இதை புரிஞ்சுகிட்டவர் தான் என் கணவர்.. முதன் முறையாக ரகசியம் உடைத்த நடிகை தமன்னா..!

இந்திய சினிமாவில் நட்சத்திர நடிகையான தமன்னா தெலுங்கு, தமிழ் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார்.

முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பிடித்திருக்கும் இவர் கலைமாமணி மற்றும் சைமா உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றிருக்கிறார்.

நடிகை தமன்னா:

நல்ல அழகான தோற்றம் பால் மேனி கொண்டு வசீகரத் தோற்றத்தால் ரசிகர்களை அறிமுகமான புதிதிலே கவர்ந்து இழுத்தவர் தான் நடிகை தமன்னா.

இவர் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக நட்சத்திர நடிகையாக பார்க்கப்பட்டு வந்தார். தொடர்ந்து அஜித், விஜய், தனுஷ் உள்ளிட்ட பல நட்சத்திரங்களுடன் ஜோடி போட்டு முன்னணி நடிகை என்ற இடத்தை தக்க வைத்துக் கொண்டார்.

இதனிடையே தமன்னாவுக்கு பாலிவுட் தொடர்ச்சியாக வாய்ப்புகள் கிடைக்க அங்கு சென்று தனது மார்க்கெட்டை பிடித்தார்.

மும்பை மகாராஷ்டிரா பகுதியை சொந்த ஊராக கொண்ட நடிகை தமன்னா ஹிந்தியில் பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து கிட்டத்தட்ட தற்போது வரை அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக அங்க பார்க்கப்பட்டு வருகிறார்.

மார்க்கெட் உச்சத்தில் நடிகை தமன்னா:

34 வயது ஆன போதிலும் தமன்னாவுக்கு இருக்கும் மார்க்கெட் இன்னும் சற்று கூட புரியவில்லை. தமிழில் 2006 ஆம் ஆண்டில் வெளிவந்த கேடி திரைப்படத்தின் மூலமாக தமன்னா அறிமுகமாகி இருந்தார்.

அதை தொடர்ந்து வியாபாரி, கல்லூரி, நேற்று இன்று நாளை, படிக்காதவன், கொஞ்சம் இஷ்டம் கொஞ்சம் கஷ்டம், பையா, சுறா , தில்லாலங்கடி, சிறுத்தை , கோ உள்ளிட்ட பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தமன்னா கடைசியாக சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஜோடியாக ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து மாபெரும் வெற்றியை குவித்தார்.

குறிப்பாக இந்த படத்தில் இடம் பெற்ற பாடல் மிகப்பெரிய அளவில் அவரை பிரபலம் ஆக்கியது. அதன் மூலம் அவருக்கு மார்க்கெட்டும் கூடியது. .

தொடர்ந்து வெப் தொடர்களிலும் அதிக கவனம் செலுத்தி நடித்து வருகிறார் தமன்னா. லஸ்ட் ஸ்டோரீஸ் தொடரில் நடித்த போது மிகவும் மோசமாக முகம் சுளிக்க வைக்க கூடிய அளவிற்கு படுக்கை காட்சிகளில் நடித்து எல்லோரது கவனத்தையும் ஈர்த்தார்.

இதில் அவருடன் சேர்ந்து நடித்த பிரபல பாலிவுட் சினிமாவின் இளம் ஹீரோவான விஜய் வர்மாவை அவர் காதலிக்க துவங்கினார்.

விஜய் வர்மாவுடன் காதல்:

இருவரும் டேட்டிங் செய்வதாக அவ்வப்போது செய்திகள் வெளியாகி இருந்தது. இருந்தாலும் இதை ரகசியமாக காத்து வந்த தமன்னா பின்னர் தாங்கள் இருவரும் காதலிப்பதை ஒரு கட்டத்தில் உறுதிப்படுத்தினார்.

இதையடுத்து இவர்கள் விரைவில் திருமணம் செய்ய போகிறார்கள் என எல்லாரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த சமயத்தில் திடீரென தமன்னா விஜய் வர்மாவை பிரேக்கப் செய்து விட்டதாக கடந்த இரண்டு நாட்களாக பாலிவுட்டில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

அதற்கான காரணம் தமன்னா தொடர்ந்து திரைப்படங்களில் படு கவர்ச்சியான உடைகளை அணிந்து படுமோசமான ரோல்களில் நடித்து வருவது தான் என கூறப்பட்டு வருகிறது.

இதனை காதலன் கண்டித்து கேட்டதாகவும் அதற்கு தமன்னா, ” நான் உன்னை காதலிக்கிறேன் அவ்வளவு தான். அதற்காக என் ஒட்டுமொத்த வாழ்க்கையும் உன்னுடைய கட்டுப்பாட்டில் தான் இருக்கவேணும் என நினைக்கக்கூடாது” என கூறினாராம்.

இதை புரிஞ்சுகிட்டவர் தான் என் கணவர்:

இந்நிலையில் தனக்கு எப்படிப்பட்ட கணவர் வேண்டும் என்பதை நடிகை தமன்னா முதன் முதலாக ரகசியம் உடைத்து வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

எனக்கென ஒரு உலகத்தை உருவாக்கி வைத்துள்ளேன். அதை புரிஞ்சுகிட்டவர் தான் எனக்கு கணவர்.. என்னுடைய மகிழ்ச்சியான இடம் அது என முதன் முறையாக தன்னுடைய காதலன் குறித்து மனம் திறந்துள்ளார் நடிகை தமன்னா.

காதலன் இருக்கும்போதே காதலன் எப்படி வேண்டும் என கூறுவதன் மூலம் தமன்னா விஜய் வர்மாவை பிரேக்கப் செய்துவிட்டது உறுதியாகியுள்ளது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version