அட என்ன லிஸ்ட் நீளமா இருக்கு.. மக்கா படிச்சு பாருங்க.. சுவாரஸ்யமான முஸ்லிம் நடிகர்கள் பட்டியல்!!

தமிழ் திரைப்படங்களில் பல்வேறு மதத்தை சார்ந்த நடிகர் மற்றும் நடிகைகள் நடித்து வருவது உங்களுக்கு நன்றாக தெரியும் திரை உலகப் பொருத்த வரை மத இன வேறுபாடு இல்லாமல் நடிக்கின்ற அனைவரையும் கலைஞர்களாக பார்த்து அவர்களுக்கு மக்கள் ஆதரவை தந்து வருகிறார்கள்.

அந்த வகையில் இன்றைய பதிவில் முஸ்லிம் நடிகர்கள் மற்றும் நடிகைகள் யார் யார் திரை உலக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்கள் என்ற விவரங்களை விரிவாக படித்து தெரிந்து கொள்ளலாம்.

தமிழ் திரை உலகில் முஸ்லிம் நடிகைகள்..

தமிழ் திரை உலகில் அன்று முதல் இன்று வரை பல முஸ்லிம் நடிகைகள் நடித்திருக்கிறார்கள். அந்த வகையில் இன்றும் எவர்கிரீன் நடிகையாக திகழும் நதிகை நதியா ஒரு முஸ்லிம் பெண் என்பது உங்களுக்கு தெரியுமா? இவரது உண்மையான பெயர் ஜெரினா மொய்து என்பதாகும்.

இவரை அடுத்து சின்னத்தம்பி திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்து தென்னிந்திய திரை உலகில் பப்ளி நடிகையாக வலம் வந்த நடிகை குஷ்புவின் இயற்பெயர் நக்கத் கான் என்பதாகும்.

போயா போ என்ற வசனத்தின் மூலம் புகழ்பெற்ற நடிகையாக திகழ்ந்த நடிகை சதாவின் இயற்பெயர் சதாப் முஹம்மத் சையத் என்பதாகும். இவரும் முஸ்லிம் இனத்தைச் சேர்ந்த நடிகை தான்.

மல மல மருதமலை பாடலில் தனது எடுப்பான அழகை காட்டி தற்போது மதகுருமாராக மாறியிருக்கும் நடிகை மும்தாஜ் பற்றி சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. இளைஞர்களின் கனவு கன்னியாக திகழ்ந்த இவர்கள் இயற்பெயர் நக்மா கான் என்பதாகும்.

நடிகை தபு, நடிகை நஸ்ரியா நசீம், நடிகை அதிதி ராவ் ஹைதராரி போன்ற நடிகைகளும் முஸ்லிம் சமுதாயத்தை சார்ந்தவர்கள் என்பது இப்போது உங்களுக்கு புரிந்து இருக்கும்.

முஸ்லிம் நடிகர்கள் பட்டியல்..

அண்மையில் வாரிசு படத்தில் தளபதி விஜய் உடன் இணைந்து நடித்த நடிகர் ஷாம் ஒரு முஸ்லிம் நடிகர் என்பது உங்களுக்கு தெரியுமா? இவரது இயற்பெயர் சியாம்சுதீன் இப்ராகிம் என்பதாகும்.

 

திரையுலகில் பன்முக திறமையை கொண்டிருக்கும் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளரான நடிகர் ராஜ்கிரண் முஸ்லிம் நடிகராக திகழ்கிறார் இவரது இயற்பெயர் முகதீன் அப்துல் காதர் என்பதாகும்.

அடுத்ததாக நீங்கள் பார்க்க இருக்கும் நடிகர் வேறு யாருமில்லை பாஸ் என்கிற பாஸ்கரன் திரைப்படத்தில் பட்டையை கிளப்பிய நடிகர் ஆர்யா. இவரின் இயற்பெயர் ஜம்ஸத் சேதிராகத்.

பெண்களின் மனதில் சாக்லேட் பாயாக வலம் நடிகர் அப்பாஸ் ஒரு முஸ்லிம் என்பது உங்களுக்கு தெரியுமா? இவரது இயற்பெயர் மிராஸ் அப்பாஸ் அலி என்பதாகும்.

இவரைப் போலவே விஜயின் திரைப்படமான வேட்டைக்காரன் திரைப்படத்தில் நடித்த சலீம் கௌஸ் ஒரு இஸ்லாமிய நடிகர் ஆவார். இவரைப் போலவே வில்லன் கேரக்டர்களை பக்காவாக செய்த நடிகர் நாசர் ஒரு முஸ்லிம் நடிகர்.

மேலும் நடிகர் மம்முட்டி, நடிகர் ரகுமான், நடிகர் மன்சூர் அலிகான், மறைந்த நடிகர் கொச்சின் ஹனிபா, நடிகர் ரியாஸ் கான்,மருத்துவ துறையில் படித்து பட்டம் பெற்ற நடிகர் அஜ்மல் அமீர், இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் போன்ற பலரும் முஸ்லிம் மதத்தைச் சார்ந்தவர்கள்.

இந்தப் பதிவின் மூலம் உங்களுக்கு முஸ்லிம் மதத்தைச் சார்ந்த நடிகர் மற்றும் நடிகைகள் யார் யார் தமிழ் திரை உலகில் மட்டுமல்லாமல் இந்திய அளவில் தங்களது பங்களிப்பை தந்து வருகிறார்கள் என்பது உங்களுக்கு தெள்ளத் தெளிவாகப் புரிந்து இருக்கும் என நம்புகிறோம்.

உங்களுக்கு எதைத் தவிர வேறு முஸ்லிம் நடிகர்களின் பெயர்கள் தெரிந்திருந்தால் கட்டாயம் கமெண்ட்ஸ் செக்ஷனில் அவர்களது பெயர்களை நீங்கள் பதிவிடலாம்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version