சமந்தா விவாகரத்துக்கு காரணமே சோபிதாதான்.. வெளியான சீக்ரெட்..

கடந்த இரண்டு நாட்களாகவே சோபிதா மற்றும் நாக சைதன்யா இருவரின் நிச்சயதார்த்தம் குறித்த விஷயங்கள்தான் அதிகமாக பேசப்பட்டு வருகிறது தெலுங்கில் பிரபல நடிகரான நாகார்ஜுனாவின் மகனான நாகசைதன்யா மூன்றாம் தலைமுறை நடிகராக இருந்து வருகிறார்.

நடிகை சமந்தா தெலுங்கில் பிரபலமான காலகட்டத்தில் சமந்தாவிற்கும் இவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இயக்குனர் ராஜமௌலி இயக்கிய நான் ஈ திரைப்படம் மூலமாக தெலுங்கு சினிமாவில் பிரபலமானவர் நடிகை சமந்தா.

அதற்கு பிறகு அவருக்கு தெலுங்கில் நிறைய வாய்ப்புகள் வந்து கொண்டிருந்தது. இந்த சமயத்தில் தான் நாக சைதன்யாவிற்கும் இவருக்கும் காதல் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

சமந்தா விவாகரத்து:

ஆனால் சில ஆண்டுகளே அவர்களது திருமண வாழ்க்கை நீடித்து வந்தது. அதற்குப் பிறகு கருத்து வேறுபாட்டால் இவர்கள் இருவரும் பிரிந்து விட்டனர். சமந்தா தொடர்ந்து சினிமாவில் நடிப்பது நாகார்ஜுனாவின் குடும்பத்திற்கு பிடிக்கவில்லை அவர்கள் நடிக்க வேண்டாம் என்று கூறியும் சமந்தா கேட்கவில்லை.

அதனால்தான் அவர் விவாகரத்து பெற்றார் என்று ஒரு பக்கம் கூறப்படுகிறது இன்னொரு பக்கம் அவருக்கு  இருந்த நோயின் காரணமாகதான் நாகசைதன்யா அவரை விவாகரத்து செய்தார் என்று பேச்சுக்கள் இருக்கின்றன.

ஆனால் இப்பொழுது வரை எதனால் இவர்கள் இருவரும் விவாகரத்து பெற்றனர் என்பது தெரியவே இல்லை. இந்த நிலையில் பிரிவுக்குப் பிறகு சமந்தா தனியாகவே வாழ்ந்து வருகிறார். மேலும் அவருக்கு இருந்த நோயின் காரணமாக தொடர்ந்து சிகிச்சைகளும் பெற்று வந்தார்.

காரணமே சோபிதாதான்:

இதனால் அவருக்கு பட வாய்ப்புகளும் கிடைக்காமல் போனது தொடர்ந்து படங்களில் நடிக்காமல் உடல் நலனில் கவனம் செலுத்தி வருகிறார் சமந்தா. இந்த நிலையில் நாக சைதன்யா பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்த நடிகை சோபிதாவுடன் நிச்சயதார்த்தம் செய்திருக்கிறார்.

இந்த விஷயம் வைரலாகி வந்த நிலையில் சமூக வலைதளங்களில் இது குறித்த பேச்சு ஒன்று எழுந்து வருகிறது. அதாவது நாகசைதன்யா வெளியிட்ட பழைய புகைப்படம் ஒன்றில் நாக சைதன்யாவிற்கு பின்னால் சோபிதா நிற்பது தெரிகிறது.

வெளியான சீக்ரெட்:

அதனை பதிவிட்ட ஒருவர் நாக சைதன்யாவிற்கும் சோபிதாவிற்கும் முன்பே உறவு இருந்தது அந்த உறவை தெரிந்த பிறகுதான் சமந்தா இவர்களை விட்டு விவாகரத்து செய்து தனியாக வந்திருக்கிறார் என்று கூறியிருக்கிறார். இந்த நிலையில் அந்த பதிவுதான் இப்பொழுது அதிக வைரலாகி வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version