நதியாவின் மற்றொரு வெர்ஷன் அன்னா பென் வாய்ப்புகள் வட்டமடிக்கும் – செய்யார் பாலு சொன்ன ரகசியங்கள்..

மலையாள திரை உலகில் சக்கை போடு போடும் நடிகைகளில் ஒருவராக திகழும் அன்னா பென் பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இவர் மலையாளத் திரையுலக திரைக்கதை எழுத்தாளர் பென்னி பி அவரின் மகளாவார்.

சிறுவயதில் சின்மயா வித்யாலயாவில் பள்ளி படிப்பை முடித்த இவர் கொச்சியில் உள்ள செயின்ட் தெரசா கல்லூரியில் பேஷன் மற்றும் ஆடை வடிவமைப்பில் பட்டப்படிப்பை முடித்த பட்டதாரியாக திகழ்கிறார்.

நடிகை அன்னா பென்..

இவர் மலையாள திரைப்படமான கும்பலங்கி நைட்ஸ் என்ற திரைப்படத்தில் 2019-ஆம் ஆண்டு நடித்திருந்தால் இந்த படத்தில் பேபி என்ற பெண் கதாபாத்திரத்தில் மிகச் சிறப்பான முறையில் நடித்ததை அடுத்து பாராட்டுக்கள் வெகுவாக குவிந்தது.

மேலும் இவரது நடிப்பை பாராட்டி இயக்குனர் சத்யன் அந்திக்காட் இவரைப் பற்றி அதிக அளவு விமர்சனம் செய்து பாராட்டுகளை வழங்கி இருக்கிறார். இதற்கு காரணம் முதல் படம் மட்டுமல்லாமல் இரண்டாவதாக நடித்த ஹெலன் என்ற திரைப்படம் மற்றும் கப்பேலா என்ற படமும் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது.

இவர் மலையாளம் மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு படங்களிலும் நடித்திருக்கிறார். தமிழ் படத்தை பொருத்த வரை 2024 ஆண்டு வெளிவந்த அடமண்ட் கேர்ள் என்ற திரைப்படத்தில் மீனா என்ற கதாபாத்திரத்தை செய்திருக்கிறார்.

இதனை அடுத்து தற்போது இவர் கொட்டுக்காளி என்ற திரைப்படத்தில் தனது அசாத்திய நடிப்புத்திறனை வெளிப்படுத்தியதை அடுத்து செய்யாறு பாலு இவரை பற்றி சில விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.

நதியாவின் மற்றொரு வெர்ஷன் அன்னா பென்..

அந்த வகையில் கொட்டு காளி படத்தில் சூரியோடு அசுரத்தனமாக இவரது நடிப்பு இருந்ததை பார்த்து வியந்து போனதாகவும் இவரை அந்த நடிப்பில் பார்த்த போது நதியா தான் நினைவில் வந்தார் என்றும் நதியாவின் மற்றொரு வர்ஷனாக அன்னா பென்னை சொல்லலாம் என்றும் புகழ்ந்து தள்ளினார்.

அதுமட்டுமல்லாமல் இவரது அசாத்திய திறமையை பார்த்து இனி தொடர்ந்து தமிழில் இவருக்கு வாய்ப்புகள் அதிகளவு வந்து சேரும் என்று சொன்னதோடு மட்டுமல்லாமல் மிகச் சிறப்பான எதிர்காலம் இவருக்கு உள்ளது என்ற தகவலை சொல்லி இருக்கிறார்.

இந்த திரைப்படத்தில் தென் மாவட்ட கிராமத்தைச் சேர்ந்த பெண்ணாக நடித்திருக்கும் இவர் கல்லூரியில் காதல் வயப்படுவதை அடுத்து அந்த காதலை சூனியம் வைத்து விட்டதாக கருதி தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

செய்யார் பாலு சொன்ன ரகசியங்கள்..

ஏற்கனவே கூழாங்கல் என்ற திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் பி எஸ் வினோத் ராஜ் தான் என்ற திரைப்படத்தையும் இயக்கி இருக்கிறார். இப்படிப்பட்ட திரைப்படங்களை தயாரித்த ஒரு கெத்து சிவகார்த்திகேயனுக்கு மட்டுமே உள்ளது என்ற ரகசியத்தையும் உடைத்தார்.

இது போன்ற படங்கள் மக்கள் மத்தியில் வரும் போது சமுதாயத்தில் கட்டாயமாக மாற்றங்கள் ஏற்படும். நடிகர் சூரியும் விடுதலை, கருடனுக்கு அடுத்து தற்போது இந்த படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துகிறார்.

எனினும் அவரது நடிப்பையே விழுங்க கூடிய அளவுக்கு அன்னா பென் நடிப்பு இருந்தது என்று சொல்லலாம்.

இதில் பெண்களின் மீது திணிக்கப்படும் தேவையில்லாத விஷயங்களை மிகச்சிறப்பாக எடுத்துக் காட்டி இருப்பதோடு மட்டுமல்லாமல் பெண்கள் மீது நடத்தப்படும் அடக்குமுறை அறியாமை போன்ற எதார்த்தமான விஷயங்களை வெளிப்படுத்தி இருக்கும் இந்த படத்தில் தனது மீனா கேரக்டரை வேறு எந்த நடிகையும் செய்திருந்தால் இப்படி இருக்குமா? என்று நாம் நினைத்துப் பார்க்க முடியாது.

அந்த அளவு அன்னா பென் சவால் மிகுந்த இந்த கதாபாத்திரத்தை மிகவும் சிறப்பான முறையில் கையாண்டு இருப்பதோடு பித்து பிடித்தது போல் படம் முழுவதும் பயணித்து அனைவரது பாராட்டுதல்களையும் அள்ளிவிட்டார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version