1992 மகாராஷ்டிராவின் நாக்பூரில் பிறந்தவர் மிருணாள், தனது குழந்தை பருவத்தில் இருந்து நடிப்பின் மீது பேரார்வம் கொண்டவர்.
அவரின் கலைப்பயணத்திற்கு அவரது குடும்பம் பெரும் ஆதரவாக இருந்துள்ளது. இவரது தந்தை உதய சிங் தாகூர் யூனியன் பாங்க் ஆப் இந்தியாவில் உதவி மேலாளராக பணிபுரிகிறார்.
மிருணாளுக்கு அக்கா மற்றும் தம்பி உள்ளனர். இவர் பள்ளி படிப்பை முடித்த பின்பு மும்பையில் உள்ள கிஷன் சந்த செல்லாராம் கல்லூரியில் பத்திரிக்கை இயலில் இளங்கலையில் பட்டம் பெற்றார்.
கல்லூரியில் படிக்கும் போது, ஸ்டார் பிளஸ் தொடரான முஜ்சே குச் கெஹ்தி…யே காமோஷியான் என்ற தொடரில் மோஹித் சேகலுக்கு ஜோடியாக கௌரி போஸ்லேவாக தாகூர் நடித்தார்.
இப்படி முதலில் தொலைக்காட்சி வாயிலாக தனது கலை பயணத்தை தொடர்ந்தார். மராத்தி படங்களிலும் இவர் நடித்துள்ளார்.
இவருக்கு நடிப்பில் பெரும் பெயர் வாங்கிக் கொடுத்தது கும்கும் பாக்யா என்னும் நெடுந்தொடரில் தொடரில் இவர் புல்புல் எனும் கதாபாத்திரத்தை ஏற்று அர்ஜீத்துக்கு ஜோடியாக நடித்திருப்பார்.
கும்கும் பாக்யா மூலம் பிரபலமான மிருணால் தொடர்ந்து பல படங்களில் நடித்தார். அன்பு சோனியா, ஜெர்சி, சூப்பர் 30, தமாக்கா, சீதா ராம், பேய் கதைகள் போன்றவை குறிப்பிடத்தக்கது.
இவர் நடித்த அன்பு சோனியா திரைப்படம் இந்தோ அமெரிக்கா திரைப்படமாகும். சூப்பர் 30 என்ற திரைப்படத்தில் பாலிவுட்டின் பிரபலமான நடிகர் ஹிருத்திக் ரோஷன் உடன் இணைந்து நடித்திருந்தார்.
இவரது நடிப்புத் திறனை பார்த்த அமீர் கான் அவர்கள் தனது தக்ஸ் ஆப் இந்தோஸ்தான் திரைப்படத்தில் நடிக்க அழைப்பு விடுத்திருந்தார். ஆனால், மிருணால் அப்பட வாய்ப்பை நிராகரித்ததாக இணையத்தில் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியது. அதற்கு மிருணால் இப்பட வாய்ப்பின் மூலம் தனது சர்வதேச கேரியர் பாதிக்கப்படும் என்பதால் மறுத்ததாக தெரிவித்துள்ளார்.
மிருணால் எழுத்தாளரான சரத் சந்திர திரிபாதியுடன் டேட்டிங் செய்வதாகவும் சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பரவி வருகிறது.தொலைக்காட்சி தொடர் மூலம் அறிமுகமாகி, தற்போது பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் மிருணால் தாகூர்.