மொட்டை ராஜேந்திரன் குறித்து பலரும் அறியாத உண்மைகள்..!

தமிழகத்தின் ராபின் ஹுட் என்று அழைக்கப்படும் மொட்டை ராஜேந்திரனின் மொட்டை தலைக்கு பின்னால் இருக்கும் சோகமான சோக கதை பற்றி உங்களுக்கு தெரியுமா?.

இந்த மொட்டை ராஜேந்திரன் ஒரு மிகச்சிறந்த நகைச்சுவை நடிகராக தமிழ் திரை உலகில் இருக்கிறார். 2003 – ஆம் ஆண்டில் வெளி வந்த பிதாமகன் திரைப்படத்தில் நடிப்பதற்கு முன்பு பல படங்களில் சண்டை காட்சிகளில் நடித்திருக்கிறார்.

நடிகர் மொட்டை ராஜேந்திரன்..

 

இவரது கரகரப்பான குரலுக்கு பல ரசிகர்கள் இருக்கிறார்கள். தூத்துக்குடி மாவட்டத்தில் பிறந்த இவரது தந்தை மற்றும் சகோதரர்கள் திரை யில் சண்டைக் கலைஞர்களாய் இருந்ததால் அதே துறையில் இவர் ஜொலிக்க நினைத்தார்.

அந்த வகையில் திருமதி பழனிசாமி என்ற தமிழ் திரைப்படத்தில் நடிகர் சத்தியராஜ் உடன் சண்டைக்காட்சிகளில் நடித்த மூலம் தமிழ் சினிமாவின் வில்லனானார்.

தமிழ் திரைப்படங்களில் பெரிதாக வாய்ப்புகள் இல்லாத நேரத்தில் மலையாளத் திரைப்படத்திலும் நடித்திருக்கிறார். அந்த படத்தில் நடிக்கும் போது அந்த இயக்குனர் ஒரு குளத்தை காட்டி அதில் குதிக்கும் படி கூறினார்.

பொதுவாகவே சண்டைக்காட்சிகளில் நடிக்க கூடிய சண்டை கலைஞர்களுக்கு கடுமையான காட்சிகள் இருப்பதோடு மட்டுமல்லாமல் கண்ணாடிகளை உடைப்பது, ஹீரோவிடம் அடி வாங்குவது போன்ற காட்சிகள் எடுக்கப்படும்.

யாருக்கும் தெரியாத சுவாரஸ்ய உண்மைகள்..

அந்த வகையில் குளத்தில் குதிக்க சொன்ன உடனேயே அந்த குளம் எப்படிப்பட்டது என்ற விசாரிக்காமல் குளத்தில் குதித்தார் மொட்டை ராஜேந்திரன். அதன் பிறகு தான் அவர் ஊர் மக்களிடம் பேசிக் கொடுத்த போது அந்த குளம் பற்றிய ரகசியம் தெரிய வந்தது.

அது என்ன ரகசியம் தெரியுமா? உண்மையிலேயே அந்த குளம் கழிவு நீரும் சில வேதிப்பொருட்களும் கலந்து கெட்ட நீர் அதிகமாக இருக்கக்கூடிய ஒரு பாழ் அடைந்த குளம் என்பதை தெரிந்து கொண்டும் இந்த நீரில் குதித்ததால் தனக்கு ஒன்றும் ஆகாது என்று நினைத்தார்.

இதனை அடுத்து நாட்கள் செல்ல செல்ல அந்த ரசாயன குளத்தில் குதித்து குளித்ததால் நாள் அடைவில் தோளில் அலர்ஜி ஏற்பட்டதோடு மட்டுமல்லாமல் தலை முடி கொட்ட ஆரம்பித்தது.

மேலும் தலை, தாடி, மீசை, கை, கால், புருவம் என உடல் முழுவதும் இருந்த முடி உதிர்ந்து வழுக்கையாகி விட்டது.

ஆத்தாடி இவ்வளவு இருக்கா?

பொதுவாகவே வில்லன் நடிகர் என்றால் மொட்டை தலையுடன் தான் இருக்க வேண்டும் என்று பழைய படங்களை பார்க்கும் போது நீங்கள் தெரிந்து கொண்டிருப்பீர்கள். மேலும் உடற்பயிற்சி செய்து உடலை கட்டுமஸ்தாக வைத்திருப்பார்கள்.

அந்த வகையில் உடற்பயிற்சி செய்து உடலை கட்டுக்கோப்பாக வைத்திருந்த ராஜேந்திரனுக்கு தலையும் மொட்டை ஆக்கி விட ஒரு மிகச்சிறந்த வில்லனாக அவரை திரைத்துறைக்கு கொண்டு வந்து சேர்த்தது.

இதனை அடுத்து தான் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்க என்று சொல்லுவார்களே அது போல இவருக்கு எதேச்சையாக தலை மொட்டையாகி திரைப்பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது.

 

மேலும் இவரது கரகரப்பான குரலைப் பார்த்து ரசிகர்கள் மயங்கியதால் தொடர்ந்து வந்த பட வாய்ப்புகளிலும் கரகரப்பான குரலில் டப்பிங் பேசி வருவதாக சொல்லி இருக்கிறார்.

ஜென்டில்மேன் படத்தின் மூலம் நடிக்க ஆரம்பித்த இவர் ஒரு நல்ல நடிகராக சித்தரிக்கப்பட இயக்குனர் பாலா தான் காரணம் என்பது உண்மையான விஷயம். பாலாவின் திரைப்படங்களான நான் கடவுள், பிதாமகன் போன்ற படங்களில் நடித்து அசத்தியிருக்கிறார்.

இதில் நான் கடவுள் என்ற படம் இவருக்கு ஒரு நல்ல நடிகர் என்ற அந்தஸ்தையும் மதிப்பையும் பெற்று தந்தது. மேலும் தங்கரதம் என்ற படத்தில் மொடா குடிகாரராக நடித்து பலரும் குடியிலிருந்து வெளிவர முக்கிய காரணமாக இருந்தார்.

“காட்டு தேக்கு.. பட்ட ஜிலேபி..” நெகு நெகு தொடையை காட்டி திணறடிக்கும் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார்..!

Comments are closed.
Exit mobile version