” உங்கள் மொபைல் போன் நீடித்து உழைக்க வேண்டுமா? ” – அப்ப இந்த எளிய பராமரிப்பு வழிகள ஃபலோ செய்யுங்க..!!

இன்று அனைவரது வீட்டிலும் ஏன் ஒவ்வொருவரின் கைகளிலும் மொபைல் போன் என்பது கட்டாயமான ஒன்றாக கைகளில் தவழ்ந்து வருகிறது. இந்த போன் இல்லை என்றால் உறவுகளே இல்லை என்று கூறக்கூடிய நிலைமைக்கு உறவுகளை விட ஒரு படிக்கு மேல் மனிதர்களை கட்டி போட வைத்திருக்கும் அற்புதம் மேஜிக் பொருளாக மொபைல் போன்கள்  திகழ்கிறது.

 அப்படிப்பட்ட மொபைல் போன் நீண்ட நாள் உழைக்க அதனை சரியாக எப்படி பராமரிப்பு செய்ய வேண்டும் என்ற டிப்ஸை எந்த கட்டுரையில் பார்க்கலாம்.

மொபைல் போன் பராமரிப்பு டிப்ஸ்

👍எவ்வளவு விலை கொடுத்து நீங்கள் மொபைல் போனை வாங்கு இருந்தாலும் அந்த போனின் மெருகு குறையாமல் நீண்ட நாட்களாக நீங்கள் அதை வைத்து பயன்படுத்துவதற்கான வழிகள் என்னவென்றால் மொபைல் போன் தட்பவெப்பத்தால் தாக்குதலுக்கு  உட்படாமல் இருக்க அதை நீங்கள் ஓரளவு குளிர்ச்சிகரமாக இருக்கக்கூடிய பகுதிகளில் வைப்பது நல்லது. மேலும் மலைச்சாரல் அடிக்கின்ற பகுதிகளில் வைப்பதை தவிர்க்கவும்.

👍மொபைல் போனை நீங்கள் சார்ஜ் செய்யும் போது பேசக்கூடாது. மின் இணைப்பை துண்டித்து விட்டு தான் பேசுவது பாதுகாப்பானதாக எல்லோருக்கும் இருக்கும்.

👍 பேட்டரியை சார்ஜ் செய்யும்போது முழுவதாக சார்ஜ் செய்யக்கூடாது. குறைந்த அளவு 90 சதவீதம் சார்ஜ் ஏற்றினாலே போது.ம் அதுபோல ஜீரோ நிலைக்கு பேட்டரி வந்த பின் சார்ஜ் போடுவது தவறு ஒரு 20% இருக்கும் போது நீங்கள் சார்ஜ் போட்டால் பேட்டரி நீடித்து உழைக்கும்.

👍 போன் கவரை பயன்படுத்துவது மிகவும் நல்லது. இதன் மூலம் டிஸ்ப்ளே மற்றும் உங்கள் போனின் ஓரங்களில் இருக்கக்கூடிய பகுதிகளில் அடிபடாமல் பாதுகாக்க இது உதவி செய்யும்.

💐 மொபைல் போனை எட்டாத உயரத்தில் வைப்பதின் மூலம் குழந்தைகள் இருந்தால் எடுத்து கீழே போட மாட்டார்கள். மேலும் உங்கள் போனின் கீபேட் லாக் செய்து வைப்பது மிகவும் சிறந்ததாக இருக்கும்.

👍 மெமரி கார்டில் வங்கியின் ரகசிய எண்கள் போன்றவற்றை நீங்கள் பதிவு செய்யாமல் இருக்க வேண்டும். இல்லையெனில் போன் தொலைந்து விட்டால் அதன் மூலம் உங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

👍 போனின் பேட்டரி சார்ஜ் அதிகப்படுத்த டிஸ்ப்ளே வை சற்று நீங்கள் குறைத்து வைத்துக் கொள்ளலாம். அதுபோல அதிக நேரம் பேசுவதை விட எஸ்எம்எஸ் செய்வதின் மூலம் உங்களது பேட்டரி சார்ஜ் எளிதில் இறங்காது.

👍 எப்போதும் வைப்ரேஷன் மோடை ஆன் செய்து வைக்காதீர்கள். கடற்கரை மற்றும் நீர் நிலைகள் உள்ள பகுதிகளுக்குச் செல்லும்போது உங்கள் செல்போனை கொண்டு செல்ல வேண்டாம்.

👍 ஸ்கிரீன் ஃபோன்களுக்கு உகந்த டச் ஸ்கிரீன் மற்றும் லேமினேஷன் உறைகளை நீங்கள் உடனடியாக செய்து விடுங்கள். இப்படி நீங்கள் செய்வதின் மூலம் உங்களது போனை நீண்ட காலம் பயன்பாட்டில் வைத்துக் கொள்ள முடியும்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …