“மனம் மயக்கும் மோர் குழம்பு..!” – இப்படி வச்சு சாப்பிடுங்க..!!

வகை வகையான குழம்புகளை வைத்து சாப்பிட்டு போர் அடித்து இருந்தால் மதிய நேரத்தில் சுடச்சுட சாதத்திற்கு இது போல மோர் குழம்பு செய்து சாப்பிட்டால் ஒரு பருக்கை சாதம் கூட மிஞ்சாது. அந்த அளவு சுவையான மோர் குழம்பு எப்படி செய்வது என்பது பற்றி இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

மோர் குழம்பில் பல வகைகள் உள்ளது. இந்த மோர் குழம்பில் வெண்டைக்காய் போட்ட மோர் குழம்பு, பூசணிக்காய் போட்ட மோர் குழம்பு, உளுந்து வடை போட்ட மோர் குழம்பு என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.

MORE KULAMBU

கோடைக்கு ஏற்ப அதிக அளவு நீர் சத்தைக் கொண்டிருக்கும் இந்த மோர் குழம்பு செய்வதற்கு தேவையான பொருட்கள் என்னென்ன என தெரிந்து கொள்ளலாமா?

மோர் குழம்பு செய்ய தேவையான பொருட்கள்

1.துவரம் பருப்பு ஒரு டேபிள் ஸ்பூன்

2.காய்ந்த மிளகாய் 2

3.சின்ன வெங்காயம் 10

4.பச்சை மிளகாய் 3 5.கருவேப்பிலை ஒரு கொத்து

6.கடுகு அரை டீஸ்பூன்

7.தயிர் ஒரு கப்

8.மஞ்சள் தூள் சிறிதளவு

9.சீரகம் ஒரு டீஸ்பூன்

செய்முறை

முதலில் 30 நிமிடத்திலிருந்து 40 நிமிடங்கள் வரை துவரம் பருப்பை ஊறவைத்து மிக்ஸியில் மைய அரைத்துக் கொள்ள வேண்டும்.

MORE KULAMBU

பிறகு அதே மிக்ஸியில் பருப்புடன் பச்சை மிளகாய் இஞ்சி சீரகம் இவற்றை சேர்த்து அரைத்து விடுங்கள்.இந்த கலவையை தனியாக எடுத்து வைத்துக்கொண்டு அதே மிக்ஸி ஜாரில் தயிரை போட்டு நன்கு அடித்து விடவும்.

 இதனை அடுத்து வானொலியில் எண்ணெய் ஊற்றி கடுகு காய்ந்த மிளகாய் கருவேப்பிலை சின்ன வெங்காயம் போன்றவற்றை போட்டு தாளிக்கவும்.

MORE KULAMBU

தாளித்த பின் அரைத்து வைத்துள்ள பருப்பை இதனோடு சேர்த்து விடுங்கள். இதனை அடுத்து இதனோடு தயிர் கரைசலை கொட்டி தேவையான அளவு உப்பு மஞ்சத்தூள் சேர்த்து மோர் குழம்பு பதட்டத்திற்கு வர விட வேண்டும்.

 இறுதியாக மோர் குழம்பு பதத்துக்கு வந்த பிறகு கருவேப்பிலை கொத்தமல்லியை தூவி இறக்கினால் போதுமானது. வெறும் பத்து நிமிடத்தில் இந்த குழம்பை செய்து நீங்கள் அசத்தி விடலாம்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …