தடம் மாறிய தனுஷ்.. வில்லியாக மாறிய லதா ரஜினிகாந்த்.. அரங்கேறிய விவாகரத்து.. கிறுகிறுன்னு வருதே..!

தமிழ் சினிமாவில் நட்சத்திர நடிகரான தனுஷ் திரைப்பட நடிகர் என்பதையும் தாண்டி திரைப்பட தயாரிப்பாளர் பின்னணி பாடகர், திரைக்கதை ஆசிரியர் ,திரைப்பட இயக்குனர் இப்படி பல பரிணாமங்களில் தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார் .

2002 ஆம் ஆண்டு துள்ளுவதோ இளமை படத்தில் நடித்து தனது திரை வாழ்க்கையை ஆரம்பித்தார். நடிகர் தனுஷின் இந்த படத்தை அவரது அண்ணன் செல்வராகவன் இயக்கி இருந்தார்.

நடிகர் தனுஷின் அறிமுகம்:

முதல் படம் பெரும் விமர்சனத்திற்கு உள்ளாக பார்க்கப்பட்டது. தனுஷின் தோற்றமும் அவரது நடிப்பும் அவரது ஒல்லியான உடலும் மோசமாக விமர்சிக்கப்பட்டு பத்திரிகைகளில் கீழ்த்தரமான செய்திகள் எழுதப்பட்டிருந்தது.

இதனால் மிகுந்த மனம் மன உளைச்சலுக்கு ஆளான தனுஷ் இனிமேல் திரைப்படங்களில் நடிக்கவே வேண்டாம் என முடிவெடுத்து கதறி அழுதாராம்.

அந்த நேரத்தில் அவரது தந்தை கஸ்தூரிராஜாவும், செல்வராகவும் ஊக்கம் கொடுத்ததின் பெயரில் தான் தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்கவே ஆரம்பித்தார்.

அதன்படி 2003 ஆம் ஆண்டு காதல் கொண்டேன் திரைப்படத்தில் நடித்து தனது வெற்றியை நிலை நாட்டினார். அந்த திரைப்படம் அவருக்கு பெரும் வெற்றி படமாக அமைந்ததோடு ஓரளவுக்கு விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றிருந்தது.

தொடர்ந்து சுள்ளான், தேவதை கண்டேன், புதுப்பேட்டை, திருவிளையாடல் ஆரம்பம் , பொல்லாதவன் , யாரடி நீ மோகினி, குசேலன் , படிக்காதவன் , உத்தமபுத்திரன் , ஆடுகளம் , மாப்பிள்ளை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

வேங்கை, மயக்கம் என்னம் மரியான் , வேலையில்லா பட்டதாரி, மாரி 2 , தங்க மகன் , தொடரி , பவர் பாண்டி வடசென்னை, மாரி 2 , அசுரன் , என்னை நோக்கி பாயும் தோட்டா, ஜகமே தந்திரம் உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்கள் தனுஷுக்கு வணிக ரீதியாக கைகொடுத்தது.

மேலும், கர்ணன் , திருச்சிற்றம்பலம், இப்படி பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்த நட்சத்திர நடிகர் என்ற அந்தஸ்தை பிடித்து விட்டார்.

தொடர் வெற்றிகள்:

இவர் தமிழைத் தாண்டி பாலிவுட் மற்றும் ஹாலிவுட் படங்களிலும் நடித்து தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார்.

தனுஷ் கடந்த 2004 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தை திருமணம் செய்து கொண்டார் .

இவருக்கு யாத்ரா லிங்கா என இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். இதனிடையே இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் கடந்த 6 மாதங்களுக்கு முன்னதாகவே இருவரும் பிரிந்து தனித்தனியே வாழ்ந்து வருகிறார்கள் .

