” சாப்பிட மீண்டும் மீண்டும் தூண்டும் முருங்கைக் கீரை..! கூட்டுச் சாறு வைப்பது எப்படி தெரிந்து கொள்ளலாமா?

பொதுவாகவே கீரைகளில் மிகச் சிறந்த கீரை முருங்கை கீரை என்று கூறலாம். இந்த முருங்கைக் கீரையில் எல்லோருக்கும் தேவையான இரும்பு சத்து அதிக அளவு இருப்பதால் தினமும் ஒரு கைப்பிடி அளவு முருங்கைக் கீரையை ஒவ்வொருவரும் உணவில் சேர்த்துக் கொள்வதில் நலன் கொடுக்கும்.

 அப்படிப்பட்ட எந்த முருங்கைக் கீரையை பொறியலாகவோ குழம்பாகவோ செய்தால் யாரும் அதிக அளவு விரும்பி உண்பதில்லை. அப்படி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணக்கூடிய முருங்கைக்கீரை கூட்டுச் சாறு எப்படி செய்வது என்பதை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

முருங்கைக் கீரை கூட்டுச் சாறு செய்ய தேவையான பொருட்கள்

1.முருங்கைக் கீரை ஒரு கப்

 2.கால் மூடி தேங்காய் துருவியது

3.சீரகம் சிறிதளவு

5.பூண்டு இரண்டு பல்

6.உப்பு தேவையான அளவு

7.மஞ்சள் பொடி ஒரு சிட்டிகை.

8.பருப்பு ஒரு கப்

9.தக்காளி ஒன்று 10.வரமிளகாய் நான்கு

செய்முறை

முதலில் ஒரு  தேங்காய், சீரகம், பூண்டு,வரமிளகாய் இவற்றை மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு அரைத்து வைத்து கொள்ளுங்கள்.

 பிறகு அடுப்பில் வாணலியில் சிறிதளவு தேங்காய் எண்ணெயை ஊற்றி கீரையை போட்டு நன்கு கிளறி  சிறிதளவு உப்பு  வேக தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேக விடவும்.

 பச்சை நிறம் மாறாத போதே நீங்கள் அது வெந்து விட்டதா என்று பார்த்து விடுங்கள். வெந்த பிறகு எடுத்து வைத்திருக்கும் ஒரு கப் பருப்பை அதில் போட்டு நன்கு கிளறி விடவும்.

 பின்னர் அரைத்து வைத்திருக்கும் கலவையைக் கொட்டி நன்கு கிளறி விடவும். இந்த கலவையில் பச்சை வாசம் போகும் வரை நீங்கள் அடுப்பில் ஒன்று முதல் இரண்டு கொதிகள் வரும் வரை காத்திருக்கவும்.

 இதனை அடுத்து பச்சை தேங்காய் எண்ணையை இதை மேல் ஊற்ற வேண்டும். இப்போது சூடான சுவையான பிள்ளைகள் விரும்பி சுவைக்க கூடிய  முருங்கைக் கீரை கூட்டுச் சாறு தயார்.

 இதை நீங்கள் சுடச்சுட உங்கள் சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம் அல்லது கேழ்வரகு கடியோடு சாப்பிடும்போது இன்னும் கூடுதல் சுவையோடு இருக்கும்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …