மலையாள திரைப்பட நடிகரான மோகன்லால் நடிப்பில் வரும் அக்டோபர் 21ஆம் தேதி தீபாவளி வெளியீடாக மான்ஸ்டர் என்ற படம் வெளிவர உள்ளது.
இந்த படத்தை 2016 ஆம் ஆண்டு மோகன்லாலை வைத்து புலி முருகன் என்ற படத்தை இயக்கி சூப்பர் டிப்ஸ்களை கொடுக்க வைத்து இயக்கி உள்ளதால் எந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது.
இந்த படத்திற்கான முன்பதிவு தற்போது இருந்து ஆரம்பித்து விட்டது. ஆனால் இந்த படத்தை அரபுநாடுகளில் வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
இதனை அடுத்து மோகன்லாலின் ரசிகர்கள் ஏன் அரபு நாடுகளில் தடை விதித்து இருக்கிறார்கள் என்ற கேள்வியை எழுப்பி வருகிறார்கள்.
இதற்கு காரணம் இந்தப் படத்தில் ஓரினச்சேர்க்கையாளர்கள் குறித்த கருத்துக்களை மையமாகக் கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற விஷயங்களுக்கு அரபு நாட்டில் அதிக கட்டுப்பாடு உள்ளதால் இதற்கு தடை விதிக்கபட்டு இருப்பதாக கூறுகிறார்கள்.
ஓரு பேட்டியில் மோகன்லால் பேசுகையில் மலையாள படத்தில் ஒரு துணிச்சலான முயற்சி என இதைச் சொல்லலாம் என்று சுருக்கமாக விளக்கியிருந்தார்.
மோகன்லால் ரசிகர்கள் தற்போது ஓ… இதுதான் அந்த சூசகமான கருத்தா? என்று தற்போது தங்களுக்குள் பேசிக் கொள்கிறார்கள்.
எனவே தற்போது அரபு நாடுகளில் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் இதற்காக ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்ட காட்சிகளை நிவின்பாலி நடிப்பில் அதே தேதியில் வெளியாக இருக்கும் படவேடு படத்திற்காக திரையரங்குகள் இடத்தை ஒதுக்கி உள்ளதாக இன்னொரு செய்தியும் காற்றுவாக்கில் வந்துள்ளது.
மோகன்லால் படத்தை தயாரித்த தயாரிப்பாளர்களின் சார்பில் இருந்து மறு சென்சார் செய்து படத்தை வெளியிடுவதற்கான முயற்சிகளில் ஈடுபட போவதாகவும் கூறப்படுகிறது.
அது சரிவர சென்சார் போற அப்ரூவல் கிடைக்கும் பட்சத்தில் நிச்சயமாக அரபு நாடுகளிலும் என்ற படம் வெளிவருவதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
தற்போது மலையாள ரசிகர்கள் அனைவரும் மோகன்லால் நடித்த இந்தப் படம் வெளிவந்தால் உடனே பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் உள்ளார்கள்.