இதனால தான் என் உடம்பு குண்டாகிடுச்சு.. கூச்சமின்றி கூறிய நடிகை நமீதா..!

நடிகை நமீதா தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒரு கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர். அவர் நடித்த படங்களில் அவரது கிளாமரை ரசிப்பதற்கு என்றே தனியாக கூட்டம் என்பது குறிப்பிடதக்கது.

நமீதா

கடந்த 2004ஆம் ஆண்டில் வௌிவந்த எங்கள் அண்ணா என்ற படம் மூலம் நமீதா, தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஆனால் அதற்கு முன்பே சொந்தம், ஜெமினி, ஒக்க ராஜு ஒக்க ராணி என்ற 3 தெலுங்கு படங்களில் அவர் நடித்திருந்தார்.

அதன் பிறகுதான் எங்கள் அண்ணா படத்தில் கேப்டன் விஜயகாந்த் ஜோடியாக நமீதா நடித்திருந்தார். அந்த படத்தைத் தொடர்ந்து 2005 ஆம் ஆண்டில் ஏய் என்ற படத்திலும் அடுத்து சாணக்யா என்ற படத்திலும் சரத்குமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

அதைத் தொடர்ந்து பம்பரக் கண்ணாலே என்ற படத்தில் ஸ்ரீகாந்துக்கு ஜோடியாக நடித்த நமீதா, ஆணை படத்தில் அர்ஜுனனுக்கும், இங்கிலீஷ்காரன் மற்றும் கோவை பிரதர்ஸ் போன்ற படங்களில் சத்யராஜுக்கு ஜோடியாக நடித்தார்.

இதைத் தொடர்ந்து தமிழில் பட வாய்ப்புகளை தொடர்ந்து பெற்ற நமீதா பச்ச குதிரை, தகப்பன்சாமி, நீ வேணும்டா செல்லம், வியாபாரி, நான் அவன் இல்லை, அழகிய தமிழ் மகன், பில்லா, சண்ட, பாண்டி, பெருமாள், 1977, இந்திர விழா ஜெகன் மோகினி உள்ளிட்ட பல படங்களில் நமீதா நடித்தார்.

தமிழ் படங்களில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி படங்களிலும் நமீதா அதிகளவில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் – அஜீத் ஜோடியாக…

இதில் அழகிய தமிழ் மகன் படத்தில் விஜய்க்கு ஜோடியாகவும், பில்லா படத்தில் அஜித் குமார் ஜோடியாகவும் நமீதா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நமீதா கடந்த 2017ம் ஆண்டில் வீரேந்திர சவுத்ரி என்ற நடிகரை திருமணம் செய்து கொண்டார். தம்பதிக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். சினிமாவில் வாய்ப்புகள் குறைந்து போனதால், சில ஆண்டுகளாக நமீதா டிவி சேனல் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாஜக ஆதரவு பிரசாரம்

கடந்த 2017 ஆம் ஆண்டில் பிக் பாஸ் சீசன் 1ல் நடிகை நமீதா பங்கேற்றார். நமீதா தற்போது பாஜக ஆதரவாளராக இருந்து வருகிறார். தேர்தல் நேரங்களில் பாஜகவுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது

நடிகை நமீதா சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசுகையில், என்னுடைய உடம்பு ஏன் குண்டானது என்பது குறித்து பேசி இருக்கிறார்.

உடல் குண்டாகி விட்டது

அவர் கூறியதாவது, நான் சாப்பாட்டை அதிகம் விரும்புபவள். அதிகமாக பீட்சா பர்கர் போன்றவற்றை சாப்பிட்டு எனக்கு உடல் குண்டாகிவிட்டது. பீட்சா பர்கர் சாப்பிடும் பழக்கம் எனக்கு ஏன் அதிகமானது என்றால், எனக்கு இருந்த மன அழுத்தம் தான் காரணம்.

பீட்சா பர்கர் சாப்பிட்டதால்…

பீட்சா பர்கர் போன்ற உணவுகளை சாப்பிடும் போது என்னுடைய மன அழுத்தம் குறைவது போன்ற உணர்வு எனக்கு ஏற்படும். இதனாலேயே அவற்றை அதிகமாக சாப்பிட்டு உடல் எடை கூடி விட்டது, என பேசியிருக்கிறார் நடிகை நமீதா

பீட்சா பர்கரை தின்று தின்றுதான் என் உடம்பு குண்டாகிடுச்சு என்று கூச்சமின்றி கூறிய நடிகை நமீதாவை ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version