“மண்டே Mood..” – க்ளோஸ் அப்பில் டீசர்ட் வாசகத்தை காட்டும் த்ரிஷா..! – வைரல் வீடியோ..!

1999-ம் ஆண்டு மிஸ் மெட்ராஸ் பட்டம் வென்று பிரபலமானவர். அதே வருடம் பிரசாந்தின், ஜோடி படத்தில் சிம்ரனுடன் சுற்றும் தோழிகளில் ஒருவராக சினிமாவில் அறிமுகம் ஆனவர். 

 

பின்னர் மௌனம் பேசியதே, சாமி, லேசா லேசா என ஆரம்பித்த இவர் சினிமா க்ராப் உச்சம் தொட்டது. 2000 முதல் 2010 வரை அசைக்க முடியாத நடிகையாக இருந்தது இவர் மார்க்கெட். 

 

20 வருடங்களாக ஹீரோக்களே மார்க்கெட் இழக்கும் இன்றைய சூழலில் பிஸி ஹீரோயினாக த்ரிஷா சூப்பராக வலம் வருகிறார். தனது பல பேட்டிகளில் திரிஷா சொல்வது அவரின் பக்கபலம் அம்மா உமா கிருஷ்ணன் என்பது தான். சமீபத்தில் தனது அம்மாவுக்கு இரவு 12 மணிக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் பிறந்தநாள் கேக்குடன் அசத்தியுள்ளார் திரிஷா. 

 

இவரே கேக் தயார் செய்துள்ளார், இருவரும் சேர்ந்து பிறந்த நாளை கொண்டாடி உள்ளனர்.தமிழ் திரையுலகில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கும் மிகச் சில நடிகைகளில் ஒருவர் த்ரிஷா என்பதும் இப்போதும் அவர் இளம் நடிகைகளுக்கு இணையாக ஒரே நேரத்தில் ’பொன்னியின் செல்வன்’ உள்பட பல படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

 

நடிகை த்ரிஷா தற்போது ’ராங்கி’, ‘பரமபதம் விளையாட்டு’, ‘கர்ஜனை’, ‘சதுரங்க வேட்டை 2’, சுகர்’, ‘ராம்’, ‘பொன்னியின் செல்வன்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

இந்நிலையில், மண்டே Mood..என்று கூறி தன்னுடைய டீசர்ட் வாசகத்தை Zoom செய்து காட்டியுள்ளார் அம்மணி. La Vie En Rose அதாவது வாழ்க்கை பிங்க்-ல் உள்ளது என்பது தான் அதற்க்கான அர்த்தம்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Tamizhakam