இதனுடைய முறையாக விவாகரத்து பெற்று விட முயற்சித்து நடிகர் தனுஷ் குடும்ப நல கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணையில் இருக்கும் பட்சத்தில் இவர்களின் விவாகரத்துக்கு யார் காரணம் என்பது குறித்த ஒரு அதிர்ச்சிகரமான தகவல் தற்போது வெளியாகி தீயாய் பரவி வருகிறது.

விவாகரத்து குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்:

இது பற்றி இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம். நடிகர் தனுஷ் விவாகரத்து குறித்து அவ்வப்போது தகவல்கள் இணையத்தில் வெளியாக்கிக் கொண்டிருக்கிறது .

அந்த வகையில் சமீபத்தில் பிரபல சினிமா பத்திரிக்கையாளர் தமிழா தமிழா பாண்டியன் அவர்கள் தனக்கு தெரிந்த விஷயங்கள் குறித்து சிலவற்றை பதிவு செய்திருக்கிறார்.

அதன்படி நடிகர் தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்துக்கு முக்கிய காரணமாக இருந்ததில் தனுஷின் மாமியார் லதா ரஜினிகாந்த் இருக்கும் மிகப்பெரிய பங்கு இருக்கிறது.

பொதுவாக சினிமா நடிகர்கள் சினிமாவை இயக்குவதற்கு ஆசைப்படக்கூடாது. தயாரிப்பதற்கு ஆசைப்படக்கூடாது. இதெல்லாம் மிகப்பெரிய சிக்கல் நிறைந்த பகுதிகள்.

ஆனால், நடிகர் தனுஷ் படங்களை தயாரிப்பது படங்களை இயக்குவது என இரண்டு வேலைகளையும் செய்து கொண்டிருக்கிறார்.

இது ஆபத்தான ஒரு விஷயம். ஏற்கனவே நடிகர் தனுஷ் ஒரு மேடையில் கூறியிருக்கிறார் ரஜினிகாந்த் என்னை படத்தில் நடித்தால் மட்டும் போதும் படத்தை இயக்குவது படத்தை தயாரிப்பது போன்ற வேலைகள் எல்லாம் ஈடுபட வேண்டாம்.

அது நமக்கு செட்டாகாது எனவும் இதனால் ஏகப்பட்ட பொருளாதார பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என்றும் கூறியிருக்கிறார் என நடிகர் தனுசு மேடையில் பதிவு செய்திருக்கிறார்.

தனுஷுக்கு வில்லியான மாமியார்:

இப்படி இருக்க அதனை கண்டு கொள்ளாமல் நடிகர் தனுஷ் தொடர்ந்து படங்களை தயாரிப்பது படங்களை இயக்குவது என தன்னுடைய பாதையில் இருந்து விலகி சென்று விட்டார் .

இதனால் சில பண பிரச்சனைகளிலும் சிக்கியிருக்கிறார். இப்படி நடிப்பை விட்டு விட்டு படத்தை தயாரிக்கிறேன் இயக்குகிறேன் என சென்று ஆல் அட்ரஸ் தெரியாமல் போன நடிகர்கள் ஏராளம் .

இதனால் பயந்து போன நடிகை லதா ரஜினிகாந்த் கண்டிப்பாக நடிகர் தனுஷ் தங்களுடைய குடும்பத்திற்கு மிகப்பெரிய வினையாக மாறிவிடுவார் என பலமுறை ஐஸ்வர்யாவிடம் எச்சரிக்கை விடுத்திருக்கிறார் .

ஆனால், தொடர்ந்து நடிகர் தனுஷ் படத்தை தயாரிப்பது, இயக்குவது எனதன் காரணமாக அவரை விவாகரத்து செய்வதுதான் நம்முடைய சொத்தை காப்பாற்றி கொள்வதற்கான வழி என்று முடிவு செய்து நடிகர் தனுஷ் விவாகரத்துக்கு மறுப்பு தெரிவிக்காமல் இருந்திருக்கிறார் என்றும் கூறுகிறார் பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் அவர்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version