மோசடி கும்பலிடம் ஒரு லட்சத்தை இழந்த நக்மா ! போலீசில் புகார்

பாலிவுட் நடிகையாக இருந்து, அரசியல்வாதியாக மாறிய நக்மா மொரார்ஜி, KYC சைபர் மோசடி செய்பவர்களிடம் கிட்டத்தட்ட ரூ. 1 லட்சத்தை இழந்திருக்கிறார்.

TOI இன் அறிக்கையின்படி, பிப்ரவரி 28 அன்று  ரூ. 99,998 இழந்ததாக நக்மா போலீசில் புகார் அளித்துள்ளார். இது தனிப்பட்ட எண்ணிலிருந்து வராததால் வங்கிகள் அனுப்பியதைப் போன்ற ஒரு குறுஞ்செய்தி தனக்கு வந்ததாக நினைத்திருக்கிறார்.

இதில் குறிப்பிட தக்க விஷயம் என்னவென்றால்,வங்கிக் கணக்கு மோசடி மூலம் சில நாட்களில் பல லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்ட 80 பேரில் நக்மாவும் ஒருவர். கிட்டத்தட்ட அனைத்து பாதிக்கப்பட்டவர்களும் ஒரு தனியார் வங்கியை சேர்ந்தவர்கள்.

சைபர் மோசடி குறித்த விவரங்களை  பகிர்ந்த நக்மா

KYC புதுப்பிப்பை முடிக்க அவருக்கு வழிகாட்டுவதாக அந்த நபர் நக்மாவிடம் கூறியதாக கூறப்படுகிறது. இருப்பினும், இணைப்பில் எந்த விவரங்களையும் பகிர்ந்து கொள்ளவில்லை என்று கூறுகிறார்.  மேலும் அவர் கூறுகையில் “மோசடி செய்பவர் எனது இணைய வங்கியில் உள்நுழைந்த பிறகு மற்றொருவருடைய  கணக்கிற்கு  ரூ. 1 லட்சத்தை மாற்றினார்.

எனக்கு பல OTPகள் வந்தன. அதில் அவர்கள் குறைந்தது 20 தடவையாவது முயற்சி செய்திருப்பார்கள். அதிர்ஷ்டவசமாக, நான் பெரிய தொகையை இழக்கவில்லை,” என்று அவர் மேலும் கூறியிருக்கிறார்.

மக்களை எச்சரித்த மும்பை சைபர் போலீஸ்

இதுபோன்ற செய்திகளுக்கு பலியாக வேண்டாம் என மும்பை சைபர் போலீசார் நகரில் உள்ள அனைவருக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.மும்பை காவல்துறையின் குற்றப்பிரிவின் கீழ் உள்ள சைபர் கிரைம் பிரிவின் படி, ஆன்லைன் மோசடிகளின் பொதுவாக வங்கிகள், ஆன்லைன் வர்த்தக தளங்களில் மோசடி செய்பவர்கள், வங்கி/தளம் அதிகாரிகளாகக் காட்டி, பாதிக்கப்பட்டவரை OTP, KYC புதுப்பிப்புகளைப் பகிர்ந்து கொள்ளச் செய்து account ஐ ஹேக் செய்கிறார்கள்.

“வங்கி விவரங்கள் அல்லது பின் எண்களைக் கேட்க எந்த வங்கிக்கும் , நிறுவனத்திற்கும் அதிகாரம் இல்லை என்பதை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும். துரதிர்ஷ்டவசமாக, படித்தவர்கள் ஆன்லைன் மோசடிகளுக்கு இரையாகி லட்சக்கணக்கான ரூபாய்களை இழக்கின்றனர்” என்று DCP சைபர் கிரைம், பால்சிங் ராஜ்புத் கூறியுள்ளார்.

நக்மா 1990 இல் சல்மான் கான் நடித்த ஆக்‌ஷன் படமான பாகி மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். கிங் அங்கிள், சுஹாக், யால்கார், லால் பாட்ஷா, சல் மேரே பாய், குன்வாரா, அப் தும்ஹரே ஹவாலே வதன் சாதியோ மற்றும் பல திரைப்படங்களிலும் அவர் நடித்துள்ளார்.

அவர் பல தெலுங்கு, தமிழ், போஜ்புரி, மலையாளம் மற்றும் கன்னட படங்களிலும் நடித்துள்ளார். 2004ல் காங்கிரசில் சேர்ந்த நக்மா ஆந்திராவில் பிரச்சாரம் செய்தார். 2014 மக்களவைத் தேர்தலில் மீரட்டில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்டார். 2015ல் அகில இந்திய மகிளா காங்கிரஸின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …