தமிழ் திரை உலகில் ஆரம்ப நாட்களில் கவர்ச்சியாக நடித்து பின்பு ஹோம்லி ரோல்களில் குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய நடிகை தேவயானியின் சகோதரர் நகுல் பற்றி கூற வேண்டிய அவசியம் இல்லை. நாக்கு மூக்கு பாடலில் மூலம் பட்டி தொட்டி எங்கும் புகழ் பெற்றவர்.
நடிகர் நகுல் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளி வந்த பாய்ஸ் திரைப்படத்தில் அறிமுகமானார். இதனை அடுத்து பல பட வாய்ப்புகள் இவருக்கு கிடைத்தது. அந்த வகையில் மாஸ் என்கிற மாசிலாமணி, காதலில் விழுந்தேன், வல்லினம், கந்தக்கோட்டை போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.
இவர் தன்னோடு இணைந்து படித்த தோழி ஸ்ருதியை காதலித்து 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்களுக்கு அகிரா என்ற பெண் குழந்தையும், ஒரு ஆண் குழந்தையும் இருக்கிறார்கள்.
சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய நகுல் மற்றும் அவரது மனைவி அவருக்கு நடந்த பிரசவத்தை பற்றியும் வாட்டர் பாத் முறையில் பிள்ளையை பெற்றெடுத்ததைப் பற்றியும் விரிவாக வீடியோக்களையும், புகைப்படங்களையும் இணையத்தில் வெளியிட்டு மற்றவர்களின் சந்தேகத்தை தீர்த்து வைத்திருக்கிறார்கள்.
அதுமட்டுமல்லாமல் மற்றவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படக்கூடிய வகையில் குழந்தைக்கு பாலூட்டும் புகைப்படத்தை வெளியிட்டதை அடுத்து அந்த புகைப்படத்தை பார்த்து பலரும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்கள். எதையும் வெளிப்படையாக பேசும் குணம் இவர்கள் இருவருக்குமே உண்டு என கூறலாம்.
அந்த வகையில் நகுலின் மனைவி ஸ்ருதி அண்மை பேட்டி ஒன்றில் பாலியல் வன்முறை பற்றியும், உடலுறவு குறித்தும் வெளிப்படையாக பேசியிருக்கிறார். மேலும் பாலியல் வன்முறை என்பது சிறிய அளவில் இருந்தாலும், பெரிய அளவில் இருந்தாலும் கண்டிக்கத்தக்கது. அது தவறான ஒன்று என்ற கருத்தை பதிவு செய்திருக்கிறார்.
இந்த வன்முறையானது உடல் ரீதியான வன்முறை மட்டுமல்ல. மன ரீதியான பாதிப்புகளை பலருக்கும் ஏற்படுத்தக் கூடிய வகையில் இருக்கும் என்ற கருத்தை கூறியதோடு உடல் உறவு, செ** என்பது ஒன்றும் தவறான வார்த்தை கிடையாது.
அது அவரவர் வயதை பொறுத்து இருக்க வேண்டும். மேலும் குழந்தைகளிடமும் இது குறித்து நாம் பேசி புரிய வைக்க வேண்டும். அப்போது இது போன்ற அவலங்கள் நடக்காமல் இருக்கும் என பாலியல் கல்வியை ஆதரிப்பது போல கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.