10 வருஷம் என் புருஷன் இதுக்காக காத்துகிட்டு இருக்கார்.. VJ பாவனா சொன்னதை கேட்டீங்களா..?

நல்ல உயரம், ஒல்லி, பெல்லி தோற்றம் என ஹீரோயினுக்கு ஏற்ற அத்தனை அம்சமும் கொண்டு இருந்தாலும் திரைப்படங்களில் கவனத்தை செலுத்தாமல் ஆர் ஜே வாகா தனது பணியை தொடங்கியவர் தான் விஜே பாவனா.

ராஜ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பீச் கேர்ள்ஸ் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலம் ஆங்கராக அறிமுகமானார் பாவனா.

விஜே பாவனா:

அதை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமான தொகுப்பாளியாக பார்க்கப்பட்டு வந்தார்.

சூப்பர் சிங்கர் ஜூனியர், சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் ஒன், உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியிருக்கிறார்.

ஆரம்பத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து தான் இவர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மிகப்பெரிய அளவில் பிரபலமானார்.

அதன் பிறகு சிவகார்த்திகேயன் எட்ட முடியாத அளவுக்கு உச்சத்தை தொடுத்து இன்று நட்சத்திர ஹீரோ என்ற அந்தஸ்தை பிடித்து விட்டார்.

விஜய் டிவியில் இருந்து வெளியேறிய பாவனா:

இதனிடையே பிஜே பாவாவின் ஸ்டைலும் அவரது பேச்சும் ஓல்ட் ஆக தெரிந்ததால் தற்போதுள்ள வாலிப வட்டம் விரும்புவதற்கு ஏற்றது போல நிகழ்ச்சி கலகலப்பாக தொகுத்து வழங்க வேண்டும் என விஜே பாவனாவை நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியில் இருந்து நீக்கி விட்டார்கள் .

அதன் பின்னர் தான் பிரியங்கா அந்த இடத்தை ஆட்டிப் படைத்து வருகிறார். விஜய் டிவியில் இருந்து வெளியேறிய பாவனா கிரிக்கெட் வர்ணனையாளராக தனது தொகுப்பாளர் பணியை மாற்றிக் கொண்டார்.

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் சேனலில் ஐபிஎல், உலக கோப்பை டி20, நியூசிலாந்துக்கு எதிரான சமீபத்திய தொடர் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு நிகழ்ச்சிகளுக்கு அவர் வர்ணனையாளராக இருந்து வருகிறார்.

இதனிடையே சமீபத்தை பேட்டி ஒன்றில் ஏன் விஜய் டிவியில் இருந்து வெளியேறினீர்கள் என கேட்டதற்கு அவர்களின் ஸ்டைல் இப்போது மாறிவிட்டது.

அவர்கள் வேறு மாதிரியான ஆங்கரை எதிர்பார்க்கிறார்கள். அதனால் அது எனக்கு செட் ஆகாது எனக்கூறி அதிலிருந்து வெளிவந்து விட்டேன் என பாவனா வெளிப்படையாக தெரிவித்து இருந்தார் .

அதாவது கலகலப்பாக நிகழ்ச்சி தொகுத்து வழங்குபவர்களை விஜய் டிவி தேடி எடுத்ததாகவும் அவர் மறைமுகமாக தெரிவித்தார்.

சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது கணவருடன் திருமண வாழ்க்கை குறித்து பல விஷயங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

10 வருஷம் அதுக்கு காத்திட்டு இருக்கிறார்:

அதாவது கணவர் கிட்டத்தட்ட 10 வருடங்களாக என்னுடன் விடுமுறைக்கு ட்ரிப் அடிக்க மிகவும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்.

திருமண வாழ்க்கையில் அவரின் நண்பர்கள் அவருடன் வேலை செய்யும் நபர்களை பார்க்கப் போக வேண்டும் என்றால் அவரால் என்னை அழைத்துச் செல்ல முடியாது நான் அவ்வளவு பிஸியாக இருப்பேன்.

சில நேரங்களில் முன்னதாகவே வர முடியுமா என்று கேட்டு டைரியில் தேதியை நோட் பண்ணி வைத்துக் கொள்வார்.

அப்படியும் சில சமயங்களில் திடீரென எனக்கு வேலை வந்து விட்டால் அவர் கூப்பிடும் இடத்திற்கு என்னால் போக முடியாது.

என்னுடைய வருகைக்காக அவர் பல வேலைகளை ஒதுக்கி வைத்து இருப்பார். ஆனால் திடீரென எனக்கு. வந்துவிட்டால் என்னை அழைத்தால் என்னால் அதை தவிர்க்க முடியாது.

ஏனென்றால் நமக்கு வரும் வேலையே ஆடிக்கொரு முறை அமாவாசை கோருமுறை தான் வருகிறது. அதையும் விட்டுவிட்டால் என்ன செய்வது என்று அவருக்கு எடுத்து கூறி நான் வேலையில் கவனத்தை செலுத்த ஆரம்பித்துவிடுவேன்.

ஆனாலும் அவர் அதை புரிந்து கொண்டு என்னுடன் இயல்பாக நடந்து கொள்வார். அவருக்கு பொசசிவ் இருக்கும்.

ஆனால், ரொம்ப பொசசிவ் கிடையாது. காதல் வாழ்க்கைக்கு பொசசிவ் என்பது மிகவும் அவசியம் தான் என பாவனா தனது கணவருக்கும் தனக்கும் இடையேயான புரிதலை குறித்து வெளிப்படையாக பேசி இருக்கிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version