அப்பா பற்றி அந்த மேட்டர் தெரிந்ததும் அம்மா பதறிட்டாங்க..! ராமராஜன் மகள் உடைத்த ரகசியம்..!

தமிழ் சினிமாவில் காதல் நட்சத்திரங்களாக வலம் வந்த ஜோடிகளில் நடிகை நளினியும் ராமராஜனும் முக்கியமானவர்கள் ஆவர். நடிகர் ராமராஜன் உதவி இயக்குனராக பணிபுரிந்து வந்த காலகட்டங்களிலேயே நளினியின் மீது காதல் கொண்டார்.

அதற்கு பிறகு நிறைய பிரச்சனைகளுக்கு நடுவில்தான் நளினியை திருமணம் செய்தார் ராமராஜன். ஏனெனில் நளினியின் வீட்டில் ராமராஜனின் காதலுக்கு எதிராக இருந்தனர். இருந்தாலும் நளினி அவர்கள் வீட்டை விட்டு ஓடி வந்து ராமராஜனை திருமணம் செய்து கொண்டார்.

அதற்கு பிறகும் ராமராஜனை நளினியின் வீட்டார் தேடிக் கொண்டிருந்தனர் பிறகு எம்.ஜி.ஆர்தான் இந்த விஷயத்தில் தலையிட்டு ராமராஜனுக்கு உதவியதாக அப்பொழுதே பேச்சு உண்டு. அப்படி எல்லாம் சேர்ந்த ஜோடிகள் பிறகு சில காலங்களிலேயே பிரிந்து விட்டனர்.

விரைவில் விவாகரத்து:

பல வருடங்கள் அவர்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தாலும் இரண்டு குழந்தைகள் பிறந்த பிறகு அவர்கள் இருவரும் பிரிந்துவிட்டனர். ஆனால் இருவரும் ஒப்புக்கொண்டுதான் அந்த பிரிவை ஏற்றுக் கொண்டனர். பிரிவிற்கு பிறகும் கூட அவர்களுக்கு இடையே உள்ள காதல் குறையவே இல்லை.

இது குறித்து நளினியின் மகளான அருணா ஒரு பேட்டியில் பேசியிருந்தார். அதில் அவர் கூறும் பொழுது அப்பாவுக்கு அம்மா மீது இருந்த பாசம் கொஞ்சம் கூட குறையவே இல்லை. அதேபோலத்தான் அம்மாவுக்கும், இருந்தாலும் அவர்கள் இருவரும் பிரிந்து விட்டனர்.

பிரிந்த பிறகு ஒரு முறை அப்பாவுக்கு பெரிய விபத்து ஒன்று நடந்தது. அந்த நேரத்தில் அம்மா படப்பிடிப்புக்கு போயிருந்தாங்க. இரவு நேரத்தில்தான் எங்களுக்கு போன் வந்தது. ஏதோ தவறான போன் கால் என்று நினைத்து அந்த போனை எனது தம்பி எடுக்கவில்லை.

நடந்த விபத்து:

பிறகு காலையில்தான் உறவினர்கள் நடந்த விஷயங்களை கூறினர். அதை கேட்டு எனது அம்மா மிகவும் பதறிப் போய்விட்டார் அப்பொழுது எனக்கு தேர்வு இருந்தது. அதை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு முதலில் போய் அப்பாவை பார்த்துவிட்டு வாருங்கள் என்று கூறி என்னையும் தம்பியையும் அனுப்பி வைத்தார் அம்மா.

அதற்கு பிறகு அப்பாவுக்கு உடல்நிலை சரியாகும் வரையில் தொடர்ந்து போன் செய்து அம்மா விசாரித்துக் கொண்டே இருப்பார். அப்பாவை பிரிகிற வரைக்கும் அம்மாதான் அப்பாவிற்கு மருந்து மாத்திரைகள் எல்லாம் சரியா கொடுத்துட்டு இருந்தாங்க.

அதனால்தான் பிரிந்த பிறகும் கூட மருத்துவமனையில் அப்பா இருந்த காலகட்டம் முழுவதும் அம்மா அது குறித்து விசாரித்துக் கொண்டே இருந்தாங்க. அப்பா சரியான பிறகு தான் அம்மாவுக்கு சந்தோஷமாக இருந்தது என்று கூறி இருக்கிறார் நளினியின் மகள் அருணா.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version