தமிழ் திரை உலகில் ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகராக திகழ்ந்த நடிகர் மோகன் கர்நாடக மாநிலத்தின் உடுப்பி மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் கன்னட மொழி மட்டுமல்லாமல் மலையாள தெலுங்கு மொழிகளில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர்.
தமிழில் சுமார் என்பதற்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் மோகனை மைக் மோகன் என்று அவரது ரசிகர்கள் செல்லமாக அழைப்பார்கள்.
மைக் மோகன்..
தமிழக ரசிகர்களால் அன்போடு மைக் மோகன் என்று அழைக்கப்படும் மோகன் கமலஹாசன் முதன்மை வேடத்தில் நடித்த கோகிலா என்ற திரைப்படத்தில் அறிமுகமானதால் இவரை கோகிலா மோகன் என்று ஆரம்பத்தில் அழைத்தார்கள்.
இதையும் படிங்க: இத்தா தண்டி உடம்புக்கு இத்துனூண்டு நீச்சல் உடையா..? திகட்ட திகட்ட கிளாமர் விருந்து வைக்கும் பட்டாஸ் ஹீரோயின்..!
இதனை அடுத்து 1980-ல் மூடுபனி என்ற திரைப்படத்தில் மிகச் சிறப்பான முறையில் நடித்த இவர் வெள்ளி விழா நாயகன் என்று அழைக்கப்பட்டார்.
இந்த வெற்றி படத்தை தொடர்ந்து கிழக்கே போகும் ரயில் திரைப்படத்தில் 1989-இல் நடித்திருந்தார். அத்தோடு மகேந்திரன் இயக்கிய நெஞ்சத்தை கிள்ளாதே படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய இவருக்கு பல பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது.
நெஞ்சத்தை கிள்ளாதே திரைப்படம், 200 நாட்கள் வரை ஓடியதால் தேசிய விருது இந்த படத்திற்கு கிடைத்தது. மோகனுக்கு பிலிம் பேர் விருது பயணங்கள் முடிவதில்லை என்ற திரைப்படத்திற்காக கொடுக்கப்பட்டது. இந்த திரைப்படம் 1982-ல் வெளிவந்தது.
இதனை அடுத்து 1982-ல் இருந்து 2008 வரை பல்வேறு தமிழ் படங்களில் நடித்து அசத்தியிருக்கிறார். மேலும் இவரது படங்கள் முழுவதும் நூறு நாட்களுக்கு மேல் ஓடியதால் திரை உலகோர் இவரை போற்றி வந்ததோடு மட்டுமல்லாமல் பட்ஜெட் நடிகராகவும் கருதினார்கள்.
கடைசி வரை மோகன் இத பண்ணல..
வெற்றி படங்களில் மோகன் நடித்து முன்னணி நடிகராக இருந்த போதும் கடைசி வரை சிவாஜி கணேசனை போல சம்பளத்தை உயர்த்தாமல் இருந்தது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
இதனை அடுத்து யார் படத்தை இயக்கிய கண்ணன் இவரைப் பற்றி பேசும் போது மிகச்சிறப்பான நடிகராக திகழ்ந்த இவர் கடைசி வரை தனது சம்பளத்தை உயர்த்திக் கொள்ளாமல் இருந்தது பல படங்களை இயக்க உதவி செய்ததாக கூறியிருக்கிறார்.
அதுமட்டுமல்லாமல் இவர் நினைத்து இருந்தால் தனது சம்பளத்தை பன்மடங்காக உயர்த்தி இருக்கலாம். ஆனாலும் தனது சம்பளத்தை கட்டுக்குள் வைத்து தான் பல படங்களில் நடித்து பல இயக்குனர்களின் வாழ்க்கையை சிறக்க வைத்திருக்கிறார் என்பது போல யார் என்ற படத்தை இயக்கிய கண்ணன் பேசி இருப்பது ரசிகர்களின் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தேவயானியின் வீடும்.. ஆசிரியர் தொழிலும்.. பலரும் பார்த்திடாத புகைப்படங்கள்..!
இதனை அடுத்து மைக் மோகனின் சிறப்பான குணத்தை உணர்ந்து கொண்ட ரசிகர்கள் அவர்கள் நண்பர்களிடம் இந்த விஷயத்தை ஷேர் செய்து வருவதோடு இந்த விஷயத்தை பேசும் பொருளாக மாற்றி விட்டார்கள்.
எனவே தான் என்றும் மைக் மோகனுக்கு ஒரு நல்ல இடம் திரையுலகில் உள்ளது என்றால் அது மிகையாகாது. இன்னும் படங்களில் நடித்தால் இவருக்கு நிச்சயம் ரசிகர்களின் ஆதரவு மட்டும் அல்ல திரை துறையை சார்ந்தோரின் ஆதரவு கட்டாயம் இருக்கும் என்பதில் எந்த விதமான ஐயமும் இல்லை.