“உங்கள் நகங்களை ஈசியாக பராமரிக்க உதவும் நகப் பராமரிப்பு டிப்ஸ்..!” – நம்பிக்கையோடு செய்து பாருங்கள் பலன் கட்டாயம் 100 % ..!!

 அழகு கலைகளில் நகப் பராமரிப்பு  என்பது மிகவும் முக்கியமான இடத்தை தற்போது பிடித்திருக்கிறது. மேலும் இந்த நகத்தை பராமரிக்கவும் அதை அழகுப்படுத்தவும் எண்ணற்ற வழிகளை  இன்று பயன்படுத்தி வருகிறார்கள்.

 இதன் மூலம் நகங்களுக்கு நன்மை ஏற்படுகிறதா, தீமை ஏற்படுகிறதா என்பது ஒரு பக்கம் இருந்தாலும் உங்கள் நகங்களை ஈசியாக பராமரிக்க கூடிய சில டிப்ஸ்களை எந்த கட்டுரையில் காணலாம்.

நகப் பராமரிப்புக்கான டிப்ஸ்

💐நீங்கள் உங்கள் நகங்களில் அதிக அளவு சானிடைசரங்கை பயன்படுத்தக் கூடாது அவ்வாறு பயன்படுத்துவதின் மூலம் உங்கள் நகங்கள் வலிமை இழக்க கூடிய வாய்ப்பு உள்ளது.எனவே சேனிடேஷர்களை பயன்படுத்தும் போது அதை அதிக அளவு நகக்கண்களில் படும்படி நீங்கள் பூசக்கூடாது.

💐எப்போதும் உங்கள் நகத்தை ஈரப்பதமாக வைத்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள். அவ்வாறு ஈரப்பதம் இல்லை வறட்சியாக இருக்கிறது என்றாரல் சிறிதளவு தேங்காய் எண்ணெயை,ஆலிவ் எண்ணெய் உங்கள் கால் நகங்கள் மற்றும் கை நகங்கள் இருக்கக்கூடிய பகுதியில் நன்றாக தேய்த்து விடுங்கள்.

 💐உங்கள் நகங்களில் நீங்கள் நெயில் பாலிஷ் அடித்திருந்தால் அதை நீண்ட நாட்கள் அப்படியே வைத்திருக்காதீர்கள். அடர்நிற நெயில் பாலிஷ்சுகளை பயன்படுத்தும் போது நீங்கள் ஒரு வாரத்திற்குள் நெயில் பாலிஷ் கிளீனர் கொண்டு அதை நீக்கி விடுவது தான் ஆரோக்கியமானது.

💐 நீண்ட நேரம் உங்கள் கைகளை நீருக்குள் வைத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் கட்டாயம் கையுறை அணிந்து கொள்வதை பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.

💐 நகங்கள் நமது ஆரோக்கியத்தை பிரதிபலிக்கக்கூடிய தன்மை இருப்பதால் சரிவிகித உணவை உணவில் எடுத்துக் கொள்வதின் மூலம் உங்கள் நகங்கள் பளிச்சென்று இருக்கும். நகங்களில் வெள்ளை நிற பூக்கள் தோன்றாது.

💐 மேலும் செயற்கை நகங்களை நீங்கள் பயன்படுத்துவதை சற்று குறைத்துக் கொள்ளுங்கள். இதன் மூலம் இயல்பாக இருக்கக்கூடிய உங்கள் இயற்கையான நகம் வலிமை இழக்க கூடிய வாய்ப்புகள் உள்ளது என்பதை புரிந்து செயல்படுங்கள்.

 💐இயற்கையாக சிவப்பழகை கொடுக்கக்கூடிய மருதாணியை இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை உங்கள் நகங்களில் வைத்துக் கொள்வதின் மூலம் நகச்சுத்து, நக சொத்தை போன்றவை ஏற்படாமல் இருக்கும்.

 மேற்கூறிய இந்த டிப்ஸை ஃபாலோ செய்து உங்கள் நகத்தை நீங்கள் பளிச்சென்று பராமரிக்கலாம்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …