பிள்ளைகள் தான் இதுக்கு காரணமா..? காதலிக்கும் போதே பிரிவு குறித்து தெரிந்திருந்த.. அதிர்ச்சி தகவல்..!

தமிழ் திரை உலகில் நடிக்கும் நடிகர் மற்றும் நடிகைகள் காதலித்து திருமணம் செய்து கொள்வது ஒன்றும் புதிதான விஷயம் இல்லை. அந்த வகையில் 1980 -களில் தமிழ் திரைப்படங்களில் அசைக்க முடியாத நடிகையாக வலம் வந்த நடிகை நளினி பற்றி உங்களுக்கு மிக நன்றாக தெரியும்.

இவர் தமிழ் படங்கள் மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழிகள் பலவற்றில் நடித்திருக்கிறார். மலையாள படத்தில் மோகன்லால், மம்முட்டி போன்ற நடிகர்களோடு நடித்த இவர் 1987-ல் நடிகர் ராமராஜை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

நடிகை நளினி..

தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்த நடிகை நளினி அவரது தந்தை திரைப்பட நடன இயக்குனராகவும், தாய் நடன கலைஞராகவும் இருந்ததால் திரைத்துறையில் நுழைவது மிகவும் சுலபமாக இருந்தது. அது மட்டும் அல்லாமல் பல தமிழ் திரைப்படங்களில் நடித்து தனக்கு என்று ஓர் ரசிக்கப்பட்டாளத்தை பெற்றிருக்கிறார்.

திரைப்படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் போதே நடிகர் ராமராஜை காதலித்து வந்த இவர் கடுமையான முயற்சிக்குப் பிறகு ராமராஜை 1987-ல் திருமணம் செய்து கொண்டார்.

அப்படி அவர் நடிகர் ராமராஜனை திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு நடிகர் ராமராஜன் நாம் இருவரும் திருமணம் செய்து கொண்டால் நமக்கு ஆண், பெண் என இரண்டு குழந்தைகள் பிறந்தால் கண்டிப்பாக நம் வாழ்க்கையில் ஒன்றாக இருக்க முடியாது. பிரிந்து விடுவோம் என்று எச்சரித்து இருக்கிறார்.

இதற்கு காரணம் இவர் ஜாதகம் பொருத்தம் பார்த்த போது அவர்கள் சொல்லியதைத் தான் நடிகை நளினிடம் சொல்ல,  ஜாதகத்தில் நம்பிக்கை இல்லாத நடிகை நான் உங்களை திருமணம் செய்து கொள்வேன் என்று நம்பிக்கையோடு திருமணம் செய்து கொண்டார்.

காதலிக்கும் போதே பிரிவு குறித்து..

ஆனால் திருமணத்துக்குப் பிறகு மிகவும் சிறப்பான முறையில் ஒற்றுமையாக வாழ்ந்து வந்த இவர்களுக்கு அருண் என்ற மகனும் அருணா என்ற மகளும் இருக்கிறார்கள். 1988-ஆம் ஆண்டு இந்த குழந்தைகள் பிறந்ததை அடுத்து இவர்களுக்குள் கருத்து வேற்றுமைகள் வர ஆரம்பித்தது.

இதனைத் தொடர்ந்து இனி ஒன்றாக இருந்தால் சரியாக வராது என்ற எண்ணத்தில் இருவரும் சட்ட ரீதியாக விவாகரத்தை பெற்று பிரிந்து விட்டார்கள். தற்போது இருவரும் தனித்து பிரிந்து வாழ்ந்து வருவது அனைவருக்கும் நன்றாக தெரியும்.

வெளிவந்த அதிர்ச்சி தகவல்..

எனினும் இதுவரை இவர்கள் இருவருமே இரண்டாவது திருமணம் செய்து கொள்ளவில்லை மேலும் நடிகை நளினியிடம் அவர் கணவர் ராமராஜ் பற்றி கேட்கும் போது அவரை தூரத்தில் இருந்து இன்னும் காதலித்துக் கொண்டுதான் இருக்கிறேன் என்று கூறுவார்.

காதலிக்கும் போதே இருவரும் பிரிந்து விடுவோம் என்று ராமராஜன் எச்சரித்த போதும் அதை விடுத்து ராமராஜன் திருமணம் செய்து கொண்டு தற்போது பிரிந்து வாழும் இவர்களின் தடையை அறிந்து கொண்ட ரசிகர்கள் ஆச்சரியத்தில் உறைந்து இருக்கிறார்கள்.

அதுவும் பிள்ளைகள் பிறந்தால் இது கட்டாயம் நடக்கும் சொன்னதை அடுத்து இவர்களது பிரிவுக்கு காரணம் பிள்ளைகளா? என்று பேசி வரும் ரசிகர்கள் இந்த விஷயத்தை அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து வருகிறார்கள்.

இதனை அடுத்து இணையத்தில் வைரலாக இந்த விஷயம் பேசப்பட்டு வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறிவிட்டது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version