அட்லீ தனது குழந்தைக்கு, யாரோடஅப்பா பெயரை வைத்திருக்கிறார் தெரியுமா..? – ஆச்சரியப்பட்ட ரசிகர்கள்..!

தமிழ் சினிமாவில் வெற்றிப்பட இயக்குநர் வரிசையில் இருப்பவர் அட்லி.(Atlee)இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த அட்லி, ராஜா ராணி படத்தில், இயக்குநராக அறிமுகமானார். நயன்தாரா– ஆர்யா, நஸ்ரியா, ஜெய், சத்யராஜ் நடித்த இந்த படம், ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. தொடர்ந்து விஜய் நடிப்பில் தெறி, மெர்சல், பிகில் வெற்றிப் படங்களை தந்து, முன்னணி இயக்குநராக மாறிவிட்டார்.

Atlee

ஷங்கர் இயக்கிய நண்பன் படத்தில் விஜய் நடித்த போது, அந்த படத்தில் உதவி இயக்குநராக இருந்த அட்லி, விஜய்க்கு அறிமுகமானார். அப்போது, அவரது திறமையை புரிந்துகொண்ட விஜய், தெறி படத்தை இயக்க அட்லிக்கு வாய்ப்பளித்தார். அது வெற்றி பெற்றதை அடுத்து, மெர்சல் மற்றும் பிகில் படங்களை இயக்க வாய்ப்பளித்தார். அந்த படங்களும் ரசிகர்களின் பலத்த வரவேற்பை பெற்றது.

Atlee

இதைத்தொடர்ந்து தற்போது, பாலிவுட் ஸ்டார் ஷாருக்கான் நடிப்பில், ஜவான் என்ற படத்தை, அட்லி இயக்கி வருகிறார். வரும் செப்டம்டர் 7 ம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் நயன்தாரரா, ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிக்கிறார். யோகிபாபு, பிரியாமணி போன்றவர்களும் இந்த படத்தில் நடிக்கின்றனர். சமீபத்தில் வெளிவந்த ஷாருக்கான் படமான பதான், 1,200 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் சாதனை புரிந்தது. இந்த படத்தின் அசுர வெற்றியை பார்த்து, பாலிவுட் திரையுலகமே அதிர்ச்சியடைந்தது. இந்நிலையில், அடுத்து அட்லி இயக்கத்தில் வெளிவர உள்ள ஜவான், இன்னும் பலமடங்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.

Atlee

அட்லி, நடிகை பிரியாவை காதலித்து திருமணம் செய்துகொண்டவர். சமீபத்தில், அட்லிக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், அவரது குழந்தைக்கு மீர் என, அட்லி பெயர் வைத்துள்ளார். மீர் என்றால் தலைவன், கடல் என்று அர்த்தமாம்.

மீர் என அட்லி, தனது குழந்தைக்கு பெயர் வைத்திருக்கிறார் என ஷாருக்கான் தனது டிவீட்டில் பதிவு செய்திருக்கிறார். அத்துடன், தனது தந்தை பெயர் மீர் தாஜ் முகமது கான் எனவும் குறிப்பிட்டிருக்கிறார். அதை ஆமோதிக்கும் வகையில், தனது டிவீட் பக்கத்தில் பதிவிட்டுள்ள அட்லியின் மனைவி பிரியாவும், தங்களது ஆண் குழந்தைக்கு மீர் என பெயர் வைக்கப்பட்டதை உறுதி செய்துள்ளார்.

Shahrukhkhan

இயக்குநராக ஆசைப்படும் பலரும், தமிழில் புகழ் பெறுவது மட்டுமின்றி பாலிவுட்டில் பெரிய இயக்குநராக பெயரும் புகழும் பெற வேண்டும் என ஆசைப்படுகின்றனர்.

அந்த வகையில், பாலிவுட் ஸ்டாரான ஷாருக்கான், தனது படத்தை இயக்க வாய்ப்பளித்ததற்கான நன்றியை, விசுவாசத்தை வெளிப்படுத்தும் விதமான, தனது குழந்தைக்கு ஷாருக்கான் தந்தை பெயரில் இருந்த மீர் என்ற பெயரை மட்டும் எடுத்து, அட்லி தனது குழந்தைக்கு சூட்டி இருக்கிறார். அட்லியின் இந்த செயலை, ரசிகர்களும், அவரது நண்பர்களும், சினிமா உலகை சார்ந்தவர்களும் பாராட்டி வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …