சமீபத்தில் நடந்த ஒரு சினிமா விழாவில் சிவப்பு மஞ்சள் பச்சை, ஜெய்பீம் உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை லிஜோ மோல் ஜோஸ் கலந்துக்கொண்டு இருக்கிறார். அவரிடம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் சீரியல் நடிகை நக்ஷத்ரா நாகேஷ் சில கேள்விகளை கேட்கிறார்.
அப்போது அழகான ஆண்களை சைட் அடித்ததே இல்லையா, என்ற கேள்வி வருகிறது. அதற்கு அவர் இல்லை என்று லிஜோ மோல் ஜோஸ் பதிலளிக்க, இப்படி எல்லோரையும் ஏமாற்றி விட்டீர்களே என்று கிண்டலாய் நக்ஷத்ரா நாகேஷ் கூறுகிறார்.
அதற்கு பிறகு, போற போக்குல யாராவது பசங்கள பார்த்து, அந்த பையன் அழகா இருக்கிறானே என்று தோன்றியது கூட இல்லையா என்று, அருகில் நிற்கும் மற்றொரு ஆண் தொகுப்பாளர் கேட்கிறார்.
அதற்கு சற்று தயங்கியபடி பதிலளிக்கும் லிஜோ மோல் ஜோஸ், எனக்கு ஆல்ரெடி கல்யாணம் ஆயிடுச்சுங்க என்று கூறி சமாளிக்கிறார்.
அப்போதும் அந்த விஷயத்தை விடாமல் கேள்வி கேட்கும் நக்ஷத்ரா நாகேஷ், எனக்கும் கூட தான் கல்யாணம் ஆயிடுச்சு, அதுக்காக அழகான ஆண்களை பார்த்தால், சைட் அடிக்க கூடாதுன்னு ஏதாவது இருக்கா, என்று தனது தரப்பு நியாயத்தை கூறுகிறார்.
அழகா யாராவது போனா, அவங்களை ரெண்டாவது முறை நாம பார்த்தா அதுதான் சைட் என்று சைட்டுக்கு புது விளக்கமும் நக்ஷத்ரா நாகேஷ் அடுத்து தருகிறார்.
அதாவது கல்யாணம் ஆயிடுச்சு, அதனால் ஆண்களை பார்த்து சைட் அடிக்கிறது பணணக்கூடாதுன்னு இல்லே, தாராளமா சைட் அடிக்கலாம் என்று தனது கருத்தை ஓபன் ஸ்டேட்மெண்டாக தந்திருக்கிறார் நக்ஷத்ரா நாகேஷ். இது தற்போது வைரலாகி வருகிறது.