“நாங்க கூட புதுசுன்னு நெனச்சிட்டோம்..” – மைனா நந்தினி-யை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்..!

காதல் என்று சொன்னால் அந்த எதிர்பார்ப்புகளே இல்லாமல் இருப்பதுதான் காதல் என்கிறார் நடிகை மைனா நந்தினி. அதனை தற்போது அவரும் அவரது கணவர் யோகேஸ்வரன் நிகழ்காலத்தில் நிரூபித்து வருகிறார்கள்.

இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டாலும் கூட இப்போது காதல் ஜோடிகளாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர். இவர்களுடைய காதலுக்கு அடையாளமாக ஒரு ஆண் குழந்தையும் பிறந்து இருக்கின்றது.

தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடி வருகிறார் நடிகை மைனா நந்தினி. சீரியல் நடிகையான இவர் தற்போது சினிமாக்களிலும் கொண்டிருக்கிறார் சரவணன் மீனாட்சி சீரியலில் மைனா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் சீரியல் ரசிகர்கள் மத்தியில் மைனா நந்தினி என்று பிரபலமானார்.

இவர் தன்னுடைய அழகான முகவட்டு.. மற்றும் வாட்ட சாட்டமான தோற்றத்தாலும் ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்து கொண்டு இருக்கிறார். நடிகர் சிவகார்த்திகேயன் விமல் நடிப்பில் வெளியான கேடி பில்லா கில்லாடி ரங்கா என்ற திரைப்படத்தில் நடிகர் சூரிக்கு மனைவியாக நடித்து இருந்தார்.

இவரை தொடர்ந்து பல படங்களில் நடித்திருக்கிறார். சமீபத்தில், நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரை படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கர்ப்பமாக இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு இருக்கிறார். புடவை சகிதமாக தன்னுடைய கர்ப்பமான வயிற்றை தாங்கிப் பிடித்தபடி போஸ் கொடுத்திருக்கும் இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் நாங்க கூட புதுசுன்னு நெனசிட்டோம் என்று புலம்பி வருகின்றனர்.

காரணம் இது ஏற்கனவே இவர் கற்பமாக இருக்கும் போது எடுத்த புகைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam