“என்னோட இந்த உறுப்பை நோண்டி அவங்க மேல தடவிடுவேன்..” மைனா நந்தினி பேச்சு.. முகம் சுழித்த ரசிகர்கள்..!

மைனா நந்தினி ஒரு மிகச்சிறந்த தொலைக்காட்சி ஆளுமையாக திகழ்கிறார். இவர் சரவணன் மீனாட்சி சீசன் 2, மைனா ரேவதியாகவும் சின்ன தம்பியில் ஆலபரை மைனாவாகவும் நடித்து கலக்கியவர்.

இதனை அடுத்து விஜய் டிவியில் நடக்கும் ரியாலிட்டி ஷோவான கிச்சன் சூப்பர் ஸ்டார் சீசன் மூன்றில் 2015-தில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற நபராக திகழ்கிறார். அத்தோடு இவர் பிக் பாஸ் சீசன் 6-ல் போட்டியாளராக பங்கு கொண்டு மூன்றாவது ரன்னர் ஆப் ஆனவர்.

மைனா நந்தினி..

தமிழ்நாட்டில் இருக்கும் மதுரையில் பிறந்து வளர்ந்த இவர் மதுரையில் இருக்கும் மீனாட்சி மெட்ரிகுலேஷன் பள்ளி மற்றும் அண்ணா நகரில் உள்ள அம்பிகா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளம் கலை வணிக நிர்வாக படிப்பை படித்திருக்கிறார்.

இவர் தனது பட்டப்படிப்பை முடித்த பிறகு தொலைக்காட்சியின் நாடகங்களில் நடிக்க முடிவு செய்தார். அந்த வகையில் டைம் கில்லர் என்ற தொடரில் நடிக்க தயாரானார்.

சின்னத்திரை மட்டுமல்லாமல் வெள்ளித் திரைகளும் ஜொலிக்க நினைத்த இவர் வெண்ணிலா கபடி குழு என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மத்தியில் நடிகையாக அறிமுகமான இதனை அடுத்து தான் சின்னத்திரைகளில் வரும் வாய்ப்பை தக்க முறையில் பயன்படுத்திக் கொண்டார்.

மேலும் இவர் கேடி பில்லா கில்லாடி ரங்கா, வெள்ளைக்கார துரை, ரோமியோ ஜூலியட் போன்ற படங்களில் சின்ன, சின்ன கதாபாத்திரங்களை செய்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியதோடு தனக்கென்று ஓர் நிரந்தர இடத்தையும் ரசிகர்களின் மத்தியில் பெற்றுக் கொண்டார்.

சின்னத்திரையை பொறுத்த வரை அமுதா ஒரு கேள்விக்குறி பாண்டியன் ஸ்டோர்ஸ், அரண்மனைக்கிளி, சின்னதம்பி போன்ற தொடர்களில் நடித்த இவர் 2022-ஆம் ஆண்டு நடிகர் கமலஹாசன் நடிப்பில் வெளி வந்த அதிரடி திரைப்படமான விக்ரம் படத்தில் நடித்திருக்கிறார்.

என்னோட உருப்ப நோண்டி..

சின்னத்திரை பெரிய திரை என்று இரண்டு திரைகளிலும் கலக்கி வரும் இவர் வெப் சீரியல்களையும் விட்டு வைக்கவில்லை. அந்த வகையில் தமன்னா, ஜிஎம் குமார் பசுபதி ஆகியோரோடு இணைந்து 2021-ஆம் ஆண்டு நவம்பர் ஸ்டோரி என்ற தொடரில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இதனை அடுத்து 2017-ல் தனது நீண்ட நாள் காதலனாக கார்த்திக்கை திருமணம் செய்து கொண்டார்.ஆனால் திருமணம் ஆன சில மாதங்களிலேயே இருவருக்கும் கருத்து வேற்றுமை ஏற்பட்டு பிரிந்து விட்டார்கள்.

இதனை அடுத்து இவரோடு தொலைக்காட்சிகளில் நடித்து வந்த நகைச்சுவை நடிகர் யோகேஸ்வரனை திருமணம் செய்து கொண்டார். இதனை அடுத்து இவர்களுக்கு குழந்தைகள் உள்ளது.

சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக் கூடிய இவர் அண்மையில் வெளியிட்டு இருக்கக் கூடிய விஷயமானது ரசிகர்களின் மத்தியில் முகச்சுழிப்பை ஏற்படுத்தி உள்ளது.

அவங்க மேல தடவுவேன்..

இதற்கு என்ன காரணம் என்று தெரிந்து கொள்ள வேண்டாமா?  நடிகை மைனா நந்தினி சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார். அதில் அவருடைய கணவரும் கலந்து கொண்டார். அவருடைய கணவரிடம் மைனா நந்தனிடம் உங்களுக்கு பிடிக்காத ஒரு விஷயம் என்ன என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு அவருடைய கணவர் பதில் அளிப்பதற்கு முன் மைனா நந்தனியே முந்திக்கொண்டு பதில் அளித்தார். அதாவது மூக்கை நோண்டி அவர் மீது அடிக்கடி தடவி விடுவேன். இதை நான் கியூட்டன் நினைத்துக் கொண்டிருக்கிறேன்.

அவருக்கு இது சுத்தமாக பிடிக்காது. ஆனாலும் தொடர்ந்து செய்து கொண்டே இருப்பேன். அது மட்டுமில்லாமல் என்னிடம் யாராவது வம்பு செய்தால் அந்த இடத்திலேயே என்னுடைய மூக்கை நோண்டி அவர்கள் மீது தடவி விடுவேன்.

இது காலம் காலமாக எனக்கு இருக்கும் பழக்கம் என பேசி இருக்கிறார் மைனா நந்தினி. இதனை கேட்டு ரசிகர்கள் முகம் சுழித்து வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version