என்கிட்ட இருக்க கெட்ட பழக்கம் இது.. விடுறதுக்கு முயற்சி பன்றேன்.. ஆனால்.. முடியல.. ரகசியம் உடைத்த நளினி..!

தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்த நடிகை நளினி 1980-களில் திரையுலகில் முன்னணி நடிகையாக ஜொலித்தவர். இவர் தமிழ் மட்டுமல்லாமல் மலையாள திரைப்படங்களில் மோகன்லால், மம்முட்டியோடு இணைந்து நடித்து அசத்தியிருக்கிறார்.

அது மட்டுமல்லாமல் தமிழில் சத்யராஜ், மோகன், ராமராஜ் போன்ற பல முன்னணி நடிகர்களோடு நடித்த இவருக்கு ஒரு சகோதரியும், ஆறு சகோதரர்களும் இருக்கிறார்கள்.

என்கிட்ட இருக்கிற கெட்ட பழக்கம்..

1980-களில் மிகச் சிறந்த முன்னணி நடிகையாக வலம் வந்த இவர் தென்னிந்திய மொழி படங்கள் பலவற்றில் நடித்திருக்கிறார். இதனை அடுத்து பல்வேறு விருதுகளையும் பெற்றிருக்கக் கூடிய நடிகை நளினி 1987-இல் நடிகர் ராமராஜரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இதனை அடுத்து இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேற்றுமையை அடுத்து விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்ந்து வந்த இவர்கள் மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்து நடித்து வருகிறார்கள்.

அது மட்டுமல்லாமல் நடிகை நளினி தற்போது பல்வேறு வகையான சீரியல்களில் நடித்து ரசிகர்களின் மனதில் மீண்டும் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்திருக்கிறார்.

விட முயற்சி செய்தும் முடியல..

அந்த வகையில் சன் டிவியில் பல தொடர்களில் நடித்து அசத்தி வரும் நடிகை நளினி சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசும் போது வெளிப்படையாக சில விஷயங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு ஆச்சரியம் அளித்திருக்கிறார்.

இவர் தன்னிடம் ஒரு கெட்ட பழக்கம் உள்ளது என்று தெரிவித்ததை கேட்டு தொகுப்பாளர் அதிர்ந்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் அந்த கெட்ட பழக்கம் என்ன என்றால் அது நடிகை நளினி அனைவரையும் எளிதாக நம்பி விடக் கூடிய குணம் கொண்டவர் என்பதைத் தான் கூறினார்.

மேலும் ஒருவரோடு பழகும் போது அவர் தனக்கு தீமை செய்வாரா? என்று ஒரு நிமிடம் கூட யோசித்து பார்க்க கூடாத தன்மை கொண்டவராக இருந்ததாக சொன்ன அவர் அப்படிப்பட்டவர்களால் தனக்கு நிறைய நேரங்களில் தீமை செய்திருப்பதை பகிர்ந்து இருக்கிறார்.

ரகசியம் உடைத்த நளினி..

இந்த குணத்தின் மூலம் பல்வேறு வகைகளில் பாதிக்கப்பட்ட நடிகை நளினி தன்னால் அந்த பழக்கத்தை இன்று வரை மாற்றிக் கொள்ள முடியவில்லை.

எனவே அந்த பழக்கத்தை விட வேண்டும் என்று இன்றும் முயற்சி செய்து வருவதாகவும் ஆனால் அந்த பழக்கத்தை தன்னால் விட முடியவில்லை என்பதை கூறியிருக்கிறார்.

அத்தோடு பார்ப்பவர் அனைவரையும் நம்புகிறேன். இதை மாற்ற முயற்சி செய்து கொண்டிருக்கிறேன் என நளினி பேசிய விஷயம் இணையத்தில் வைரலாகி இருப்பதோடு ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறிவிட்டது.

இதனை அறிந்து கொண்ட ரசிகர்கள் இந்த காலத்தில் இப்படி இருந்தால் நிச்சயமாக வேலைக்காகாது. எனவே கண்டிப்பாக அந்த பழக்கத்தை மாற்றிக் கொள்வது அவசியம் என்று பல்வேறு கருத்துக்களை நளினிக்கு சொல்லி இருக்கிறார்கள்.

மேலும் இந்த விஷயம் தற்போது இணையத்தில் வைரலாகி விட்டதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் நண்பர்களுக்கும் ஷேர் செய்யப்பட்டு அதிகளவு பேசப்படும் விஷயங்களில் ஒன்றாக மாறிவிட்டது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version