படப்பிடிப்பில் உடை மாற்றும் போது ஏற்பட்ட கொடுமை.. நடிகை நக்ஷத்ரா நாகேஷ் கூறிய தகவல்..!

நடிகை நக்ஷத்ரா நாகேஷ் தமிழ் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பணியாற்றி வரக்கூடியவராக விளங்குகிறார். இவர் சென்னையில் உள்ள செட்டிநாடு வித்யாஷ்ரமத்தில் படித்திருக்கிறார்.

இவர் ஆரம்ப நாட்களில் வீடியோ ஜாக்கியாக பொழுது போக்கு துறையில் நுழைந்தார். இதற்கு முன் ஐ ஹெச் எம் ஹோட்டல் மேலாண்மை படித்த இவர் சன் டிவியில் சன் சிங்கர் போன்ற நிகழ்ச்சிகளில் தொகுத்து வழங்கியவர்.

நடிகை நக்ஷத்ரா நாகேஷ்..

சன் குடும்ப விருதுகள், தென்னிந்திய இன்டர்நேஷனல் போன்ற விழாக்களுக்கு விருது வழங்குபவராகவும் பணி புரிந்ததை அடுத்து வானவில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலம் தந்தி டிவியில் ரசிகர்களின் மத்தியில் நல்ல ரீச்சை அடைந்தார்.

இவர் தொகுப்பாளினியாக இருந்ததோடு மட்டுமல்லாமல் என் இனிய பொன் நிலாவே என்ற குறும்படத்தில் நடித்திருக்க கூடிய இவர் 2013 சேட்டை, 2014 இல் வாயை மூடி பேசவும் போன்ற திரைப்படங்களில் சின்ன, சின்ன வேடங்களில் நடித்து அனைவரையும் அசத்தினார்.

மேலும் திரைப்படங்கள் சீரியல்கள் என்று நின்று விடாமல் வெப் சீரியல்களிலும் களை கட்ட ஆரம்பித்த இவர் தனக்கு கிடைக்கும் வாய்ப்பினை சரியாக பயன்படுத்திக் கொண்டு ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார்.

சமூக வலைத்தளங்களிலும் படு பிஸியாக இருக்கக் கூடிய இவர் அண்மை பேட்டி ஒன்றில் திரையுலகின் மறுபக்கத்தை தோலுரித்துக் காட்டக் கூடிய வகையில் யாரும் எதிர்பாராத விஷயத்தை சொல்லி அனைவரையும் கடுமையான அதிர்ச்சிக்கு தள்ளியுள்ளார்.

படப்பிடிப்பில் உடைமாற்றும் போது..

அந்த பேட்டியில் இவர் ஒரு முறை ஷூட்டிங்க்காக வெளியே சென்று இருந்த போது உடை மாற்ற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதை அடுத்து ஒரு வேனில் உடை மாற்ற சென்றிருக்கிறார்.

அந்த வேனில் இருக்கும் கதவுகள் அனைத்தும் மூட முடியாத நிலையில் இருந்ததை அடுத்து எப்படி உடை மாற்றுவது என யோசித்த சமயத்தில் வேனுக்கு அருகிலேயே நான்கு ஆண்கள் வெளியே நின்று இருப்பதால் என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறியதாக சொல்லி இருக்கிறார்.

மேலும் இந்த சூழ்நிலையில் எப்படி உடை மாற்றுவது என்று தெரியாமல் திணறிய அவர் அவருடைய அம்மாவை அழைத்துக் கொண்டு அருகில் இருந்த வீட்டில் சென்று பூட்டி இருந்த கதவை தட்டி உடை மாற்றிக் கொள்ள அனுமதி கேட்டு இருக்கிறார்.

மேலும் இதனை அடுத்து அந்த வீட்டில் உடை மாற்றி வந்து அந்த ஷூட்டிங் இல் பங்கேற்ற போதும் அவருக்குள் இன்னும் அந்த நினைவுகள் உள்ளதாக சொல்லி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறார்.

நக்ஷத்ரா கூறிய தகவல்..

அது மட்டுமல்லாமல் சினிமாவில் எவ்வளவோ பணப்புழக்கம் இருக்கக்கூடிய நிலையில் நடிகைகள் உடை மாற்ற மற்றும் கழிப்பிட வசதிகள் சில நேரங்கள் அவுட்டோர் ஷூட்டிங்கில் கிடைப்பது குதிரைக் கொம்பாக உள்ளது.

அதை ஏன் சரி செய்யாமல் இருக்கிறார்கள் என்பது புரியவில்லை என்று சொல்லி இருப்பது ரசிகர்களை யோசிக்க வைத்துள்ளது.

மேலும் படப்பிடிப்பின் போது உடை மாற்றத்தில் ஏற்பட்ட கொடுமை குறித்து நடிகை நக்ஷத்ரா நாகேஷ் கூறிய விஷயமானது தற்போது இணையம் முழுவதும் பேசும் பொருளாகி உள்ளதோடு இதுபோன்ற சமயங்களில் பட குழுவினர் அவருக்கு உரிய வகையில் செயல்பட்டு இருந்தால் அனைத்து பெண்களுக்கும் அது உபயோகமாக இருந்திருக்கும் என்பது போன்ற எண்ணங்களை ஏற்படுத்தி உள்ளது.

இதனை அடுத்து இந்த விஷயத்தை கேள்விப்பட்ட ரசிகர்கள் அவர்கள் நண்பர்களுக்கும் இதனை ஷேர் செய்து வருவதால் இணையத்தில் அடிகளவு படிக்கப்படுகின்ற விஷயங்களில் ஒன்றாக மாறி உள்ளது என்று சொல்லலாம்.

மேலும் இந்த விஷயத்தை நீங்கள் அறிந்து கொள்ள கீழிருக்கும் லிங்கை கிளிக் செய்தால் போதுமானது.

 

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version