தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை ஒரு காலகட்டத்தில் உச்ச நடிகராகவும், நடிகைகளாகவும் தங்களுக்கான மார்க்கெட்டை பிடித்து வைத்திருந்த பல பிரபலங்கள் இன்று ஆல் அட்ரஸ் இல்லாமல் மார்க்கெட்டே இல்லாமல் போனதுண்டு .
அப்படிப்பட்ட நடிகர் பற்றி தற்போது இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம். அதற்கான காரணம் என்ன என்பதை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
தமிழில் தடை செய்யப்பட்ட சினிமா பிரபலங்களை பற்றி இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம். 2000 காலகட்டத்தில் தமிழ் சினிமாவின் உச்ச நடிகையாகவும் நட்சத்திர அந்தஸ்தை பெற்றிருந்த நடிகையாகவும் பார்க்கப்பட்டவர் தான் நடிகை அசின்.
இலங்கைக்கு சென்று வாழ்க்கை இழந்த அசின்:
கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட அசின் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய அளவில் நட்சத்திர அந்தஸ்தை பிடித்து 2000 காலகட்டத்தில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டு இருந்தார்.
அவர் நடித்து வெளிவந்த முதல் திரைப்படம் எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி படமாக அமைந்ததோடு அவர் மிகச்சிறந்த அறிமுக நடிகையாக பார்க்கப்பட்டார் .
திரைப்படத்துறைக்கு வருவதற்கு முன்னர் விளம்பர மாடல் அழகியாக இருந்து வந்தார். ஒல்லி பெல்லியான தோற்றத்தோடு நல்ல வசீகரிக்கும் அழகைக் கொண்டு ஹோமிலியாக எல்லோரது கவனத்தையும் ஈர்த்தார்.
முதல் படத்தை தொடர்ந்து அடுத்ததாக சூர்யாவின் கஜினி திரைப்படத்தில் நடித்து இந்திய சினிமாவில் மிகப்பெரிய அளவில் புகழ்பெற்ற நடிகையாக பார்க்கப்பட்டார்.
அதைத்தொடர்ந்து வரலாறு, போக்கிரி, வேல், தசாவதாரம் உள்ளிட்ட பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து நட்சத்திர நடிகையாக அந்தஸ்தை பிடித்திருந்தார் அசின்.
லேடி சூப்பர் ஸ்டார் ஆக இருக்கும் நடிகை நயன்தாராவே இவர் நடித்த திரைப்படத்தில் செகண்ட் ஹீரோயினாக நடித்திருக்கிறார் .
அந்த அளவுக்கு அசின் மிகப்பெரிய நடிகையாக பார்க்கப்பட்டு வந்தார். சினிமாவில் ஸ்ரீதேவி மாதிரி வரவேண்டும் என ஆசைப்பட்டு கடைசியில் ஒன்றும் இல்லாதவராக போய்விட்டார் அசின்.
காரணம் 2011 ஆம் ஆண்டு ஹிந்தியில் ரெடி என்ற திரைப்படம் வெளியாகியிருந்தது. அப்படத்தின் ஷூட்டிங் இலங்கையில் நடைபெற்றது. அங்கு சென்ற அசின் தன்னுடைய சினிமா வாழ்க்கையே முடித்துக் கொண்டார்.
காரணம் அந்த சமயத்தில் ஸ்ரீலங்காவுக்கும் தமிழ்நாட்டிற்கும் மிகப்பெரிய போர் நடந்து கொண்டிருந்தது. இதனால் அசினுக்கு எதிர்ப்புகள் அதிகரிக்க அவர் சினிமா கெரியரை இழந்துவிட்டார். இதனால் தமிழ் சினிமாவில் அவர் தடை செய்யப்பட்ட நடிகையாகிவிட்டார்.
மீடூவால் அழிந்துபோன சின்மயி:
அடுத்த லிஸ்டில் இருப்பவர் பாடகர் சின்மயி, தமிழ் சினிமாவின் பிரபல பாடகியான சின்மயி தமிழ் சினிமாவில் பல்வேறு ஹிட் பாடல்களையும், மெல்லிய குரலில் பல சூப்பர் ஹிட் பாடல்களையும் பாடி பிரபலமாக இருந்து வாதார்.
தமிழ் சினிமாவின் பிரபல பாடகியாக இருந்து வந்த சின்மயி தென்னிந்திய சினிமாவில் தமிழ் தெலுங்கு உள்ளிட்ட பழமொழி படங்களுக்கு பாடல் பாடி பிரபலமான பாடகியாக இருந்து வந்தார்.
ஏ ஆர் ரகுமான இசையமைப்பில் கன்னத்தின் முத்தமிட்டால் படத்தில் “ஒரு தெய்வம் தந்த பூவே” பாடலின் மூலம் பாடகியாக அறிமுகமானார்.
தொடர்ந்து பல்வேறு சூப்பர் ஹிட் பாடல்கள் பாடியுள்ளார். எனக்கு உனக்கு, பாய்ஸ், அறிந்தும் அறியாமலும், சண்டக்கோழி போன்ற பல்வேறு திரைப்படங்களில் மெல்லிய குரலுக்கு சொந்தக்காரியாக பாடல் பாடி ஒட்டுமொத்த ரசிகர்களின் மனம் கவர்ந்த பாடகியாக இருந்து வந்தார்.
இதனிடையே பீக்கில் இருந்த போது இவர் 2018 ஆம் காலகட்டத்தில் மீடூ பிரச்சனையை ஆரம்பித்து அது பெரிய பூதாகரமான விஷயமாக வெடிக்கத் தொடங்கியது.
வைரமுத்து உள்ளிட்ட பல பிரபலங்களின் அந்தரங்க விஷயங்கள் வெளிப்படையாக பேசியதன் மூலமாக. திரைப்படத்துறையை சேர்ந்த பல பேர் அவருக்கு கங்கணம் கட்டி விட்டார்கள்.
இதனால் டப்பிங் ஆர்டிஸ்ட் யூனியனிலிருந்து தடை செய்து விட்டார்கள். அதை அடுத்ததாக நடிகர் வடிவேலு வடிவேலு தமிழ் சினிமாவின் உச்ச காமெடி நடிகராக மிகப்பெரிய நட்சத்திர அந்தஸ்தில் இருந்து வந்தார்.
விஜய்காந்த்தை இழிவாக பேசி நாசமான வடிவேலு:
இவர் இல்லாத படங்களே இல்லை என்ற அளவுக்கு தனக்கான இடத்தை ஆழமாக தக்க வைத்துக் கொண்டிருந்தார்.
அந்த சமயத்தில் அரசியல் விஷயங்களில் மூக்கை நுழைத்து தனது சினிமா வாழ்க்கையை கெடுத்துக் கொண்டார்.
ஆம், திமுக கட்சியினருடன் சேர்ந்துக் கொண்டு தேமுதிக கட்சியின் தலைவரான விஜயகாந்த்தை பற்றி எல்லா இடங்களிலும் மிக மோசமாக பேசி அசிங்கப்படுத்தினார் வடிவேலு.
விஜயகாந்தை இழிவாக பேசியதன் மூலமாக வடிவேலு சினிமா துறையில் இருந்தே தூக்கியடிக்கப்பட்டார். கிட்டத்தட்ட 10 வருடங்களாக அவர்களுக்கு சினிமா வாய்ப்பை கொடுக்காமல் ஒதுக்கி விட்டார்கள். இதனால் வடிவேலு சினிமாவில் தடை செய்யப்பட்ட காமெடி நடிகராக இருந்து வந்தார்.