பெண்ணை மற்றவர்களின் முன் கேலி செய்வது மிகவும் தவறானது. உங்களுடன் இருக்கும் உங்கள் நண்பர்கள் அல்லது நெருங்கிய உறவுகளின் முன் உங்கள் காதலியை கேலி செய்வது மிற்றும் கிண்டல் செய்வதை தவிர்த்து விடுங்கள்.

நீங்கள் காதலிக்கும் நபரை காதலிக்கும் போதும் சரி, அவர்களை திருமணம் செய்து கொண்ட பின்னும் சரி, பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து அவர்களை ஏமாற்ற வேண்டாம். இதன் மூலம் உங்கள் உறவு நீடித்து நிலைக்காது.

உங்கள் காதலியுடன் நீங்கள் சண்டையிடுவதை தவிர்க்க வேண்டும். காரணம் இல்லாமல் வாக்குவாதம் செய்வது, அந்த வாக்குவாதத்தில் நீங்கள் தான் உயர்ந்தவர் என்பது போல காட்டிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தை நீங்கள் அவர்களின் முன் உருவாக்காமல் இருப்பது மிகவும் நல்லது.

எந்த ஒரு சூழ்நிலையிலும் உங்கள் நெருங்கிய நண்பர் உயர்ந்தவரா? இல்லை காதலி உயர்ந்தவரா? என்று வரும்போது நட்புக்கு முக்கியத்துவத்தை கொடுக்காமல் உங்கள்  காதலுக்கு உரிய அங்கீகாரத்தை கொடுத்தால் சூழ்நிலை மிகவும் சிறப்பாக இருக்கும். உங்கள் நண்பரும் இதை உணர்ந்து உங்களுக்கு ஆதரவாக இருப்பார்.

உங்கள் காதலியுடன் இருக்கும் போது மற்ற பெண்களை பார்ப்பதை தவிர்ப்பது நல்லது. அப்படி இருப்பதின் மூலம் உங்கள் காதல் மேலும் ஆழமாக மாறும் இல்லை என்றால் காதலில் முறிவு ஏற்படும்.

காதலியோடு தனியாக வெளியே செல்லும்போது மதுபானங்களை குடிப்பதை நீங்கள் தவிர்த்து விட்டு அவர்களுக்கு நீங்கள் ஆதரவாகவும், பாதுகாப்பாகவும் இருத்தல் அவசியம். இதன் மூலம் உங்கள் மேல் இருக்கும் அன்பு மேலோங்கும்.

உங்கள் காதலிக்கு இருக்கக்கூடிய ஆண் நண்பர்களைப் பற்றியோ அல்லது அவர்களுடன் பணி புரியக்கூடிய ஆண்கள் பற்றியோ அவரிடம் நீங்கள் விசாரிப்பது தேவையற்ற பிரச்சனைகளை வழிவகுக்கும்.

எனவே மேற்கூறிய குறிப்புகளை மனதில் கொண்டு உங்கள் காதலியிடம் இது போன்ற விஷயங்களை பேசாமல் இருப்பதின் மூலம் உங்கள் காதல் வெற்றி அடைவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்பதை உணர்ந்து நீங்கள் செயல்படவும்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …