என்னோட அந்த வீடியோவை யாரும் ஷேர் பண்ணாதிங்க.. கண்ணீர் விட்டு கதறும் மும்தாஜ்..!

கவர்ச்சி புயலாக வலம் வந்த நடிகை மும்தாஜ் பற்றி அதிகம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இவர் தனது அற்புத கவர்ச்சியால் ரசிகர்கள் அனைவரையும் கட்டி போட்டு ஆண்டவர்.

மேலும் தமிழ் திரையுலகில் பல நடிகைகள் வருகிறார்கள். வந்த வேகத்திலேயே செல்கிறார்கள். ஆனாலும் சில நடிகைகள் மட்டும் தான் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் ரசிகர்களின் மனதில் நச்சென்று பதிந்தவர்களாக வாழ்கிறார்கள்.

நடிகை மும்தாஜ்..

அப்படி ரசிகர்களின் மத்தியில் இன்றும் தனக்கு என்று ஒரு இடத்தை நிரந்தரமாக பிடித்து வைத்திருக்கும் நடிகை மும்தாஜ் மோனிஷா என் மோனோலிசா என்ற திரைப்படத்தில் டி ராஜேந்திரனால் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்.

இன்னும் இந்த படத்தில் இடம் பிடித்த ஹலோ ஹலோ உயிரே வா உறவே வா பாடல்கள் பெரிய அளவில் கீட்டை கொடுத்ததோடு ரசிகர்களின் மத்தியில் இவருக்கு ஒரு நல்ல ரீச்சை கொடுத்தது.

இதனை அடுத்து தமிழ் சினிமாவில் இவருக்கு பட வாய்ப்புகள் அடுக்கடுக்காக வந்து சேர்ந்தது. அந்த வரிசையில் இவர் நடிப்பில் வெளி வந்த மலபார் போலீஸ், பட்ஜெட் பத்மநாபன், சாக்லேட் உள்ளிட்ட படங்கள் இவருக்கு வெற்றியை பெற்று தந்தது.

மும்தாஜை பொருத்த வரை இவர் நடிக்கின்ற படங்களில் ஏதாவது ஒரு பாடல் கண்டிப்பாக ரசிகர்களின் மத்தியில் பேமஸான பாடலாக மாறிவிடும். அந்த வகையில் குஷி படத்தில் விஜய் உடன் நடிக்கும் போது கட்டிபுடி கட்டிபுடிடா என்ற பாடல் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானது.

அதை போலவே சாக்லேட் பாயாக வலம் வந்த பிரசாந்தோடு சேர்ந்து மலை மலை மல்லே மல்லே மருத மலை மல்லே என்ற பாடலுக்கு ஆட்டம் போட்டு ரசிகர்களின் மனதில் குற்றால சாரலை ஏற்படுத்தி விட்டார்.

அத்துடன் கவர்ச்சி வேடங்களில் நடித்த இவர் வில்லியாகவும் சில படங்களில் நடித்து அசத்தியிருக்கிறார். மேலும் தெலுங்கு படங்களில் நடித்த இவர் திடீரென்று சினிமாவை விட்டு விலகி சென்று விட்டார்.

என்னோட வீடியோவை யாருக்கும் ஷேர் பண்ணாதீங்க..

இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்தியதை அடுத்து அவரது பழைய பேட்டி ஒன்று தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

இதற்கு காரணம் கவர்ச்சி புயலாக ரசிகர்களை மிரட்டியவர் தற்போது ஆன்மீகவாதியாக மாறி பேசி இருக்கும் பேச்சைக் கேட்டு அனைவரும் அதிர்ந்து போயிருக்கிறார்கள்.

அது மட்டுமல்லாமல் இவர் அல்லாவே என்னுடைய தவறுகளை புரிந்து கொள்ளத் துணை நின்றதாகவும் இதனை அடுத்து தற்போது தெரிந்து விட்டதாகவும் சொல்லியிருக்கிறார்.

மேலும் தனது கடந்த காலத்தை பற்றி யாரும் தேடாதீர்கள். இப்போது உள்ள இளம் ரசிகர்களுக்கு நான் யார் என்பது தெரியாது. அது அப்படியே இருந்து விடட்டும். என்னுடைய பழைய புகைப்படத்தையும், வீடியோக்களையும் யாருக்கும் காட்டாதீர்கள் என்பதை வேண்டுகோளாக விடுத்திருக்கிறார்.

கதறி அழும் மும்தாஜ்..

அது மட்டுமில்லாமல் தன்னுடைய முழுமையான தவறுகளை உணர்ந்ததை அடுத்து கடவுளைத் தேடி தன்னுடைய பயணம் இருப்பதால் இதை உங்களிடம் வேண்டுகோளாக விடுகிறேன் என்று கதறி அழுது மனம் உருக அந்த பேட்டியில் பேசிய இடம் பற்றி ரசிகர்கள் அவர்களுக்குள் பேசி வருகிறார்கள்.

இந்த விஷயத்தை அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து வருவதால் இணையத்தில் அதிக அளவு பேசப்படுகின்ற விஷயங்களில் ஒன்றாக மாறிவிட்டது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version