நவகிரகங்கள் – எந்த கிழமையில் வழிபட்டால், என்ன பலன்கள் கிடைக்கும்..? – வாங்க தெரிஞ்சுக்கலாம்..!

மனிதனை ஆட்டிப் படைக்கக் கூடிய இந்த நவகிரகங்கள் இருப்பதை எந்தவித நாகரீக வளர்ச்சியும் இல்லாத அந்த காலத்திலேயே கணிக்கப்பட்டு கூறியுள்ளது நாம் பெருமை கொள்ளக்கூடிய ஒரு விஷயமாக கருதப்படுகிறது. நவகிரகங்கள் இருக்கும் நிலையை வைத்தே ஒரு மனிதன் எப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ போகிறான்? என்று துல்லியமாக கணித்து விடுபவர்களும் உண்டு.

அத்தகைய சக்திகள் கொண்டுள்ள இந்த நவகிரகங்களை எந்தெந்த கிழமையில் வழிபடுவது? எந்தெந்த நன்மைகளை கொடுக்கக் கூடியது? என்பதை தான் நாம் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

நவகிரக வழிபாடு

நவகிரக வழிபாடு என்பது எவ்வளவு முக்கியம் என்பதை பலரும் அறிவதில்லை. பிரச்சனைக்கு உரிய கிரகங்களை வழிபட்டால் பிரச்சனைக்கு விரைவான நிவாரணம் கண்டுவிடலாம். உங்கள் சுய ஜாதகத்தை ஆராயும் பொழுது எந்த கிரகங்களால் உங்களுக்கு இப்போது இருக்கும் பிரச்சனை நிகழ்ந்து கொண்டிருக்கிறது? என்பதை தெரிந்து கொண்டால், அந்த கிரகத்திற்கு உரிய முறையில் வழிபட்டால் உடனே நிவாரணம் காணலாம்.

அந்த வகையில் நவ கிரகத்தில் முதல் கிரகமாக இருக்கும் சூரியன் ரொம்பவே வலுவான ஒரு கிரகம் ஆகும். ஞாயிற்றுக் கிழமையில் சூரிய பகவானை வழிபட்டு வருபவர்களுக்கு வாழ்க்கையில் நல்ல ஆரோக்கியமும், மங்களமும் உண்டாகும்.

தினசரி சூரிய நமஸ்காரம் செய்து வருபவர்களுக்கு வாழ்க்கையில் தோல்வி என்பதே ஏற்படாது. சீரான சிந்தனையும், தெளிவான முடிவு எடுக்கும் திறன் வளர கூடிய அற்புத ஆற்றலைப் பெறுவார்கள்.

திங்கட்கிழமை

சந்திர பகவான்

மனதிற்கு அதிபதியாக இருக்கும் சந்திர பகவானை திங்கட்கிழமை தோறும் வழிபட்டு வருபவர்களுக்கு எல்லா புகழும் பெறக்கூடிய வாய்ப்புகள் உண்டு. கோவிலுக்கு சென்றால் திங்கட் கிழமையில் நவகிரகத்தில் சந்திரனுக்கு உரிய வஸ்திரத்தை சாற்றி, சந்திர பகவான் மந்திரங்களை உச்சரித்து அவரை வழிபட்டு வந்தால் மனதில் இருக்கும் சஞ்சலங்கள் நீங்கி மனம் ஒருமுகப்படும். அதுமட்டுமல்லாமல் பெயர், புகழ், பதவி போன்றவையும் அடையும் யோகம் பெறுவார்கள்.

செவ்வாய் கிழமை

செவ்வாய் பகவான்

செவ்வாய்க் கிழமையில் செவ்வாய் பகவானை வழிபட்டு வருபவர்களுக்கு தைரியம் அதிகரிக்கும். நம்மை சுற்றி இருக்கும் எத்தகைய பகைவர்களையும் எதிர்கொள்ளும் தைரியம் பிறக்க செவ்வாய் பகவானை, செவ்வாய்க் கிழமையில் சென்று வழிபடுவது சிறப்பு! திருமண தடைகள் அகலவும், சொந்த வீடு அமையவும் வழிபட வேண்டிய கிரகம் செவ்வாய் பகவான் ஆகும்.

புதன் கிழமை

புதன் பகவான்

புதன் கிழமையில் புத பகவானை வழிபட்டு வந்தால் நல்ல அறிவாற்றலும் பெருகும். கல்வி கற்கும் மாணவர்கள் கண்டிப்பாக புதன் கிழமையில், புதன் பகவானுக்கு பச்சை வஸ்திரம் சாற்றி வழிபட்டு வந்தால் படித்தது மறந்து போகாது. அது மட்டுமல்லாமல் அவர்களுக்கு படிக்கும் பொழுது கவனம் சிதறாமல் மனம் ஒருமுகப்படும்.

வியாழக்கிழமை

குரு பகவான்

வியாழன் கிழமையில் குரு பகவானை வழிபட்டு வருபவர்களுக்கு குழந்தை பாக்கியமும், செல்வ செழிப்பும் ஏற்படும். நீண்ட நாட்களாக குழந்தைப்பேறு இல்லாதவர்கள் தொடர்ந்து வியாழக்கிழமையில் குரு வழிபாடு செய்து வர நல்ல பலன் கிடைக்கும். அது மட்டுமல்லாமல் நல்ல செல்வச் செழிப்பிற்கு குரு அருள் தேவை, எனவே குரு பகவான் அருளைப் பெற்றால் கோடீஸ்வரன் ஆகலாம்.

வெள்ளிகிழமை

சுக்கிர பகவான்

வெள்ளிக்கிழமையில் சுக்கிர பகவானை வழிபட்டு வர எல்லா நன்மைகளும் கிடைக்கும். அதுமட்டுமல்லாமல் மனதிற்கு பிடித்தவர்களை மணந்து கொள்ளவும் சுக்கிர பகவானை வழிபட வேண்டும். நல்ல மனைவி அல்லது நல்ல கணவன், வீடு, மனை, சொத்துக்கள் போன்ற சுகபோக வாழ்க்கைக்கு தேவையான அத்தனை சம்பத்துக்களையும் பெறுவதற்கு சுக்கிர வழிபாடு செய்து வருவது நல்லது.

சனிக்கிழமை

சனி பகவான்

சனிக் கிழமைகளில் சனி பகவான் வழிபாடு செய்துவர ஆயுள் பலம் பெருகும். நீண்ட ஆயுளுக்கு சனிக்கிழமையில் சனிபகவான் வழிபாடு செய்வது சிறப்பான பலனை கொடுக்கும். நாம் செய்யும் பாவத்திற்கு ஏற்ப தண்டனையையும், புண்ணியத்திற்கு ஏற்ப அதிர்ஷ்டத்தையும் கொடுக்கக்கூடிய சனிபகவான் வழிபாடு சனிக்கிழமையில் தொடர்ந்து மேற்கொள்வது நலம் தரும்.

பயணத்தின் போது இதை செய்ய தவறாதீர்கள்..

ராகு மற்றும் கேது பகவான் நிழல் கிரகங்களாக செயல்படுவதால் அவர்களுக்கென ஒரு கிழமை கிடையாது. எந்த கிழமையிலும் இராகு கேது பகவான் வழிபட நல்ல பலன்கள் ஏற்படும். ராகுவை வணங்குபவர்களுக்கு பயணத்தின் பொழுது இனிமையான அனுபவத்தை கொடுக்கும். கேது பகவானை வழிபடுபவர்களுக்கு ஆன்மீகத்தின் மீது நாட்டமும், ஞானமும் பெருகும். அதுமட்டுமல்லாமல் மோட்சம் கிடைக்கவும் கேதுவை வழிபட வேண்டும்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …