“இயற்கை வலி நிவாரணி மூக்கிரட்டை..!” – மூலிகை பற்றி தெரிந்து கொள்ளலாமா?

என்ன வயதானாலும் எவ்வளவு வலி இருந்தாலும் உங்களுக்கு அந்த வலியை எளிதில் நிவாரணம் செய்யக்கூடிய மூக்கிரட்டை மூலிகை பற்றி நீங்கள் தெரிந்து கொள்வது மிகவும் அவசியமானது. சாதாரணமாக அனைத்து இடங்களிலும் படர்ந்து வளரக்கூடிய இந்த செடி தென் மாவட்டங்களில் அதிக அளவு இருக்கும்.

இன்னும் கிராமப்புறங்களில் கீரைகளோடு இணைத்து இதையும் ஒரு கீரையாகவே அவர்கள் உணவில் சாப்பிட்டு வருவது எத்தனை பேருக்கு தெரியும்.

 மூக்கிரட்டையை உண்ணும் போது அது உடல் உறுப்புகளில் இருக்கக்கூடிய நோய்களை சரி செய்து விடும் என்று முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள்.

 முட்டுகளில் ஏற்படும் வலிகளுக்கு அருமருந்தாக இருக்கும் இந்த கீரையை கடைசலாக்கி உண்ணும் போது முட்டு வலி என்ற பேச்சுக்கே இடம் இருக்காது.

 மேலும் புற்றுநோய் வரக்கூடிய அறிகுறிகள் இருந்தால் உடனே அந்த செல்களை ஆரம்பகட்டத்திலேயே அழித்துவிடக்கூடிய அற்புத ஆற்றல் இந்த மூக்கிரட்டை கீரைக்கு உள்ளது.

 நீங்கள் இளமையாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தால் வாரத்தில் ஒரு முறை இந்த மூக்கிரட்டையை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இது சருமங்களை பராமரிக்க உதவுவதோடு உங்கள் செல்களை புதுப்பிக்க உதவி செய்வதால் நீங்கள் எப்போதும் இளமையோடு காட்சியளிப்பீர்கள்.

 மனதை மட்டுமல்ல மூளையையும் ஆற்றலோடு சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளக்கூடிய வேதிப்பொருட்களை கொண்டிருக்கக் கூடிய இந்த மூக்கிரட்டை கீரையை உண்ணும் குழந்தைகள் எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பார்கள். எனவே இளம் வயதிலிருந்தே இந்தக் கீரையை உங்கள் வீட்டு குழந்தைகளுக்கு கொடுக்க பழக்கப்படுத்தி விடுங்கள்.

 கண் பார்வை கோளாறு இருப்பவர்கள் இந்த மூக்கிரட்டை கீரையும், பொன்னாங்கண்ணி கீரையும் சம அளவு எடுத்து மோரில் கலந்து குடித்தால் கண் பார்வை சீராகும்.

 உடலில் மெட்டபாலிசத்தை அதிகரிக்க கூடிய எந்த முக்கிரட்டை கீரையை பாசிப்பருப்போடு சேர்த்து வேகவைத்து சாப்பிடுவதின் மூலம் உங்களுக்கு எண்ணிலடங்கா நன்மைகள் கிடைக்கும்.

இரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து சுவாசப் பிரச்சனையை சீராக்கக் கூடிய தன்மை இந்த கீரைக்கு உள்ளது.

 சளி,மூக்கடைப்பு, தொண்டை சம்பந்தப்பட்ட சுவாச பிரச்சனைகளை சீராக்கக் கூடிய சக்தி இந்த மூக்கிரட்டை கீரைக்கு இருப்பதால் நீங்கள் கட்டாயம் இதை பயன்படுத்தி வாருங்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …