இந்திய திரையுலகில் மிக முக்கிய இசையமைப்பாளர்களில் ஒருவராக திகழும் ஆஸ்கார் நாயகன் ஏ ஆர் ரகுமான் பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.
பல திரைப்படங்களுக்கு இசை அமைத்திருக்கக்கூடிய இவரின் மகளும் தற்போது இசை அமைப்பாளராக மாறி இருப்பதை அடுத்து பலரும் வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் இருக்கிறார்கள்.
ஃபிரண்டா நினைச்சு பேச..
ஏ ஆர் ரகுமானின் மகள் தற்போது மின்மினி என்ற படத்திற்கு இசை அமைத்து இசை அமைப்பாளராக வலம் வருகிறார். இதில் இவரது சிறப்பான இசை அமைப்பை பார்த்து ரசிகர்கள் பிரமித்ததோடு மட்டுமல்லாமல் தன் தந்தையைப் போலவே தனது இசை திறமையை வெளிப்படுத்தி இருப்பதாக சொல்லி இருக்கிறார்கள்.
இந்நிலையில் அண்மை பேட்டி ஒன்றில் கத்தீஜா பேசும் போது தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை சுவாரஸ்யமாக பகிர்ந்திருக்கிறார். அது பற்றி விரிவாக இந்த பதிவில் நீங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்.
இந்த பேட்டியின் போது அவரிடம் ஏ ஆர் ரகுமானின் மகள் என்பதற்காகவே உங்களிடம் பலர் நெருங்கி பழக முயற்சி செய்வார்கள். அவர்களை எப்படி அடையாளம் கண்டுபிடித்து உங்களுக்காக பேசுகிறார்களா? அல்லது உங்கள் தந்தைக்காக பேசுகிறார்களா? என்பதை கண்டுபிடிப்பீர்கள் என்று கேட்கப்பட்டது.
இந்தக் கேள்வி பலரது கவனத்தை ஈர்த்த நிலையில் இது பற்றி கத்தீஜா சொல்லும் போது பள்ளி பருவத்தில் இருந்தே தனக்கு அந்த பிரச்சனை உள்ளதாக சொல்லி இருக்கிறார். மேலும் வட இந்தியாவை சேர்ந்தவர்கள் ஒரு குரூப்பாக இருப்பார்கள். தமிழ்நாட்டைச் சேர்ந்த நாங்கள் அனைவரும் ஒரு குரூப்பாக இருப்போம் என கூறினார்கள்.
அப்போதெல்லாம் நான் ஏ ஆர் ரகுமான் மகள் என்பதற்காகவே அவர்கள் என்னோடு வந்து பேசுவார்கள் அது எனக்கு மிகவும் நன்றாக தெரிந்தது.
மனம் விட்டு பேசிய ஏ ஆர் ரகுமான் மகள் கத்தீஜா..
ஆனால் தற்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். அது போன்ற நண்பர்கள் தற்போது எனக்காக பேசுகிறார்கள்.இதற்கு காரணம் மின்மினி வந்த பிறகு எனக்கு என்று ஒரு தனி வட்டம் உருவாகி உள்ளது.
இதைத் தொடர்ந்து தற்போது என்னிடம் பேச வருபவர்கள் எல்லோரும் முழுக்க முழுக்க கத்தீஜாவுக்காக வந்து பேசியவர்கள் என்பதை நான் அவர்கள் பேசியதை வைத்து புரிந்து கொண்டேன்.
அதுமட்டுமல்லாமல் ஏதாவது காரியம் வேண்டும் என்பதற்காகவே சிலர் என்னிடம் வந்து பேசுவார்கள். ஆரம்பத்தில் இவர்கள் நண்பர் போல பழகிவிட்டு காரியம் ஆனதும் எங்கு செல்வார்கள் என்றே தெரியாது. இது மனதுக்கு மிகவும் கஷ்டமாக இருக்கும் என பேசியது பலரையும் கவரக்கூடிய வகையில் இருந்தது.