அந்த இடத்தில் என் வருங்கால கணவர் செய்த வேலை.. வரலட்சுமி சொன்னதை கேட்டீங்களா..?

தமிழ் சினிமாவில் தைரியமான மிகவும் திறமைசாலியான நடிகையாக பார்க்கப்படுபவர் தான் வரலட்சுமி சரத்குமார்.

இவர் பிரபல நடிகரும் அரசியல்வாதியும் ஆன சரத்குமாரின் மகள் என்பதால் வாரிசு நடிகையாக தமிழ் சினிமாவில் பார்க்கப்படுகிறார்.

வரலக்ஷ்மி சரத்குமார்:

அறிமுகமானது என்னவோ அப்பா சரத்குமாரின் சிபாரிசின் பெயரில்தான் என்றாலும் கூட அவர் தனது திறமையால் தனக்கான தனி இடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.

சரத்குமார் எவ்வளவோ வேண்டாம் என எதிர்த்த போதும் அவர் நடிகையாக வேண்டும் என்ற தனக்குள் இருந்த ஆசையை தனது அப்பாவிடம் சொல்லி அதற்கான அனுமதி வாங்கி தான் நடிக்கவே வந்தார்.

அதற்காக வரலட்சுமி தாயார் சாயா மற்றும் ராதிகா உள்ளிட்டோர் சரத்குமாரிடம் அனுமதி கேட்டு வரலட்சுமியை நடிக்க அனுமதியுங்கள் என கேட்ட பின்னரே அவர் அனுமதித்ததாக பேட்டிகளில் கூறியிருக்கிறார்.

போடா போடி திரைப்படத்தின் மூலமாக 2012 ஆம் ஆண்டு சிம்புவுக்கு ஜோடியாக நடித்து அறிமுகம் ஆனார். முதல் படத்திலேயே வேற லெவலுக்கு ஸ்கோர் செய்துவிட்டார்.

சிறந்த நடிகையாக வரலக்ஷ்மி:

ஆம் அவரது நடிப்பு நடனம் எமோஷனல் காதல் இது எல்லாமே மிகவும் பக்காவாக இருந்தது என்று சொல்லலாம்.

விக்னேஷ் சிவன் இந்த திரைப்படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து ஒரு சில திரைப்படங்களை ஹீரோவாக நடித்து வந்தார் வரலட்சுமி.

சண்டக்கோழி மற்றும் சர்க்கார் உள்ளிட்ட திரைப்படங்களில் வில்லியாகவும் நடித்து அசத்தி இருந்தார். இதனிடையே நிக்கோலஸ் என்பவருடன் திருமணம் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்.

வரலக்ஷ்மி கிட்டத்தட்ட கடந்த 14 வருடங்களாக அவரை ரகசியமாக காதலித்து வந்ததாக செய்திகள் வெளியாகியது.

வருங்கால கணவர் செய்த வேலை:

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் முதன் முதலில் தனது காதலன் ப்ரொபோஸ் செய்தது பற்றி மனம் திறந்து பேசி இருக்கிறார் வரலட்சுமி.

அந்த பேட்டியில். முதன்முதலில் அவர் எனக்கு நார்வேயில் தான் காதல் ப்ரபோஸ் செய்தார். அந்த சமயத்தில் ரொம்ப சர்ப்ரைஸா அவர் ஒரு விஷயத்தை பண்ணார்.

அது என்ன அப்படின்னு கேட்டீங்கன்னா என்னோட அப்பா, அம்மா, ராதிகா ஆன்ட்டி மற்றும் ஒட்டுமொத்த குடும்பத்தினரையும் எனக்கே தெரியாமல் நார்வேவுக்கு அழைத்து வந்து அவர்கள் முன்னிலையில் எனக்கு காதல் ப்ரொபோஸ் செய்தார்.

அது ரொம்ப ஸ்பெஷலான ப்ரொபோஸ். எனக்கே தெரியாமல் என்னுடைய குடும்பத்தை அவரை அழைத்து வந்திருந்தார்.

அப்போதுதான் நான் நார்வேயில் ஒரு குகைக்குள் போகும்போது என்னுடைய அப்பா அந்த இடத்தில் நின்று கொண்டிருந்தார். அதை பார்த்து நான் செம ஷாக் ஆகி நீங்க என்ன பண்றீங்கப்பா? என்று கேட்டேன்.

அந்த அளவுக்கு நிகோலஸ் சர்ப்ரைஸை பிளான் செய்திருந்தார். மேலும் நான் ஹைதராபாத்தில் வசித்துக் கொண்டிருக்கிறேன் அவர் மும்பையில் வசித்துக் கொண்டிருக்கிறார்.

காதலில் உருகிய வரலக்ஷ்மி:

எங்கள் இருவருக்கும் அடிக்கடி சந்திக்கும் சந்தர்ப்பமே ஏற்பட்டதில்லை. அதனால் எப்போதாவது தான் சந்திப்போம்.

அந்த சமயங்களில் நான் அவரை ரொம்பவே மிஸ் பண்ணுவேன் என்று வரலட்சுமி கூறினார். இதை கேட்டதும் தொகுப்பாளினி நீங்களா வரலட்சுமி? மிஸ் கூட பண்ணுவீங்களா? என்று ஆச்சரியத்தோடு கேட்டார்.

ஆமாம் காதல் வந்துட்டா என்ன பண்றது? அதெல்லாம் வரும் தானே என்று மிகவும் வெட்கத்தோடு கூறினார் வரலட்சுமி.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version