திடீரென்று வந்த உடல் பிரச்சனை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மோகன்லால்!..

தமிழ் சினிமாவில் எப்படி ரஜினியும் கமலும் பிரபலமான நடிகர்களாக இருக்கிறார்களோ அதே போல மலையாள சினிமாவில் பிரபலமான நடிகராக இருந்து வருபவர் நடிகர் மோகன்லால். இவருக்கு மலையாளத்தில் எக்கச்சக்கமான ரசிகர்கள் இருக்கின்றனர்.

மலையாளம் மட்டுமின்றி தெலுங்கு, தமிழ் என்று மற்ற மொழிகளிலும் பிரபலமான நடிகராக மோகன்லால் இருந்து வருகிறார். 1980 இல் முதன்முதலாக மோகன்லால் மலையாள சினிமாவில் அறிமுகமானார்.

மோகன்லால்

அதனை தொடர்ந்து நிறைய திரைப்படங்களில் நடித்திருக்கிறார் மோகன்லால். சினிமாவில் அறிமுகமான இரண்டு வருடங்களிலேயே நடிகர் மம்முட்டியுடன் இணைந்து படையோட்டம் என்கிற திரைப்படத்தில் நடித்தார். தமிழ் சினிமாவில் எப்படி ரஜினியும் கமலும் சேர்ந்து நடிப்பது ஒரு வியப்புக்குரிய விஷயமாக இருக்கிறதோ அதேபோல மலையாள சினிமாவில் மம்முட்டியும் மோகன்லாலும் சேர்ந்து நடிப்பது அதிசயமான விஷயமாகும்.

ஏனெனில் அவர்கள் இருவருமே போட்டி நடிகராக இருந்ததால் மலையாள சினிமாவில் பிரபலமாக இருந்தார். மம்முட்டி பிரபலமாக இருந்த சமகாலத்தில்தான் மம்முட்டியும் அவருக்கு போட்டி நடிகராக இருந்து வந்தார்.

திடீரென்று வந்த உடல் பிரச்சனை

இப்பொழுதுவரை இவர்கள் இருவருக்கும் இருக்கும் வரவேற்பு என்பது குறையாமல் இருக்கிறது. இதற்கு நடுவே தமிழில் சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார் மோகன்லால். தமிழில் இவர் சிறைச்சாலை, இருவர், ஜில்லா மாதிரியான நிறைய திரைப்படங்களில் நடித்திருக்கிறார் மோகன்லால்.

இதன் மூலம் தமிழ் சினிமாவிலும் இவர் பிரபலமான நடிகராக இருந்து வருகிறார். பெரும்பாலும் தமிழில் நடிக்கும் பொழுதே அவர் தேர்ந்தெடுக்கும் கதைகள் எல்லாம் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களை கொண்டிருக்கும்.

ஆனால் 1980 கள் மற்றும் 1990களில் மலையாளத்தில் நடித்ததோடு கம்பேர் செய்யும் பொழுது இப்பொழுது குறைவான திரைப்படங்களில்தான் நடித்து வருகிறார் மோகன் லால். ஏற்கனவே மோகன்லால் மகனும் தற்சமயம் மலையாள சினிமாவில் நடிக்க துவங்கி இருக்கிறார்.

மருத்துவர் அறிக்கை:

இறுதியாக மலைகோட்டை வாலிபன் என்கிற திரைப்படத்தில் மோகன்லால் நடித்தார். அதற்குப் பிறகு தற்சமயம் 4 திரைப்படங்களில் இவர் நடித்து வருகிறார். இந்த நிலையில் மோகன்லாலுக்கு வயதாகி வருவதால் அவருக்கு உடல் நல பிரச்சனைகளும் ஏற்பட்டு வருவதாக பேச்சுக்கள் இருந்து வருகின்றன.

இந்த நிலையில் தற்சமயம் மோகன்லாலுக்கு கடுமையான காய்ச்சலும், சுவாச பிரச்சனைகளும் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் அவருக்கு தசை வலி ஏற்பட்டு இருக்கின்றன என்று கூறுகின்றனர். இந்த பிரச்சனைகளின் காரணமாக சீக்கிரமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் மோகன்லால்.

இந்த நிலையில் மருத்துவமனை நிர்வாகம் தற்சமயம் கூறும் பொழுது அவருக்கு வைரஸ் சுவாசத் தொற்று இருப்பதாக தெரிவித்துள்ளது. எனவே ஐந்து நாட்கள் அவர் மருத்துவமனையில் இருக்க வேண்டும் என்று கூறி இருக்கின்றனர். மேலும் அவர் நெரிசலான இடங்களை தவிர்க்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் பரிந்துரைத்திருக்கின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version