பிக்பாஸ்ல பாத்தது.. கிளாமர் மகாராணி நமீதா இப்போ எப்படி இருக்காங்க பாருங்க..

தமிழ் சினிமா ரசிகர்களின் கனவுக்கன்னியாக இருந்தவர் நடிகை நமீதா. விஜயகாந்த் நடித்த எங்கள் அண்ணா என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இந்த படத்தில் விஜயகாந்த் ஜோடியாக அவர் நடித்ததால் ரசிகர்களின் கவனத்தை பெற்றார்.

நமீதா

நமீதா 17வது வயதிலியே மாடலிங் துறையில் புகுந்தவர். அப்போதே தனது கவர்ச்சி பாகங்களை காட்டி, கிளாமரில் கலக்கியவர். கடந்த 1998ம் ஆண்டில் மிஸ் சூரத் அழகி பட்டத்தை வென்றார். தொடர்ந்து நிறைய விளம்பர படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் தேடி வந்தன.

தொடர்ந்து டிவி சேனல்களில் விளம்பரங்களில் அதிகளவில் நமீதா இடம்பெற்றதால், தெலுங்கு பட தயாரிப்பாளர்கள், இயக்குனர்களின் கவனத்தை ஈர்த்தார். இதைத்தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பு நமீதாவுக்கு வந்தது.

எங்கள் அண்ணா

துவங்கத்தில் நிறைய தெலுங்கு படங்களில் நடித்த பிறகுதான் தமிழ் சினிமா பக்கம் கவனத்தை திருப்பினார். ஏனெனில் கோலிவுட் படங்களில் நடித்தால்தான் பரவலான ரசிகர்களின் கவனத்தை நடிகைகள் பெற முடியும். பிறமொழிகளிலும் நடிக்கிற வாய்ப்பு எளிதாக அமையும்.

தமிழில் எங்கள் அண்ணா படத்தில் விஜயகாந்துடன் நடித்த நமீதா, உயரமான நடிகை என்பதால் சத்யராஜ், சரத்குமார் போன்றவர்களுக்கு ஜோடியாக நடித்தார்.

ஏய், சாணக்யா, பம்பரக் கண்ணாலே, ஆணை, இங்கிலீஸ்காரன், கோவை பிரதர்ஸ், பச்சக்குதிர, தகப்பன் சாமி, நீ வேணுன்டா செல்லம், நீலகண்டா, வியாபாரி, நான் அவன் இல்லை, பில்லா, சண்ட, பாண்டி, பெருமாள், தீ, 1977, ஜகன் மோகினி உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.

தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழி படங்களில் நமீதா நிறைய படங்களில் நடித்தார். மேலும் விஜய் டிவியில் கடந்த 2017ம் ஆண்டில் நடந்த பிக்பாஸ் நிகழ்ச்சி முதல் சீசனில் கலந்துக்கொண்டார்.

அழகிய தமிழ் மகன்

நடிகர் விஜய் நடித்த அழகிய தமிழ் மகன், அஜீத்குமார் நடித்த பில்லா படங்களில் நடித்தார். ஒரு கட்டத்தில் சினிமா வாய்ப்புகள் குறைந்த நிலையில், அதிமுக அதைத்தொடர்ந்து பாஜக கட்சியில் நமீதா இருந்து வருகிறார்.

இதையும் படியுங்கள்: பட வாய்ப்புக்காக இப்படியா.. பிட்டு பட நடிகைகளை மிஞ்சும் நடிகை சாந்தினி தமிழரசன்.. விளாசும் ரசிகர்கள்..

இரட்டை பிள்ளைகள்

கடந்த 2017ம் ஆண்டில் வீரேந்திர சௌத்ரி என்பவரை திருமணம் செய்துக்கொண்ட நமீதா, இப்போது இரட்டை பிள்ளைகளுக்கு தாயாக இருந்த வருகிறார்.

கடந்த டிசம்பர் மாதம் சென்னையில் ஏற்பட்ட மழைவெள்ளத்தால் நமீதா வீட்டுக்குள் மழைவெள்ளம் புகுந்தது. இதையடுத்து அவரை மீட்புக்குழுவினர் அவரது இரட்டை குழந்தைகளுடன் பத்திரமாக மீட்டனர். இது சமூக வலைதளங்களில் வைரலானது.

ஹாய் மச்சான்ஸ்

தனது ரசிகர்களை ஹாய் மச்சான்ஸ் என்று அழைக்கும் நமீதா, இப்போது டிவி சேனல்களில் நடுவராக பங்கேற்று வருகிறார். பாஜக கூட்டங்களில் கலந்துக்கொண்டு பிரசாரம் செய்து வருகிறார்.

இதையும் படியுங்கள்: இத்த தண்டி உடம்புக்கு.. இத்துனூண்டு நீச்சல் உடையா..? ரசிகர்களை ஆட்டம் காண வைத்த பூர்ணா..!

கிளாமர் மகாராணி

இப்போதும் சமூக வலைதளங்களில் அவரது புகைப்படங்களை பார்க்கும் ரசிகர்கள், பிக்பாஸ்ல பாத்தது.. கிளாமர் மகாராணி நமீதா இப்போ எப்படி இருக்காங்க பாருங்க என்று அவரது தூக்கலான கிளாமரை பார்த்து ஜொள்ளு வடிக்கின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version