நடிகர் ராமராஜன் நடிகை நளினியை விவாகரத்து செய்ததற்கு உண்மையான காரணம் இதுதான்..!

சினிமாவில் நடிக்கும் சில நடிகர்கள், சில படங்களிலேயே ரசிகர்களுக்கு மிகவும் பிடித்து போய்விட காரணம் அவர்களது நடிப்பும், அழகும், திறமையும் மட்டுமல்ல. தனிப்பட்ட முறையில் அவர்களுடைய நல்ல குணாதிசயங்களும் தான்.

நடிகர் ராமராஜன்

அந்த வகையில் நடிகர் ராமராஜன் அன்று முதல் இன்று வரை, தமிழ் சினிமா ரசிகர்களின் இதயம் கவர்ந்த ஒரு நடிகராகவே இருந்து வருகிறார்.

கடந்த 1980 90களில் ராமராஜன் படங்கள் என்றாலே அது மிகப்பெரிய ஹிட் படங்களாக தான் இருந்தது. குறிப்பாக கங்கை அமரன் டைரக்சன், இளையராஜா இசை, ராமராஜன் ஹீரோ, கவுண்டமணி – செந்தில் காமெடி என்றால், அந்தப் படம் 100 நாட்கள் ஓடும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

அந்த அளவுக்கு ராமராஜன் படங்கள், வெள்ளிவிழா படங்களாக ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றன. ராமராஜன் படங்கள் திரையிட்ட தியேட்டர்களில் மக்கள் கூட்டம், திருவிழா கூட்டம் அலைமோதியது.

கரகாட்டக்காரன் தந்த வெற்றி

உதாரணமாக அவர் நடித்த கரகாட்டக்காரன் படத்துக்கு மக்கள் அளித்த அபரிமிதமான வரவேற்பு, இதுவரை வேறு எந்த கிராமியக் கதை படங்களுக்கும் அப்படி ஒரு வரவேற்பு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் ராமராஜன் புரட்சித் தலைவர் எம்ஜிஆரின் தீவிர ரசிகர். அதனால் தன்னுடைய படங்களின் மது குடிப்பது, சிகரெட் பிடிப்பது போன்ற காட்சிகளில் அன்றும் நடித்ததில்லை, இன்றும் நடித்ததில்லை.

500 கோடி கொடுத்தாலும் நடிக்க மாட்டேன்

சமீபத்தில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில், பார்ட்டி என்ற படத்தில் நடிக்க ராமராஜனை வெங்கட் பிரபு அழைத்துள்ளார். ஆனால் அந்தப் படத்தில் நடிக்க ராமராஜன் ஒத்துக் கொள்ளவில்லை.

இதுகுறித்து ராமராஜனிடம் கேட்டபோது, 500 கோடி ரூபாய் சம்பளம் என்றாலும் அப்படி ஒரு படத்தில், மது குடிப்பது, சிகரட் புகைப்பது போன்ற ஒரு கேரக்டரில் நான் நடிக்க மாட்டேன் என்று மறுத்திருக்கிறார் நடிகர் ராமராஜன்.

நளினியுடன் காதல் திருமணம்

கடந்த 1980 களில் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் நடிகை நளினி. அப்போது, உதவி இயக்குனராக பல படங்களில் பணிபுரிந்து வந்த ராமராஜன், நளினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு மகனும் மகளும் உள்ளனர்.

விவாகரத்து

இந்நிலையில் இருவரும் நட்சத்திர தம்பதிகளாக மனம் ஒத்து சந்தோஷமாக வாழ்ந்து வந்த நிலையில், ஒரு கட்டத்தில் இருவரும் விவாகரத்து செய்து, பிரிந்து விட்டனர்.

இதுகுறித்து, சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகை நளினி, நாங்கள் விவாகரத்து செய்ய வேண்டிய சூழ்நிலை வந்ததால், விவாகரத்து செய்து பிரிந்து விட்டோம். விவாகரத்து செய்தது நல்லதுதான். இல்லை என்றால் என் பிள்ளைகள் இந்தளவுக்கு படித்திருக்க மாட்டார்கள். அவர்களுக்கும் நடிப்பு ஆசை வந்திருக்கும்.

இதையும் படியுங்கள்: என்னது நான் ஆண்ட்டியா..? இப்போ சொல்லுங்க பாப்போம்.. டூ பீஸ் உடையில் பூனம் பாஜ்வா..!

குழந்தைகளின் எதிர்காலம் முக்கியம்

என் குழந்தைகளின் படிப்பு, எதிர்காலம் கருதி நான் இத்தகைய ஒரு முடிவை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இல்லையென்றால் என் குழந்தைகளின் படிப்பு, எதிர்காலம் கண்டிப்பாக பாதிக்கப்பட்டு இருக்கும். குழந்தைகளின் படிப்பு தான் மிகவும் முக்கியம் என்பது என்னுடைய எண்ணம்.

வாசல்படி இல்லாத வீடு…

அது மட்டும் இல்லாமல் ஒரு வீட்டுக்கு வாசல் படி மிகவும் முக்கியம் என்பதை போல, வாழ்க்கையில் ஒரு பெண்ணுக்கு கணவர் என்ற உறவு மிக முக்கியம்.

இதையும் படியுங்கள்: போடு தகிட தகிட..! இயக்குனருக்கு ஓகே சொன்ன சமந்தா..! ஆறு வருஷம் வெயிட்டிங்காம்..!

வாசல் படி இல்லாத வீடு, மொட்டையான வீடாகத்தான் காட்சி தரும். அந்த அளவுக்கு கணவன் மீதான முக்கியத்துவத்தை நான் அறிந்திருக்கிறேன் என்றாலும், என் குழந்தைகளுக்காக தான் இந்த முடிவு. வேறு வழியின்றி நான் அந்த விவாகரத்தை செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டது என்று நடிகை நளினி வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

நடிகர் ராமராஜனை, நடிகை நளினி விவாகரத்து செய்ததற்கு உண்மையான காரணம், குழந்தைகளின் எதிர்காலம் கருதி எடுக்கப்பட்ட முடிவாக, நளினி வெளிப்படையாக சொல்லி இருக்கிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version