“நானும் ஆட்டத்துல இருக்கேன்..” – நடிகை நக்மா வெளியிட்ட ரொமாண்டிக் கவர்ச்சி போட்டோஸ்.!

90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை நக்மா. இவர் சமீபத்தில் தன்னுடைய சகோதரி ஜோதிகாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக தளத்தில் வைரலாக பரவியது.

90களில் எப்படி ரசிகர்களை நடிகை நக்மா தன்னுடைய கவர்ச்சியால் கட்டிப்போட்டாரோ… அதேபோல இவருடைய தங்கை ஜோதிகாவும் கவர்ச்சியால் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர்… ஒரு கட்டத்தில் இருவரும் தங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையின் காரணமாக சினிமா துறையை விட்டு விலகி அவரவர் பணியில் சுறுசுறுப்பாக ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் நடிகை ஜோதிகா குடும்பம் குழந்தைகள் என திருமண வாழ்க்கையில் ஐக்கியமாகி விட்டார். ஆனால், நடிகை நக்மா இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் அரசியலில் பயணித்து வருகிறார். காங்கிரஸ் கட்சியின் நட்சத்திர பேச்சாளராக பயணித்து வருகிறார் நடிகை நக்மா.

மேலும் அடிக்கடி அரசியல் சார்ந்த கருத்துக்களை கூறி பெரும் சர்ச்சையில் சிக்கி வருகிறார். அடுத்து வரும் பாராளுமன்ற உறுப்பினர் தேர்தலில் இவர் போட்டியிட அதிக வாய்ப்பு இருப்பதாக விவரமறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

தற்போது முழுநேர அரசியல்வாதியாக பயணித்து வரும் நடிகை நக்மாவுக்கு திருமணம் என்றாலே பயம் வந்து விடுகிறதாம். திருமணம் செய்துகொண்டு தன்னுடைய வாழ்க்கையை குறுகிய வட்டத்திற்குள் அடைத்துக்கொள்ள நடிகை நக்மா விரும்பவில்லை என்று கூறுகிறார்கள்.

ஆனால் பிரபல பாலிவுட் நடிகர் ஒருவர் மற்றும் நக்மா ஆகிய இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்ததாகவும், ஆனால் அவர் நக்மாவை ஏமாற்றி விட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் மனம் வெறுத்துப் போன நடிகை நக்மா இன்னமும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார் என்ற தகவலும் கோலிவுட் வட்டாரத்தில் அவ்வப்போது பேசப்படுவது உண்டு. ஆனால் இதுகுறித்த உண்மை தன்மை என்னவென்று தெரியாது.

சமீபகாலமாக நடிகைகள் பலரும் தங்களுடைய இளமைகால புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து வருகிறார்கள். அந்த வகையில் நடிகை நக்மா நானும் ஆட்டாதுல இருக்கேன்.. என.. 25 ஆண்டுகளுக்கு முன்பு எடுத்துக்கொண்ட ரொமாண்டிக் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டிருக்கிறார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …