நடிகை நக்ஷத்ரா நாகேஷ் தமிழ் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பணி புரிந்து இருக்கக்கூடிய இவர் செட்டிநாட்டில் வித்யாஸ்ரமத்தில் படித்தவர். ஆரம்ப காலத்தில் வீடியோ ஜாக்கியாக தனது பணியை துவங்கிய இவர் ஹோட்டல் மேலாண்மையை படித்தவர்.
இவர் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சிகளில் சன் டிவியில் வெளி வந்த சன் சிங்கர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதோடு மட்டுமல்லாமல் சன் குடும்ப விருதுகளையும் தொகுத்து வழங்கிய இவர் தனக்கு என்று ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கிறார்.
மேலும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதோடு மட்டுமல்லாமல் குறும்படங்களிலும் நடித்திருக்க கூடிய இவர் என் இனிய பொன் நிலவே என்ற குறும்படத்தில் நடித்ததை அடுத்து பெருவாரியான ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
எனக்கு கல்யாணம் ஆகிடுச்சு..
தமிழ் திரைப்படங்களை பொருத்தவரை 2013-இல் வெளி வந்த சேட்டை, வாய் மூடி பேசவும் போன்ற திரைப்படங்களில் சின்ன, சின்ன கேரக்டர் ,ரோல்களை செய்ததை அடுத்து தமிழ் மொழியில் வெப் சீரியல்களிலும் நடித்து அசத்தியிருக்கிறார்.
இதனை அடுத்து தொலைக்காட்சி சீரியலான லக்ஷ்மி ஸ்டோர்ஸில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்த இவர் ஒரு பிரைம் டைம் தமிழ் தொலைக்காட்சி நாடகத்தில் பயமுறுத்தும் கேரக்டரை செய்திருக்கிறார்.
இதனை அடுத்து அண்மையில் பேட்டி ஒன்றில் பேசும் போது அவர் சில விஷயங்களை ஓபன் ஆக பேசியிருப்பது பலரையும் வியப்பில் தள்ளி இருக்கிறது. இந்த பேட்டியின் போது இவர் ஜெய்பீம் படத்தில் நடித்த நடிகை செங்கேணி இடம் சில கேள்விகளைக் கேட்க அவர் அதற்கு நேர்த்தியான முறையில் பதில் அளித்திருந்தார்.
அதுக்காக இதை அடிக்கக்கூடாதுன்னு இல்லை..
அவர் அப்படி என்ன கேள்விகளை கேட்டு இருப்பார் என்று நீங்கள் நினைக்கலாம். செங்கேணிடம் இவர் கேட்ட கேள்வியை பார்த்து அரங்கமே ஆரவாதத்தில் அதிர்ந்தது. திருமணமான அவரிடம் எப்படிப்பட்ட கேள்விகளை கேட்கலாமா? என்று நடிகை லிஜோ மோல் ஜோஸ் கேட்க திருமணம் ஆனால் என்ன இந்த கேள்வியை கேட்கக் கூடாதா? என்று கேட்டார்.
அது மட்டுமல்லாமல் தனக்கும் கல்யாணம் ஆகிவிட்டது. அதற்காக சைட் அடிப்பதெல்லாம் குற்றம் என்று சொல்லி விட முடியாது என்று ஓப்பனாக பேசியதோடு மட்டுமல்லாமல் அழகான ஆண்கள் செல்லும் போது திருமணம் ஆன பெண்கள் சிலரும் பார்த்து சைட் அடிப்பது உண்டு என்ற விஷயத்தை பகிரங்கமாக பகிர்ந்தார்.
கூச்சமின்றி கூறிய நக்ஷத்ரா நாகேஷ்..
இத்துடன் கூச்சமின்றி இப்படி பேசிய நட்சத்திர நாகேஷின் பேச்சைக் கேட்டு அறிந்து போன நடிகை தான் அப்படிப்பட்ட பெண் அல்ல என் கணவரை தவிர வேறு யாரையும் நான் பார்த்ததில்லை என்று நாசுக்காக சொல்லி தப்பித்துக் கொண்டார்.
இதை அடுத்து எவ்வளவு நல்ல பெண்ணை பார்த்ததே இல்லை என மாகாபாவும் தன்பாணியில் அதிரவிட்டதை அடுத்து அரங்கமே கர ஒலிகளால் அதிர்ந்தது. இதனை அடுத்து இந்த பேச்சானது தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
எனக்கு கல்யாணம் ஆயிடுச்சு அதுக்காக சைட் அடிக்க கூடாதுன்னு சொல்லுறது தப்பு என்று கூச்சமின்றி கூறிய நட்சத்திர நாகேஷின் பேச்சானது ரசிகர்களின் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.