படையப்பா படத்துல முதலில் ஹீரோயினா நடிச்சது யாரு தெரியுமா..? இதோ பாருங்க..

தமிழ் திரை உலகில் ஒரு மிகச்சிறந்த படங்களில் ஒன்றாக திகழும் படையப்பா திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருந்தார். மேலும் இதில் நீலாம்பரியாக நடித்த ரம்யா கிருஷ்ணனின் நடிப்பு திரை உலகம் இருக்கும் வரை பேசப்படும் அந்த அளவு சிறப்பாக இருந்தது.

இதையும் படிங்க: கணவரை பிரிந்து ஒரு வருஷம்.. ஆனா.. பந்து நடிகை இப்போ நாலு மாசம்.. அட கன்றாவிய…

இந்நிலையில் படையப்பா திரைப்படத்தில் நடிக்க வேண்டிய ஹீரோயினி இவர் தான். இவர் வேண்டாம் என்று கூறியதால் தான் அந்த படத்தில் இவர் நடித்தார் என்ற செய்தியானது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அது பற்றி விரிவாக இந்த பதிவில் பார்க்கலாம்.

படையப்பா திரைப்படம்..

1999-ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளி வந்த படையப்பா திரைப்படமானது ஒரு மாஸ் வெற்றியை திரை உலகிற்கு பெற்றுத்தந்தது. இந்த திரைப்படம் முழுக்க முழுக்க கமர்சியல் பேக்கேஜாக வெளி வந்து ரசிகர்களின் மத்தியில் பெருத்த வரவேற்பை தந்ததோடு மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் ஹிட் படமாக திகழ்ந்தது.

இந்தப் படத்தில் நடிகை சௌந்தர்யா மிகவும் அற்புதமாக சூப்பர் ஸ்டாரோடு இணைந்து நடித்திருப்பார். ஆனால் சௌந்தர்யாவை இந்த ரோலுக்கு பிக்ஸ் செய்வதற்கு முன்பே வேறொரு நடிகையை பிக்ஸ் செய்து இருந்த விஷயம் தான் தற்போது வைரலாகியுள்ளது.

யார் அந்த நடிகை..

இதனை அடுத்து அந்த கேரக்டர் ரோலை செய்யக்கூடிய நடிகை யார் என்பது சம்பந்தப்பட்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளி வந்து ட்ரெண்டிங் ஆகிவிட்டது.

ரஜினிகாந்த் நடித்த படங்களில் மிக சிறப்பான படமாக இருக்கும் படையப்பா திரைப்படத்தில் சௌந்தர்யா ஏற்றிருந்த அந்த ரோலை முதலில் நடிக்க இருந்தது நடிகை நக்மா. அவரைத் தான் பட குழு புக் முதலில் செய்திருந்தது.

நக்மா.. ரஜினி கெமிஸ்ட்ரி..

இதற்கு காரணம் ஏற்கனவே நக்மாவும், ரஜினியும் இணைந்து பாட்ஷா படத்தில் நடித்து அந்த படமும் மாபெரும் கிட்டை கொடுத்ததை அடுத்து அதே பார்முலாவை கையில் எடுத்த கே எஸ் ரவிக்குமார் நக்மாவை இந்த படத்தில் நடிக்க கமிட் செய்ததை அடுத்து சில நாட்கள் இந்த படத்திலும் நடித்திருக்கிறார்.

எனினும் என்ன காரணம் என்று இன்று வரை தெரியவில்லை. அவர் படத்தில் இருந்து விலகியதை அடுத்து அந்த கேரக்டர் ரோல் சௌந்தர்யாவுக்கு கொடுக்கப்பட்டது. இதை அடுத்து படையப்பா சூட்டிங் ஸ்பாட்டில் நக்மா ரஜினிகாந்த் கே எஸ் ரவிக்குமார் இருக்கின்ற போட்டோக்கள் வெளி வந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

அடுத்து ரசிகர்கள் அனைவரும் ஆச்சரியத்தோடு சௌந்தர்யாவின் கேரக்டர் ரோலை முதன் முதலில் நக்மா தான் செய்தாரா? என்று கேள்வி மேல் கேள்வி கேட்டிருக்கிறார்கள்.

அத்தோடு நக்மா அந்த கேரக்டரோட செய்திருந்தால் எப்படி இருக்கும் என்ற ரீதியில் அவர்களது கற்பனை குதிரையை தட்டி விட்டார்கள். தற்போது இந்த விஷயம் தான் இணையத்தில் வைரலாக பார்க்கப்படுவதோடு அதிகளவு பேசப்படுகின்ற பேசும் பொருளாக உள்ளது என்றால் அது மிகையாகாது.

இதையும் படிங்க: விவாகரத்தில் முடிந்த முதல் திருமணம்.. சரண்யா பொன்வண்ணன் வாழ்க்கை ரகசியம்..

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version