பிரபல மலையாள இளம் நடிகை ஒருவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தார் நடிகை ரேவதி மற்றும் நடிகை அசின் இரண்டும் கலந்த கலவை என்று லீடர் நடிகர் வர்ணிக்கும் அளவுக்கு அழகு பதுமையாக தமிழ் சினிமாவில் வலம் வந்தவர்.
குடும்பப்பாங்கான முகத்தோற்றம் வாட்டசாட்டமான உடல் வாகு என ரசிகர்களின் கனவு தேவதையாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் சமீபத்தில் தன்னுடைய காதலரை திருமணம் செய்து கொண்டு திருமண வாழ்க்கையில் ஐக்கியமானார்.
இப்படி முன்னணி நடிகையாக இருந்த இவர் மலையாளத்தில் சின்னத்திரையில் உருவாகக்கூடிய ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்று இதிலிருந்து பல சர்ச்சைகளுக்கு ஆளானார்.
முதல் முதலில் போட்டியில் கலந்துகொண்ட ஆண் போட்டியாளர் ஒருவருக்கு மேடையிலேயே கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த சர்ச்சை அடங்குவதற்குள் போட்டியாளரை தன்னுடைய இருக்கைக்கு அருகே அழைத்து அவருடைய கன்னத்தைக் கடித்த விவகாரம் தென்னிந்தியா முழுதும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
25 வயது மதிக்கத்தக்க ஆண் போட்டியாளரை ஒரு நடிகையாக இருந்து கொண்டு அவருடைய திறமையை பாராட்டாமல் அவரை அருகே அழைத்து அவருடைய கன்னத்தை கடிப்பது எந்த வகையான அணுகுமுறை என்று அவர்தான் விளக்க வேண்டும் என்று பலரும் கேள்வி எழுப்பினார்கள்.
இப்படியே இந்த விவகாரம் நீண்டு கொண்டிருக்கும் நிலையில் சமீபத்தில் ஒரு ஆண் போட்டியாளர் நடனமாடியும் முடித்தபின் அவருடைய நடனம் எப்படி இருந்தது என்பதை சொல்வதற்கு பதிலாக அவருடைய உடலை வர்ணித்து கொண்டிருந்த நடிகையை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார்கள்.
உங்களை நடுவராக அழைத்து வந்தால் நடனம் எப்படி இருக்கிறது அவர்கள் தேர்வு செய்த பாடலுக்கும் அவர்களது நடனத்திற்கும் ஒத்துப் போகிறதா..? அவருடைய பயிற்சி எப்படியிருக்கிறது..? நடனம் சிறப்பாக இருந்ததா..? இப்படியெல்லாம் சொல்லாமல் போட்டியாளரின் உடல் அழகை வர்ணித்து கொண்டிருப்பது ஏற்கத்தக்கதல்ல.
அனைத்து போட்டியாளர்களும் வெவ்வேறு உடலமைப்பு கொண்டிருப்பார்கள். குறிப்பிட்ட ஒரு போட்டியாளரின் உடலமைப்பை மட்டும் நீங்கள் பார்த்து வர்ணனை செய்வது மற்ற போட்டியாளர்களை மனரீதியாக சோர்வடைய வைக்கும்.
ஆனால், நீங்கள் அதை செய்கிறீர்கள் என்று விளாசி வருகிறார்கள். அப்படி என்னதான் அந்த நடிகை கூறினார் என்று கேட்கிறீர்களா..? நடனமாடி முடித்தபின் மூச்சு வாங்க நின்று கொண்டு நடுவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை கேட்க ஆவலுடன் என்று கொண்டிருந்த அவரை பார்த்து நான் நீங்கள் ஆடிய நடனத்தை பார்க்கவே இல்லை.. உங்களுடைய சிக்ஸ் பேக்கை தான் நான் பார்த்துக்கொண்டிருந்தேன்.. எப்படி இதனை நீங்கள் பராமரிக்கிறீர்கள்..? என்று ஆரம்பித்த நடிகை நிகழ்ச்சி இதனுடைய விமர்சனம் முடியும் வரை அவருடைய உடலழகு பற்றி மட்டுமே விவரித்துக் கொண்டிருந்தார்.
இது மிகப் பெரிய சர்ச்சையை கிளப்பி விட்டிருக்கிறது.