“இதுக்கு நான் பதில் சொல்ல விரும்பல.. நான் பட வாய்ப்புக்காக இதை..” நடிகை மும்தாஜ் ஓப்பன் டாக்..!

இயக்குனர், நடிகர், இசையமைப்பாளர் என பன்முக திறமையை கொண்ட நடிகர் டி ராஜேந்திரன் தான் இயக்கிய மோனிஷா என் மோனோலிசா என்ற திரைப்படத்தில் அறிமுக நாயகியாக அறிமுகப்படுத்தப்பட்டவர் தான் நடிகை மும்தாஜ்.

இதையும் படிங்க: திருமணதிற்கு முன்பே என்னை கர்ப்பம் ஆக்கியது இவரு தான்.. இலியானா வெளியிட்ட புகைப்படம்..!

இவர் தனது முதல் படத்திலேயே அற்புதமான நடிப்பை வெளிப்படுத்திய இவருக்கு அடுத்தடுத்து தமிழ் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. மேலும் தமிழ் படங்கள் மட்டுமல்லாமல் மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் நடித்து அசத்தியிருக்கிறார்.

நடிகை மும்தாஜ்..

இஸ்லாமியரான நடிகை மும்தாஜ் 1999-இல் மலபார் போலீஸ் படத்தில் கேரளத்து பெண்ணாக நடித்து அனைவரது மனதிலும் இடம் பிடித்தார். இதனை அடுத்து உனக்காக எல்லாம் உனக்காக என்ற படத்தில் நடித்து ரசிகர்களின் வட்டாரத்தை அதிகரித்துக் கொண்டார்.

அத்தோடு 2000 ஆவது வருடத்தில் பட்ஜெட் பத்மநாபன், குஷி போன்ற படங்களில் நடித்த இவர் 2021-இல் சொன்னால் தான் காதலா, ஸ்டார் ,வேதம், சாக்லேட், மிட்டா மிராசு போன்ற படங்களில் நடித்து அசத்தியதோடு நடனத்திலும் வெகுவாக ரசிகர்களை கவர்ந்தார்.

குறிப்பாக இவர் மல மல பாட்டுக்கு ஆடிய நடனம் இன்று வரை ரசிகர்களின் மத்தியில் தனி இடம் பிடித்துள்ளது என்று சொல்லலாம். அந்த அளவு தனது குலுக்கள் ஆட்டத்தால் அனைவரையும் கவர்ந்து இழுத்தவர்.

இதனை அடுத்து 2002-ஆம் ஆண்டு விவகாரமான ஆளு, ரோஜா கூட்டம், ஏழுமலை போன்ற படங்களில் நடித்த இவர் 2003-வது தத்தித் தாவுது மனசு போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.

அது போல 2004-ல் மகா நடிகன், குத்து, ஏய், செல்லமே போன்ற படங்களில் நடித்த இவர் 2005-ல் தேவதையை கண்டேன், லண்டன் படத்தில் நடித்து ரசிகர்களின் நிரந்தர கனவு கன்னியாக மாறினார்.

பட வாய்ப்புக்காக இத..

இதனை அடுத்து நடிகை மும்தாஜ் அண்மை பேட்டி ஒன்றில் மனம் உருக பேசியிருக்கிறார். இந்த பேட்டியில் தற்போது ஒரு முழுமையான இஸ்லாமிய பெண்ணாக வாழ்ந்து கொண்டிருப்பதாக கருத்துக்களை சொன்னார்.

மேலும் அவர் கடந்த காலத்தில் நடந்தவை, தான் அணிந்த ஆடைகள், ஆடிய நடனங்கள் எவ்வளவு மோசமான உடைகளை அணிந்து கொண்டு நின்றிருக்கிறோம் போன்ற நினைவுகள் தன்னை மிகவும் கஷ்டப்படுத்தி வருவதாக சொல்லி இருக்கிறார்.

அத்தோடு அதிலிருந்து வெளியே வர கடுமையான முயற்சியை செய்து கொண்டிருக்கிறதாகவும் தற்போது எந்த ஒரு பட வாய்ப்பும் தனக்கு இல்லாததால் தான் ஹிஜாப் அணிந்து கொண்டு முஸ்லிமாக மாறிவிட்டார் என்று தன்னை பற்றி பலரும் பல்வேறு கருத்துக்களை கூறி வருகிறார்கள்.

இதுக்கு பதில் சொல்ல விரும்பல..

அது போன்ற கருத்துக்களுக்கு நான் பதில் சொல்ல விரும்பல.. ஆனால் இப்போதும் எனக்கு பட வாய்ப்புகள் வந்து கொண்டு தான் இருக்கிறது. எனினும் நான் தான் அதை வேண்டாம் என்று ஒதுக்கி வைத்து இருக்கிறேன்.

இனி எஞ்சிய வாழ் நாளில் ஒரு இஸ்லாமிய பெண்ணாக அல்லாஹ்வின் ஆசீர்வாதத்துடன் வாழ நான் ஆசைப்படுகிறேன். எனக்கும் குழந்தைகள் குடும்பம் என வாழ ஆசையாக தான் உள்ளது.

ஆனால் என்னுடைய கடந்த காலமும் தற்போதைய உடல் நிலையும் அதற்கு ஒத்துழைக்குமா? என்று தெரியவில்லை. மேலும் அது ஒரு கேள்விக் குறியாகவே உள்ளது.

இதையும் படிங்க: சினிமா நடிகைகளை மிஞ்சும் கவர்ச்சி.. பிக்பாஸ் ஜூலியை பார்த்து காலியான ரசிகர்கள்..!

இப்படி கண்ணீர் சிந்தி பேசி இருக்கும் நடிகை மும்தாஜின் பேட்டியை பார்த்து ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சியில் இருக்கிறார்கள். யாருமே எதிர்பார்க்காத பதிலை சொல்லி இருக்கும் மும்தாஜில் ஓப்பன் டாக் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version